என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலையா என்று சொல்ப
வர்களுக்கு கீழே உள்ள வரியினை படியுங்கள்
தேவையில்லாமல் “பேசுவதும்” தேவைப்படும்போது “பேசாமல் இருப்பதும்” ஆபத்து
அடிக்கடி நாம் இதை சட்ட மன்றம் பாராளுமன்றம் தொட ங்கி டீக்கடை பெஞ்ச் வரை நிறைய பார்க்கிறோம்
பேச வேண்டியவர்கள் வாயைத் திறந்து பேசுவதே இல்லை
தேவையில்லாதவர் வாயை
மூடி இருப்பதும் இல்லை
தேவையில்லாத இடத்தில்
தேவையில்லாத நேரத்தில்
தேவையில்லாத பேச்சால்
தேவையில்லாமல் உருவாகும்
வம்புகளும் கலவரங்களும் வளருகி ன்றன.
ஆனால் அதே நேரத்தில் தேவைப் படும் போது
பெற்றோர்களும்,பெரியோர்களும்
மூத்தவர்களும் அமைதியாக இருப்பதால்
ஏற்படும் விளைவுகள் அதை விட ஆபத்தாகின்றன.
– சக்திவேல் பாலசுப்பிரமணியன்