உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்துவந்தால் போதுமானது. முதன் முதலாக நடைப்பயிற்சியை ஆரம்பிப்பவ ர்கள் கவனிக்க வேண்டிய விதி முறைகள் உள்ளன. அவை என்னவென்று பார்க்க லாம்…
எடுத்த எடுப்பில் நீண்ட நேரம் நடக்க வேண்டாம். முதல்வாரம் 5 நிமிடங்கள்மட்டும் நடக்க வேண்டும். அடுத்த வாரம் அதனை 8 நிமிடங்களாக அதிகரி யுங்கள். பயிற்சியானது உங்களுக்கு களைப்பு இளைப்பு இன்றி வசதியாக இருந்தால் அடுத்த
வாரத்திலிரு ந்து அதனை 11 நிமிடங்களாக அதிகரியு ங்கள்.
படிப்படியாக உங்கள் தேவைக்கு ஏற்ப நடைப் பயிற்சியின் நேரத்தை அதிகரியுங் கள். படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் உங்களது இருதயம், சுவாசப்பை மற்றும் கால்களுக்கு திடீரென எந்தப் பாதிப்பும் ஏற் படாது. அவை தங்களைத் தாங்களே பழக் கப்படுத்தி தொடர்ந்து செய்வதற்குத் தயா ராகி விடும்.
நடைப்பயிற்சிக்கு ஏற்ற காலணி களை புதிதாக வாங்கிக் கொள் ளுங்கள். இறுக்கமான, அடிதே ய்ந்த வார் அறுந்த காலணிகள் வேண்டாம். நடைப்பயிற்சி உங் களுக்கு நலத் தைக் கொண்டு வரும். நடைப்பயிற்சி மனதிற்கு பிடித்ததாக இருக்க வேண்டும். வேண்டா வெறுப்பாக அக்கறையின்றிச் செய்ய வேண்டாம்.
துணைவர் அல்லது நண்பருட ன் பேசிக்கொண்டு நடக்கலாம். பூந்தோட்டம், கடல், ஏரி, கடை கள் என எதையாவது ரசித் துக் கொண்டு நடக்கலாம். ஆனால் பேசுவதிலும், ரசிப்பதிலும் பார் ப்பதிலும் உங்கள் அடிப்படை நோக்கத்தை மறக்கக் கூடாது. நடையின் வேகம் தடைப்படா து இருப்பதை உறுதி செய்யுங் கள். பாதுகாப்பான இடமாகப் பார்த்து நடைப் பயிற் சியை மேற்கொள்ளுங்கள்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
முக்கியமானது நடைபயிற்சி தான் இப்போது. அது குறித்த பதிவு அருமை.