Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இனி, வாரம் ஒருநாள் தாவணியில் இளம் பெண்கள்

வேட்டி தினத்துக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த வரவேற் பு, வாழ்த்துகளைத் தொ டர்ந்து தாவணி தினம் கொண்டாட தீர்மானித் திருக்கிறது கோ-ஆப் டெக்ஸ். பொதுவா சுடி தார், சேலை, நைட்டி யைக்கூட 80வயசுவரை க்கும் போட முடியும். ஆனால், தாவணி டீன்-ஏஜ் டிரெஸ். அப்போ விட்டுட்டா, அப்புறம் எந்த வயசிலும் தாவணி போட முடியாது. இதை உணர்த்தும் வகையில் இனி வாரத்துக்கு ஒரு நாள் தாவணி அணிந்து வருவது குறித்து பள்ளி, கல்லூரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்ய ஆலோசி

த்து வருகிறதாம் கோ ஆப் டெக்ஸ்!

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவ ரையும் அணியச் செய்யும் விதமாகவும் கைத்தறி நெசவாள ர்களை ஊக்கப்படுத்தும் வகையி லும் வேட்டி தினம் அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குந ர் உ.சகாயம்.இதன்படி, ஜனவரி முதல் தேதியிலிருந்து 15-ம் தேதிக் குள் ஏதாவதொரு நாளை வேட்டி தினமாக அறிவித்து அன்றைய தினம் பணியாளர்கள் அனைவரை யும் வேட்டி அணிந்து வர அறிவுறு த்தும்படி தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார் சகாயம்.இதற்கு பொது மக்களிடம் இருந்தும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் அமோக வரவேற்பு கிடைத்தது. வேட்டி தினத்துக்காக இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, வாசனை வேட்டி (மூன்று சலவை வரை குறிப்பிட்ட மலரின் வாசனை இருக்கும்), காந்தி வேட் டி என நூறு விதமான வேட்டி ரக ங்களை அறிமுகப்படுத்தியது கோ-ஆப்டெக்ஸ். இந்நிலையில், சகா யத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அரசு, தனியா ர் அலுவலகங்கள், கல்லூரிகளில் வேட்டி தினம் சிறப்பாகக் கொண் டாடப்பட்டது.

வேட்டி தின வெற்றி குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக் குநர் உ.சகாயம்:” கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை சுமார் ரெண்டே கால் லட்சம் வேட்டிகள் கோ-ஆப்டெக்ஸில் விற்ப னையாகி யுள்ளன.இதில், வேட்டி தினத்துக் கான விற்பனை மட்டுமே சுமார் 75 ஆயிரம் வேட்டிகள். இது நாங்கள் எதிர் பார்க்காத வரவேற்பு. சிறுவர்க ளுக்கான வேட்டிகளைக் கேட்டு நிறையப் பேர் வந்தார்கள். ஆனால், எங்களிடம் அந்த ரகங்கள் போதிய ஸ்டாக் இல்லை. கல்லூரி மாணவ ர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் மரபின் வேரை இனம் கண்டு மதிக் கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வேட்டி தின கொண்டாட்டம் நல்ல உதாரணம். கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர் கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் வேட்டி அணிந்து வர முடிவெ டுத்திருக்கிறோம். மற்ற அலுவலக ங்களிலும் இதே வழக்கத்தை கடை பிடிக்கும்படி அனைவருக்கும் மீண் டும் கடிதம் எழுத தீர்மானித்திருக்கி றோம்’’என்றார்.

இதற்கிடையில் வேட்டி தினத்தை அறிவித்து இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கியதுபோல் அடுத்ததாக தாவணி தினம் அறிவி த்து இளம் பெண்கள் இடையே கைத் தறிப் புரட்சியை உண்டாக்கப் போகிறதாம் கோ-ஆப்டெக்ஸ் .ஏற்கெனவே பள்ளி, கல்லூரி மாணவிகள் பண்டிகை மற்று ம் முக்கிய நாட்களில் மட்டும் தாவணி அணிந்துவருகின்றன ர். இனி இதை வழக்கத்துக்குக் கொண்டுவரும் வகையி லும், நமது பாரம்பரிய உடை மறக்க டிக்கப்படாமல் இருக்கவும் வார த்துக்கு ஒருநாள் தாவணி அணி ந்து வருவதுகுறித்து பள்ளி, கல் லூரிகளுடன் கலந்தாலோசித் து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

படித்த செய்தி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: