Thursday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகிய இளம் மங்கையர்களே! உங்களை நீங்களே அழகுபடுத்திக்கொள்வது எப்ப‍டி?

பெண்களின் உதடுகளை கவிஞர்கள் பூவிதழ்களுக்கு ஒப்பி ட்டு சொல்லும் போ தே அதனுடைய மெ துமையும், அழகும் வெளிப்படுகி ன்றன. ஒருவரின் அழ கை பிரதிபலிப்பதில் அ வரின் சிரிப்பு முக்கி ய இடத்தைப் பெறு கின்றது. சிரிக்கும் போது உதடும், பற்களும் இணைந்து தனியழ கை தோற்று விக்கின்றது.

தன்னுடைய முகம் அழகாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களை வாட்டுவது யாவரும் அறிந்ததே. அவர்களும்

தங்களை அழகாக்கும் மேக்கப் செய்து கொண்டால் அழகா க தோற்றமளிப்பார்கள்.

உங்கள் முகம் அழகாக பிரகாசிக்க கன்னங்களை மட்டும் அழகு செய்தா ல் போதாது. அதன் முக்கிய உறுப்புக ளையும் அழகு படுத்தும் போதுதான் பூரண பலன் கிடைக்கின்றது.

உதடுகள்

சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டா லேபோதும், முகம் பளிச்சென இருக்கு ம். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண் டுபிடிக்கப்படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள் வார்கள். கோடை மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுக ளும் அழகாக இருக்கும்.

உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மை யை அடைகின்றன. இதனால் உதடுக ளில், வசலின்” தடவிக் கொள்ளலாம். வைட்டமின்கள் குறைபாட்டினா ல், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலா ம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதி களவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத் தில் உள்ள புண்கள் மற்றும் கொ ப்புளங்கள் மறைய, வைட்டமின், “E’ சத்துகள் நி றைந்த, “சன்ஸ் கிரீன்லோஷனை” தடவிவரலாம்

உதடுகளுக்கு சும்மா வெடிப்புக்கு வசலின் தடவினா போதாதா என் று கேட்கலாம். ஆனால் முகம் அழகாய் தெரிய உதடுகளின் வன ப்பும் ஒரு முக்கிய காரணியாகு ம். நாம் தினசரி முகத்தினை அல ங்கரிக்கும்போதே உதடுகளையும் அலங்கரிக்க பல வழிகளும் இரு க்கின்றன . .

உதடு சிவப்பாக தோற்றமளிக்க செய்ய வேண்டியவை:

அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடு களில் வெடிப்புகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காண ப்படும்.

இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:

பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தட வி வந்தால், கருமை மறைந்து சிவந்த நிறம் உண் டாகும்.

வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மை யாகும்.

லிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி?

சிலருக்கு தங்கள் நிறத் துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப் பது மற்றும் அதை போட்டு கொ ள்வது எப்படி என்று தெரிவ தில்லை.

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண் மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன் றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது

குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழை க்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும், உதடுகளி லும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம்பெறும். உதடுகளின் வற ட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

அழகுப்படுத்திக் கொள்வது எப் படி?

கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லை ட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப் ஸ்டிக் பயன்படுத்தலாம்.

மாநிறமாக இருப்பவர்கள் நச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண் டால், அழகாக இருக்கும்.

சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இரு க்கும்.

வெயில் காலங்களில் இரண்டு கலர் களை சேர்த்து லிப்ஸ் டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென் சிலை தேர்ந்தெடுக்க வேண்டு ம். லைனர் போட்ட பிற கு, லிப் பிரஷ் பயன்படு த்தி லிப்ஸ்டிக்கை போ ட்டுகொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

லிப் லைனர் பயன்படுத்தும் போ து, பெரிய உதடு உள்ளவர் கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரி யும்.

உதடுகள் பெரிதாக தெரிய வே ண்டுமெனில், முதலில் தேவை யான நிறத்தில் லிப்ஸ்டிக்போ ட்டு கொள்ள வேண்டும்.

பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக் கை உதட்டின் நடுவில் தடவினா ல், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும்.

பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப் ஸ்டிக் அழகாக இருக்கும். கலர் பிடிக்காதவ ர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன் படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்ப ற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங் களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

நாக்கால் உதட்டைத்தடவாதீர்கள்!

தரமில்லாத மற்றும் தவறான மு றையில் லிப்ஸ்டிக்கை பயன்படுத் தினால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டு தோல் உரியும். உதடுகள் காய்ந்திருக்கிறது என்று, அடிக்கடி எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தக் கூடாது. அவ்வாறு செய்தால் எச் சிலில் இருக்கும் பாக்டீரியாக்க ளால், உதட்டில் புண்கள் ஏற் படலாம். மேலும், உதட்டில் உள்ள ஈரப்பதமும் போய்விடும்.

காலையில் பல் விளக்குவதற்கு முன்பு டூத் பிரஷைக் கொண்டு, லே சாக உதடுகளை தடவி விட்டால் போ தும். உதட் டில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி வழவழப்பாக இருக் கும். அதேபோல் முகத்துக்கு ஸ்க்ரப் பிங் பண்ணும்போது கடைசியாக உதடுகளில் ஒரு முறை தேய்த்தால் போதும். நல் ல தரமான லிப்ஸ்டிக், லிப் கிளாஸ் உபயோகித்தால் உதடுக ள் நிறம் எப்போதும் மாறாமல் இரு க்கும்.

ஏற்கனவே கறுத்துப் போன உதடுகளுக்கு க்ளிசரின் (ப்ளெயி ன் க்ளிசரினைக் கேட்டு வாங்குங்க ள். லிப் க்ளாஸ் அல்ல) தினமும் தட வினால் கறுப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும். பன்னீர் ரோஜாவின் சா று அல்லது பன்னீரும் கூட நல்ல நி றம் கொடுக்கும்.

ஆனால் பிறவியிலேயே கருமை நிற த்தில் இருக்கும் உதடுகளுக்கு லிப்ஸ் டிக் மட்டும்தான் சரியான சாய்ஸ். அதிக வேசலின், லிப்க்ளாஸ் உப யோகம் கூட உதடுகளை கறுப்படை ய வைக்கும். இயற்கையான தயிர், பாலாடை கூட வேசலினுக்கு பதிலா உபயோகிக்கலாம்.

உதடுகளுக்கு என்று தனி கவனம் கொடுத்து மேக் கப் போடும் நாட்களில், எக்காரணம் கொண்டும் கண்ணிற்கு அதிக மேக்க ப்பை போட்டுவிடாதீர்க ள். அது மேக்கப்பை கெ டுத்துவிடும். உதடுகளுக் கு மேக்கப் போடுவது சுலபமாக செய்யக் கூடிய விஷயமாக இருக்க வேண்டும்.

மேக்கப் போடும்போது முகத்துக்கு போடும் மாய்ச்சுரைசிங் க்ரீம் மற்று ம் பவுண்டேஷனை உதடுகளுக்கும் லேசாக தடவி, பிறகு லிப்ஸ்டிக் போ ட்டால் நீண்ட நேரம் லிப்ஸ்டிக் கலையாமல் இருக்கும். லிப் ஷேப் பை மாற்றுகிறேனென்று, லிப் பென் சில் கொண்டு கோடு வரைவதற்கு முன்பு அது நீண்ட நேரம் தாக்கு பிடி க்குமா என்று தெரிந்து கொள்ளுங் கள். அப்படி நீண்ட நேரம் இல்லாத லிப் பென்சிலாக இருந்தால் உதடுக ளின் உள்ளே அல்லது வெளியே உள் ள லிப்ஸ்டிக் மட்டும் தெரிந்து முகத்தை அசிங்கமாக காட்டி விடும்.

உதடுகள் பெரிதாக உள் ளவர்கள் லிப் பென்சில் கொண்டு உதடுகளை சின்னதாக்கி காட்டும் போது, முடிந்த வரை கீழ்ப்பக்க உதட்டினையே குறைத்துக் காட்டுமாறு லைன் வரையுங்கள். மே ல் பக்கம் வேர்வை அதி கம் வரும் இடம். அதனால அளவை குறைத்துக் காட்ட மேல் பக்கத்தை காட்டிலும் கீழ் பக்கமே லைன் இருக்க வேண்டும். முதலில் லிப் பென்சில் கொண் டு ஷேப் வரைந்த பிறகு, லிப் ஸ்டிக் போடுங்கள். இப்போது லாங்க் ஸ்டே லிப்ஸ்டிக்குகள் பல நிறங்களிலும், தன்மையி லும் கிடைப்பதால் லிப்ஸ்டிக் போடும்முன்பு உதடுகளுக்கு பவு டர் அடிக்க தேவையில்லை.

லாங்க் ஸ்டே உபயோகிக்காத வர்கள் லிப்ஸ்டிக் நீண்ட நேரம் உதடுகளில் இருக்க ஒரு முறை பவுடர், பிறகு லிப்ஸ்டிக், பிறகு மேலே ஒரு பவுடர் கோட்டிங், பிறகு லிப்ஸ்டிக் என்று மூன்று கோட்டிங் வரை கொடுக்கலாம். இதுவும் நீண்ட நேரம் லிப் ஸ்டிக்கை அழியாமல் வைத்திருக்கும்.

லிப்ஸ்டிக் போட்ட பிறகு அதிகம் எண்ணெய் பதார்த்தங்களை சாப் பிடாமல் இருப்பதும் லிப்ஸ்டிக்கை கரையாமல் வைத்திருக்கும். லிப் ஸ்டிக் போட்டு 1 அல்லது 2 நிமிட ங்கள் கழித்து லிப்கிளாஸ் போட்டா ல் நன்றாக ஸ்மூத்தாக இருக் கும். சின்னதாக இருக்கும் உதடுகளை பெரிதாக காட்ட லிப் பென்சில் உப யோகித்து ஷேப் மாறுவதைக் காட் டிலும் ப்ளம்ப்பி லுக் தரும் லிப் ஸ் டிக்குகள் உபயோகிக்கலாம்.

இந்த வகை லிப் ஸ்டிக்குகள் உதடுகளை கொஞ்சம் பெரிதா க்கி காட்டும். லிப் லைனர் டார்க் கலரிலும், லிப் ஸ்டிக் அதை விட கொஞ்சம் லைட்டான கலரிலும் உபயோகிப்பது அழகா ன லுக்கைத் தரும். ஆனால் இதையே மாற்றி லிப் லைனர் லைட் கலரிலும், லிப் ஸ்டிக் டார்க் கலரிலும் போட்டால் நன்றாக இருக்காது. லிப்ஸ்டிக் போட்டதே தெரியக்கூடாது, ஆனால் அந்த லுக் மட்டும் வேணும்னு நினைக்கறவங்க கூடுமானவரை Matt Finish வகை லிப்ஸ்டிக்குகளை உபயோகிக்கலாம்.

பற்கள்

உதடு மட்டும் அழகா இருந்தால் நிச்சயம் போதாது. பற்களும் அழகாக, சுத்தமாக இருப்பது அவசியம். அழகான இதழ்கள் விரித்து நாம் சிரிக்கும் சிரிப்பை இன்னும் வசீகரமாக காட்ட பற்களின் பராமரிப்பு மிகவும் அவசிய ம். தினமும் பல்துலக்குவ தோடு Floss செய்வதும் அவசியம். பற்களை வருட த்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரிடம் சென்று பரிசோத னை செய்து கொள்ள வேண்டும். 30 வயதிற்கு பிறகு பற்களி ன் இடையே இடைவெளி தோன்ற ஆரம்பிக்கும். எப் போதும் பல் துலக்கிய பிற கு பற்களை இரண்டு விரல் களால் கீழ்ப்புறமாக (விசி ல் அடிப்பது போல கைவிர ல்களை வைத்துக்கொண் டு) ஈறுகளில் விரல்பட அ ழுத்தி விடுவது அவசியம். இதனால இடைவெளி ஏற் படாமல் ஓரளவு பாதுகாக்கலாம்.

அதோடு கால்ஷிய சத்து க்களை தேவையான அ ளவு எடுத்துக்கொள்வ து ம் பற்களை இடைவெளி யிலிருந்து காப்பாற்று ம்.

இடைவெளி ஏற்பட்டது ம், உடனே கால்சியம் மா த்திரகளை எடுத்துக் கொ ள்வதால் இதனை சரி செய்துவிட முடியாது. கால்சிய சத்து நமக்கு உடம்பில் ஒரே நாளில் ஏற்படும் விஷயமல்ல. அத ற்கு நீண்ட நாட்கள் ஆகும். எனவே வரும் முன் காப்பதே சிற ந்தது.

வாரம் ஒரு முறை எலுமிச்சை சாற் றில் உப்பு சேர்த்து பற்களை விளக்கி னால் பல் பளிச்சென்று ஆகும். அடிக் கடி ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் செய் து கொள்வதைக் காட்டிலும், காப்பி, டீ அதிகம் குடிக்காமல், அப்படியே குடித்தாலும் வாயை ஒவ்வொரு உணவுக்கு பின்னும் கொப்பளித்தா லே பற்கள் கறை பிடிக்காமல் பளிச் சென்று இருக்கும். பல் இடுக்கில் உணவுத்துகள்கள் மாட்டிக் கொண் டால் எக்காரணம் கொண்டும் டூத் பிக், சேப்டி பின் என்று உப யோகிக்காமல் முடிந்த வரை Floss உபயோகித்து நீக்க வேண்டும்.

இடைவெளி ஏற்படாமல் இருக்க நல்ல தரமான, மெலிதான Floss உபயோகிக்க வேண்டும். மேலும் ஒயிட்டனிங் ட்ரீட்மெண்ட் அடிக்க டி செய்வதால் பல் கூச்சம் ஏற்படு ம். எனவேதான் அதனை அடிக்கடி செய்து கொள்ளக்கூடாது. டூத் பிர ஷ் 3 மாதத்துக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

ஈறுகளில் ரத்தம் வடிவது, வாய் துர்நாற்றம் போன்றவற்றி ற்கும் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. பல சமயங்களில் வாய் துர்நாற்றத்திற்கு வயிற்றில் ஏற்படு ம் அல்சரும் கூட காரணமாக இருக்கும். ரூட் கேனால் ட்ரீட்மெ ண்ட் அல்லது புதிதாக பல் பொரு த்தும்போதோ முடிந்த வரை பல் கேப்பை (cap) நமது மற்ற பல்லின் நிறத்திற்கு சரியாக பொருந்துமா று தேர்ந்தெடுத்து அதனையே பொ றுத்த வேண்டுமென்று பல் மருத்து வரிடம் கேட்டுக் கொள்ளலாம்.

சில்வர், கோல்ட் என்று தனியாக தெரிவதைவிட இப்படி செராமிக்கில் பல் நிறத்துக்கே கேப் போட்டுக் கொண்டால் வித்தியாசம் தெரியாது. பற்களை அழகுப் படுத்தி க் கொள்வதைவிட மிகவும் முக்கிய மான ஒரு விஷயம் வாய்துர்நாற்றத் தை தடுப்பது.

இரவு உறங்கும் முன் பல் துலக்கும் பழக்கம் குழந்தைகளாக இருக்கும் போதே பழக்கிவிட வேண்டும். மவுத் வாஷ் உபயோகிப்பதைக் காட்டிலும் தினமும் இரு வேளை பிரஷ் கொண் டு பல் துலக்குவதே சிறந்தது.

பார்ட்டி (விசேஷங்களுக்கு) மேகப் முறை

பார்ட்டிக்கு மேக்கப் (விசேஷங்களுக்கு) செ ய்வதற்கு முன்பு சில அடி ப்படை டெக்னிக்கை அறி ந்து கொள்ளுங்கள்:

1) பார்ட்டி அன்றோ அல் லது முதல் நாளோ, எக் காரணம் கொண்டும் ப்ளீ ச்சிங் செய்யாதீர்கள். முகம் நிறம்மாறிப்போய்விடும். என்ன மேக்கப் போட்டாலும் எடுபடாது. 4 நாள் முன்பே செய்துக் கொள்ளுங்கள்.

2) பேஷியலும், வாக்சிங், திரெட்டிங்கும் அப்படியே . 2 நாள் முன்பு செய்தால் போதும். இதனால் சில கல்யாண பெண்கள் கல் யாண தினத்தன்று முகம் வேறுபட்டு தெரிவார்கள். அன்றே எல்லா ட்ரீட்மெண்டும் செய்தால் முகம் எப்போதும் போல் நார்மலாக இருக்காது.

3) விசேஷம் காலையிலா அல்லது இரவா என்பதிற்கேற்ப மேக்கப் செய் யுங்கள்.

4) மேக்கப்பின் ரகசியமே நீங்கள் மேக்கப் அதிகம் போட்டதாக தெரியக் கூடாது. முக்கியமாக விசேஷங்களி ல் வீடியோ,போட்டோவில் பளிச்செ ன்று தெரிய வேண்டும் என்று சிலர் மேக்கப்பை நிறைய போட்டுக் கொள் வார்கள். நேரில் பார்க்க நன்றாக இருக்காது.

5) முடிந்தால் முதல் நாளே தலை குளித்து விடுங்கள். சிலசமயம் அன்று எண்ணெய் வைத்து குளித்தால் முகம் பொலிவாக இருக்கா து. தலைக்கு எண்ணெய் தடவி இருந்தா ல் உங்கள் முகம் மேக்கப்போடு ஒத்துப் போகாது. அதற்கு பதில் தரமான ஹேர் ஜெல் அல்லது ஸ்ப்ரே பயன்படுத்துங்கள் (படியாதமுடி உள்ளவர்களுக்குமட்டும்)

6) பட்டுப் புடவை கட்டுவதாக இருந்தால் முதலில் முகத்திற்கு மஞ்சள் தேய்த்து குளித்து பிறகு மீண்டும் லேசாக சோப் தேய்த்து கழுவுங்கள். இப்படி செய்வதால் மேக்கப்பிற்கு பின், முகம் இயற்கையாக இருப்பதைப் போல் அழகாக இருக்கும். அதே சமயம் பளிச்சென்று ம் இருக்கும்.ஆனால் டிசை னர் சாரீஸ் கட்டும்போது மஞ்சள் தேவையில்லை. மாடர்னாக இரு க்காது.

7) கை வாக்ஸிங் செய்வ தால், மெஹந்தி போட்டால் அழகாக இருக்கும். டிசைன ர் சாரி என்றால் Arabic Design மெஹந்தி நன்றாக இருக்கும். சில வகை பொட்டு வீடி யோ,போட்டோவில் தெரியாது. அதிகம் டிசைன் இல்லாத அடர்ந்த(டார்க்) நிறம் கொண்ட பொட்டு வைத்துக் கொள்ளு ங்கள்.

மேக்கப் செய்யும் முறை:

1) முதலில் முகத்தில் எண்ணெ ய்ப் பசை இல்லாத மாய்ஸ்சுரை சிங் லோஷன் போட்டுக் கொள்ளு ங்கள். Nivea(Creme இல்லை லோ ஷன்),Jonson’s Baby lotion போ டலாம். நன்கு கழுத்து,முகம் முழு தும் தடவி(புருவம்,இமையில் படாமல்)உலர விடுங்கள்.

2) முகத்தில், கழுத்தில் பவுண்டேஷனை புள்ளியாக வைத்து முகம் முழுதும் நன்கு தடவுங்கள். எப்போதும் புருவம், இமை யில் படக் கூடாது.உதட்டிம் தடவலாம். இது போல் செய்தால் லிப்ஸ்டிக் அதிக நேரமும், அழகாகவும் தெரியும்.

3) சிறிது நேரம்( 10 நிமிடம் போல) முகத்தில் பவுண்டேஷன் பரவும் வரை பவுடர் பூசாமல் இருங்கள். பிறகு பிரஷ் அல்ல்து பஃப்பில் பவுடர் தடவுங்கள்.

4) கண்ணில் எப்போதும் ஐ ஷேடோ போட்டுவிட்டுதான் மஸ்காரா,ஐ லைன ர் போட வேண்டும். வயதானவர் கள் மஸ்காரா மட்டும் போட்டால் நன்றாக இருக்கும். சிலர் ஸ்டிக்கர் போல் வரும் ஒரு வித ஐலைனர் போடுவார்கள். அது செயற்கையாக இருக்கும். இயல்பான லுக் கொடுக்காது. ஆடை நிறத்துக்கு தகுந்த நிறத்தில் ஐ ஷேடோ உபயோ கிக்கவும். எந்த நிற ஐ ஷேடோ போட்டா லும் கண்ணின் மேல் பக்கம் புருவம் அருகே பிரவுன் நிறம் பயன்படுத்த வே ண்டும். ஒரு கலர் மட்டும் உபயோகிப்ப தைவிட இப்படி இரண்டு நிறம் உப யோகிப்பது நன்றாக இருக்கும். பிறகு ஐ லைனர்,மஸ்காரா போடவும்.

5) பிறகு கன்னம் அருகே பக்கவாட்டில் முக நிறத்தில் அல்லது டல் பிங்க் நிறத் தில் உள்ள ரூஜ் தடவுங்கள். டார்க் பிங்க் எல்லோருக்கும் நன் றாக இருக்காது. தனியாக கன்னம் இரண் டும் தெரியும். அதே பிரஷ் கொண்டு (த னியாக ரூஜ் எடுக்காமல்) மூக்கின் மீது மேலி ருந்து கீழாக தடவுங்கள்.

6) லிப் லைனரைக் கொண்டு உதடு ஓரங் களை வரைந்து லிப்ஸ்டிக் போடவும். லிப் Gloss ஒரு நிமிடம் கழித்து போடுங் கள்.

7) இரவு நேரமாக இருந்தால் முகத்தில் லேசாக Revlon illuminator ஐ பிரஷ்ஷா ல் தடவவும். முகம் பளிச்சென்று இருக்கு ம். காலை மேக்கப்பில் வேண்டாம். அதே போல் இரவு மேக் கப்பிற்கு மஞ்சளையும் தவிர்த்து விடலாம்.

8) மேக்கப்புடன் புன்னகையை யும் அணிந்து கொள்ளுங்கள். அதுவே அழகை அதிகமாக்கு ம்.

பயனளிக்கும் பொதுவான சில அழகுக் குறிப்புகள்

இங்கே கொடுக்க்கப் பெற்றுள் ள குறிப்புகள் யாவும் அனுபவ த்தில் அனைவருக்கும் நல்ல பலன்களைதந்துள்ளது. இவை எல்லாம் வெளிநாட்டில் கிடை க்கும் என்று சொல்ல முடியா து. இந்தியாவிலும் இலங்கை யிலும் பெற்றுக் கொள்ளலாம்

1) எப்போதும்போல் சோப் போட்டு குளித்த பிறகு கீழே தந்து ள்ள பொடிக் கலவையை முகம், உடம்பில் தேய்த்து குளித் தால் பரு, கரும்புள்ளி, ஸ்ட்ரெட்ச் மார்க் எதுவு ம் வராது.

இதற்கு தேவையானது

பன்னீர் ரோஜா – 200 கிராம் (காய வைத்தது)- நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அல்லது பூக்கடையிலிரு ந்து வாங்கி வந்து காய வைத்து கொ ள்ளவும்.(Light Rose not Dark Rose.)

வசம்பு – 100 கிராம்- தழும்பு, கரும்புள்ளிக்கு உகந்த மருந்து

கஸ்தூரி மஞ்சள் – 200 கிராம்

புனுகுப்பட்டை – 50 கிராம் (நாட்டு மருந்து கடையில் கிடைக் கும்)

கடலைப்பருப்பு -100 கிராம்

பாசிப்பருப்பு – 100 கிராம்

இவை அனைத்தையும் வெயிலில் 2-3 நாட்கள் காய வைத்து மாவு அரை த்துக் கொடுக்கும் இடத்தில் கொடுத் து சீயக்காய் அரைக்கும் மிஷினில் அரைத்துக் கொடுக்க சொல்லி வாங் கி வைத்துக் கொள்ளுங்கள்.

சின்னக் குழந்தைகளுக்கு பேபி சோப் போட்டு குளிக்க வைத் த பிறகு இந்த பொடியை உடம்பு முழுதும் தேய்த்து குளிப் பாட்டுவார்கள். சிறு வய திலிருந்து குளித்தால் உ டம்பில் முடி இருக்காது. ஏனென்றால் கஸ்தூரி மஞ்சள் முடியை போக்கு ம் தன்மையுள்ளது.

மேலும் முகத்திற்கு போ டும் மஞ்சள் போல் கலர் பிடிக்காது.

போட்டதே தெரியாது.

2) இதே பொடியை உபயோகப்படுத் தி வாரத்திற்கு ஒரு முறை முகத்தி ற்கு பேக்(Face Pack) போடலாம்.

தயிர் – 1 ஸ்பூன்
பொடி – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 10 துளி

எல்லாவற்றையும் கலந்து முக ம்,கழுத்து முழுவதும் தடவி காயும் வரை ஊறவைத்து கழுவவும்.

3) முகத்தில் பரு இருப்பவர்கள் மேலே சொன்ன பேக்குடன் 1 ஸ்பூன் முல்தானி மட்டி பொடி சேர்த் து பேக் போடவும். முல்தானி மட்டி (ஒருவகை களிமண்) முகத்தில் எண் ணெய் பசையை சுத்தமாக எடுத்து விடும். பரு வரவே வராது. எண்ணெ ய் பசை சருமம், பரு அதிகம் உள்ள வர்கள் வாரம் 1-2 முறையும், சாதா ரண சருமம் உள்ளவர்கள் மாதம் ஒரு முறையும், உலர்ந்த சருமம் உள் ளவர்கள் தயிர் அதிகம் கலந்து மாதம் ஒரு முறையும் உபயோகப்படு த்தவும். ஆண்களுக்கும் இந்த பேக் போடலாம்.

4) முக்கியமாக இரவு தூங்கப்போகும் போது முகம் கழுவி விட்டுதான் படுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்க ள். முகத்தில் எதுவும் வராது. பேபி லோஷன் மட்டும் போ ட்டுக் கொள்ளலாம்.

5) கண்கள் அருகே உள்ள சருமம் மிகவும் மென்மையா னது.நேரம் கிடைக்கும் போது இரு பஞ்சுத் துண்டில் பன்னீ ரை(Rose Water) ஊற்றி இரண் டு கண்ணிலும் வைத்துக் கொ ள்ளுங்கள்.

6) முகத்தை மாதம் ஒரு மு றை ஸ்க்ரப்பிங் செய்யவும். அப்போதுதான் இறந்த செல்க ள் நீங்கும். மேலே குறிப்பிட்ட பொடியையே தண்ணீரில் குழைத்து உபயோகப்படுத்தலாம். அல்லது

ஆப்பிரிகாட் ஸ்க்ரெப்பர் போல கடையில் கிடைக்கும் தரமான பொருட்களை உப யோகப்படுத்தவும்.

7) கைகள் மிருதுவாக இருக்க, தூங்கும் முன்பு சமையல் உப்பை(Table Salt) ஐ- 2 ஸ்பூன் ஈரமான கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்.பிறகு கையை கழுவி துடை த்து ஆலிவ் ஆயில் தடவி விடவும்.

நாம் அழகாக இருக்கிறோம் என்ற எண்ணத்தோடு கண் ணாடியை பாருங்கள். அந்த எண்ணமே உங்களை அழகாக காட்டும். பிறருடன் உங்களை ஒப்பிட்டாதீர்கள். அவரவர் வாழும் வாழ்க்கை அவரவர் க்கு. இது Miss.Universe சுஷ்மிதா சென் சொன்னது.

கல்யாணம் ஆகிவிட்டால் போதும்.இனி எப்பிடி இருந் தால் என்ன என்று நினைக் காதீர்கள். கல்யாணம் ஆகும் வரை அழகாக இருந்த நாம் கணவருக்காக இன்னும் அழ காக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

பெண் பார்க்க வரும் போது அழ காக உடுத்தும் நாம் கல் யாணம் ஆகிய பிறகு அதை மறந்து விடக்கூடாது. பிறகு நீங்க கல்யாணம் ஆனப்ப இருந்த மாதிரி இப்ப இல்லைன்னு குறை கூற கூடாது. வெளியில் என்னதான் நாம் நன்றாக இ ருந்தாலும், யார் நம்மை ரசிக்க வேண்டு மோ அவருக்காக டிரஸ் செய்து கொள்ளு ங்கள். வீட்டில் எப்போதும் பிரெஷ்ஷாக இருங்கள். வெளியில் செல்லும் போது லைட்டாக மேக்கப் செய்து கொள்ளுங்க ள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: