Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண்களின் மலட்டுத் தன்மையை நீக்கும் இயற்கை மூலிகைகள்

இளம் வயதில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுற்றித் திரி ந்தவர்கள் திருமணத்திற்கு ப் பின்னர் குழந்தை பெற் றுக்கொள்ள முடியாத நிலை வரும் அதிகம் சங்க டத்திற்கு உள்ளா வார்கள். என்ன செய்வது? எதை சா ப்பிட்டால் இந்த குறை தீரு ம் என்று குழம்பி கண்ட க ண்ட மருந்துகளை வாங்கி சாப்பிட்டு உடலையும் மன தையும் நோய்க்கு ஆளாக்கிவிடுவார்கள். ஆண்மை குறை பாடோ, மலட்டுத்தன்மையோ இந்த குறைபாடுகளை தீர்க்க இயற்கை மூலிகைகளிலேயே நிவாரணம் இருக்கிறது. இவ ற்றை உட்கொள்வதன் மூலம் எளி தில் நிவாரணம் கிடைக்கு

ம் என்கின்றனர் நிபுணர்கள். குறையிருப்பவர்கள் முயற்சி செய்து பாருங்களேன்.

ஆண்மைக்கு ரோஜா குல்கந்து

காதலின் சின்னம் ரோஜா மலர். இதிலிருந்து தயாரிக்கப்படும் “குல் கந்து” இதயத்திற்கு பலம் தரும் மருந்தாகவும், ஆண் மை பெருக்கியாகவும் செயல்படுவ தாக ஆயுர்வேத மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர். குல்கந்து உடலுக்கு வலிமை ஊட்டும். இதன் இதழ்களில் உள்ள எண் ணை ஆண்மை வலிமையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. வெள்ளைப் போக்கை கட்டுப்படுத்தகிறது.

தாது விருத்தி தரும் பூசணிக் காய்

பூசணிக்காயில் மருத்துவக் கு ணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மரு த்துவத்தில் லேகியமாக தயாரி க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்த லேகியத்தை தினசரி சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவ டையும் அதோடு தாது விருத்தி ஏற்படும். பூசணி க்காயின் விதைகள் ஆண்மை குறைபாட்டி னை நீக்கும். இந்த விதை களை சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியா கச் செய்து வைத்துக்கொ ண்டு ஒரு தேக்கரண்டிய ளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டா கும். தொடர்ந்து சாப்பி ட்டு வந்தால் தாது விருத்தியடையும்.

இனிமையான உறவுக்கு இலு ப்பை பூ

இலுப்பை மரத்திலிருந்து கி டைக்கும் பூவில் பல்வேறு மரு த்துவ குணங்கள் நிறைந்துள் ளன.மெலிந்த உடலுள்ளவர்க ள் இலுப்பை பூக்களை பசும்பா ல் விட்டு அரைத்து காய்ச்சிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர் ந்து பருகி வந்தால் நாற்பத்தெட்டு நாட்களுள் உடம்பு தேறும். ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கஷாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மைக் குறை பாடு குணம் அடையும்.

குழந்தை வரத்திற்கு ஆலம்பழம்

சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத் தன் மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத் தக்க உண்மையாகும். மரத் தில்கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலர வைக்க வேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்து பொடிசெய்து காற்றுப் புகா த பாத்திரத்தில் அந்த பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலை, மாலை இரண் டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந் த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்கவேண்டும். 48 நாட்கள் இந்த பொடி யை குடித்துவர மலடுநீங்கி குழந்தை பிறக்கும்.

— மருத்துவர் சார்லஸ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: