Thursday, January 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தொண்டையும், உணவுக்குழாயும்

நாம் உண்ணும் உணவை இரண்டு வகையாக பிரிக்கலாம்:

1. அங்கக உணவு (Organic food) – இவை புரதம், லிபிட் (கொழுப்பு), கார் போ-ஹை-டிரேட், விட்டமின்கள்

2. விலங்கு அல்லது தாவிரப்பொருள் சம்மந்தமில்லாத உணவுகள் – (Inorganic food) தண்ணீர், தாதுப்பொ ருள்கள், கால்சியம், பொட்டாசியம், க்ளோரின் கந்தகம், இரும்பு, ஜயோடி ன், செம்பு, மெக்னீசியம், மாங்கனீஸ், கோபால்ட், ஜீங் (Zinc) போன்றவை.

உணவின் சாரமே ஊட்டச்சத்து (Nutrients) நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை உணவிலிருந்து

எடுத்து, உடலின் செல்களுக்கு அனுப்பப்பட வேண்டும். செல்களுக்கு அனுப்பும் முன்பு உணவு குளூக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங் களாக மாற்றப்பட வேண்டும். செல்களை சேர்ந்தவுடன், ஊட்ட ச்சத்துகள், ஆக்ஸிஜனுடன் சேர் ந்து கார்பன்-டை-ஆக்ஸைட், தண்ணீராக உருவாகும். இந்த செயல்பாடுகள் பல கட்டங்களி ல் நடத்தப்படுகின்றன. பல வித என்ஸைம்களாலும் கட்டுப்படுத் தப்படுகின்றன. ஊட்டச் சத்தால் உருவான சக்தி அடினோஸி ன் ட்ரைபாஸ்பேட்டாக (adenosine tri – phosptiatia) ஆக அமையும். இந்த வேதிப் பொருள் வேலை செய்யும் சக்தியை தருகிறது. இந்த வளர் சிதைமாற்றம் (Metabolism) வயது, ஆண் பெண் பாகு பாடு, உடல் வாகு இவற்றை பொருத்து நடக்கும்.

நமக்கு தேவையான உணவுச் சத்துகள்

1. கார்போ-ஹைடிரேட் (ஸ்டார்ச், சர்க் கரைகள்) எனப்படும் மாவுச்சத்து – இது உடல் இயங்க, வேலை செய்ய, வாழ, தேவையான சக்தியை கொடுக் கிறது. இந்த வகை சத்து தான் உடலு க்கு அதிகமாக தேவைப்படும். சராசரி மனிதனுக்கு 160 – 240 கிராம் கார்போஹைட்ரேட், தினமும் தேவை. கார்போ ஹைடி ரேட் உள்ளவை, பின்வரும் அட்டவனையில் கொடுக் கப்பட்டுள்ளன.

இவற்றில் உள்ள சர்க்கரை களின் இனிப்புத்தன்மை

சர்க்கரை அளவு

a. ஃப்ரக்போஸ் 173

b. சுக்ரோஸ் 100

c. குளூகோஸ் 74

d. சார்பிடால் 60

e. மான்னிடால் 50

f. காலக்டோஸ் 32

g. மால்டோஸ் 32

h. லாக்டோஸ் 16

2. லிபிட் (கொழுப்பு)

கொழுப்புகள் ஒரு முனைப்படுத்தப்பட்ட சக்தி. அதாவது குறைந்த அளவே நிறைந்த சக்தியை கொடுக்கும். இயற்கை கொழுப்பு பொருட்களில் அதிகம் இருப்பது (98.99%) டிரைகி ளைசிரைட்ஸ் (Triglycerides) எல்லா கொழுப்புகளும் எண் ணைகளும் மூன்று வகை கொழுப்பு அமிலங்கள் உள்ள வை. பூரித கொழுப்பு ஒற் றை பூரிதமில்லா கொழுப்பு மற்றும் பல பூரிதமில்லா கொழுப்பு. பூரித கொழுப்பு (Saturated) நிறைந்த பொரு ட்களை அதிகம் உண்டால் கொலஸ்ட்ரால் அளவுகள் அதிகரிக்கும். ஒற்றை பூரிதமில் லா கொழுப்புகள் (Mono unsaturated) கொலஸ்ட்ராலை கு றைத்து நல்ல கொலஸ் ட்ராலை (HDL) அதிகரிக்கின்றன. பல பூரிதமில்லா கொழுப்பு கொலஸ்ட்ராலை (Poly unsaturated) அதிகரிப்பதில்லை.
கொழுப்பு வகை

1. தேங்காய் எண்ணை

2. ஆலிவ் எண்ணை

3. பாமாயில்

4. கடலை எண்ணை

5. சாப்ளவர் எண்ணை

6. நல்லெண்ணை

7. சூரிய காந்தி எண்ணை

மேல் சொன்னவை தவிர, வன ஸ்பதி போன்ற ‘ஹைட்ரஜன்’ கலந்தவை அதிக பூரித கொழுப்பு உள்ளவை. வனஸ்பதி தவிர்க்க வேண்டும். தவிர வட இந்தியாவில் அதிகம் பயன் படுத்தும் கடுகெண்ணையில் பல பூரிதிமில்லா கொழுப்பு அமிலம் 25% அரிசி உமி எண்ணையில் 35% வனஸ்பதியில் 6% நமக்கு தேவையான தினசரி கொழு ப்பின் அளவு 25-35 கிராம். இந்த அளவில் பாதியாவது தவிர எண்ணையாக இருந் தால் நலம். ஒரே தடவை யாக அதிக கொழுப்பு உண் டால் கொலஸ்ட்ரால் வேக மாக ஏறும். அதே அளவு கொ ழுப்பை சிறிது சிறிதாக பல வேளைகளில் உண்டா ல் கொலஸ்ட்ரால் ஏறுவதை தடுக்கலாம். வளர்சிதை மாற்ற த்தின் போது, கொழுப்புகள், அதே அளவு ள்ள ஹைடிரேட் டை களை விட இரண்டு மடங்கு உஷ்ண சக்தியை தருகிறது. இந்த சக்தி உடல் உஷ்ணமாகவும், தசை கள் இயக்கத்திற்கும் பயனாகிறது.

இருதய நோய் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொழுப்பை தவிர்க் கவே வேண்டும்.

கொலஸ்ட்ரால் ‘ஸ்டெரால்’ (ஸ் டெராய்ட்டு ஆல்கஹால் பிரிவை சேர்ந்தது) பிரிவின் உள்ள ஒரு அம்சம். செல்களில் உள்ள அதுவும் மூளை, நரம்பு செல்களில் உள்ள முக்கிய பொருள். கல்லீர லால் உண்டாக்கப்பட்டு, அங்கேயே சேமித்து வைக்கப்படு கிறது.

ஆரோக்கியமான மனிதனின் உடலில் கொலஸ்ட்ரால் 140-160 மி.மி. இருக்க வேண்டும். 200 மி.மி. கீழே இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். 200-240 கவனிக்க வேண்டிய அளவுகள். 240 க்கு மேல் இருந்தால் டாக்டரை அணுக  வும்.

புரதம்: புரோடின் எனும் கிரேக்க மொழி யிலிருந்து வந்த வார் த்தைக்கு அர்த்தம் ‘முக்கியத்துவத்தில் முதன்மை’ உடல் வளர்ச்சிக்கு புரதம் அத்தியாவசியமான தேவை. புரதச்சத்து குறைந்தால், நம் உடல், அதன் தசைகளை யே உண்ண ஆரம்பித்துவி டும். புரதங்கள் அமினோ அமிலங்களால் ஆனவை . ஒவ்வொரு கிலோ உடல் எடைக்கும். 0.8 கிராம் புர தம் தேவை. சில உணவுக ளில் உள்ள புரதங்கள். இவை தவிர உடலுக்கு தா துப்பொருள்கள், வைட்ட மின்களும் தேவைப் படுகின்றன. முக்கியமாக நார்ச்சத்து ஜீரணமண்டல செயல் களுக்கு உதவுகிறது.

– காந்திமதி

One Comment

Leave a Reply