Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சமையல் குறிப்பு – பலாப்பழக் கொழுக்கட்டை

சூடான சுவையான அருமையான பலாப்பழக் கொழுக் கட்டை யை சமைத்து சாப்பிடுவோமா?

தேவையானவை

அரிசி மாவு – 1/2 கிலோ,
பலாச்சுளைகள் – 10,
வெல்லம் – 1/4 கிலோ,
ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை,
தேங்காய் துருவல் – 1/4 கப்,
நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்,
வாழையிலை, உப்பு – தேவைக்கு.

செய்முறை;

1 கப் அரிசி மாவுக்கு 1 கப் என்கிற அளவில் தண்ணீர் எடு க்கவும். அதில் உப்பு போட்டு கொதிக்கவிட்டு, மாவை

கொட்டி கட்டியில்லாமல்,1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கிண்டவும். மாவை ஆற வைத்து, சொப்புபோல் செய்யவும். வெல்லத்தை பாகு செய்து தேங்காய் துருவல், பலாப்பழ விழுது (மிக்ஸியில் அரைத்தது), ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிண்டவும். பிறகு இறக்கி, ஆற வைத்து, உருண்டைக ளாகச்செய்து தயாராக உள்ள சொப்பில் வைத்து வாழை யிலையில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: