Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இடுப்புக்குமேலே பெண்ணாகவும், இடுப்புக்குக் கீழே பாம்பு ஆகவும் வாழும் அதிசய சிறுமி! – வியத்தகு காட்சி

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் மார்பு பகுதி க்குமேலே பெண்ணாகவும், கீழ் பகுதி பாம்பாகவும் தோற்றம ளிக்கும் விசித்திர சிறுமியை காண நாள்தோறும் ஆயிரக் கணக்கான மக்கள் வரிசையில் காத்திருக்கும் செய்தி ஆசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த் துள்ளது.

தற்போது 8 வயது சிறுமியாக இருக்கும் மய்லிஃபே என்ற அந் த சிறுமி பிறந்த போதே அவளது உடலின் கீழ் பகுதி பாம்பின் தோற்றத்துடனும், தலை முதல் மார்பு வரையிலான

பகுதி மனித தோற்றத்துடனும் இருந்ததாக அவளது பெற்றோர் கூறுகின்றனர்.

இதைப் போன்ற வினோதப் பிறவி கள் உலகில் தோன்றுவது மிக, மிக அரிது என குறிப்பிடும் உடல் கூறி யல் வல்லுனர்கள், இந்த முரண் பாடான உடல் அமைப்பை மருத்து வ குறியீட்டின்படி, ‘செர்பெண்டொ சிஸ் மெலியனார்கிஸ்’ அல்லது ‘ஜிங் ஜிங் நோய்’ என்று குறிப்பிடு கின்றனர்.

இயற்கை படைப்பின் இந்த முரண் பாட்டினை நிவர்த்திக்க இதுவரையில் எவ்வித சிகிச்சை முறையும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் தாய்லாந்து நாட்டின் மருத்துவ வல்லுனரான டாக்டர் பிங் லாவ் என்பவர் கூறியுள்ளார்.

பாம்புப் பெண்ணான மய் லி ஃபே-வை தரிசிக்கவும், அவளது உடலைதொட்டு கண்களில் ஒற்றி க்கொள்ளவும் இந்து, புத்த மதத்தி னர், உள்ளூர் மற்றும் வெளிநாடு களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நாள்தோறும் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நீண்ட வரிசையில் கால்கடுக்க காத்துக் கிடக்கின்றனர்.

அவர்கள் வழங்கும் காணிக்கை பணத்தின்மூலம் அந்த பெ ண்ணின் குடும்ப வருமானமும், வாழ்க்கை தர மும் குறுகிய காலத்துக்குள்ளாகவே அபரிமித மான வளர்ச்சியை அடைந்துள்ளது. இருப்பி னும், அவர்களின் நிம்மதியும், தனிமையும் தொ லைந்துப் போனதாக மய் லி ஃபே-வின் நெருங்கிய உறவினர் ஒருவர் தாய்லாந்து தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்துள் ளார்.

– மாலைமலர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: