Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அந்த அபலை பெண்ணுக்கு நான் செய்தது மகாபாவம்!” – இது பீஷ்மர் சொன்ன‍து

அம்புப் படுக்கையில் படுத்திருந்தார் பீஷ்மர். உத்தராயண புண்ணிய காலத்தில் உயி ரை விட வேண்டும் என்று கருதிய பீஷ்மருக்கு, உத்த ராயணம் பிறந்தும் அது நிகழவில்லையே என்ற ஆதங்கம். அப்போது அங்கு வந்தார் வியாச பகவான்.
 
பீஷ்மர் அவரிடம், நான் என்ன பாவம் செய்தேன்? இன்னும் எவ்வளவு காலம் இந்தப் படுக்கையில் கிடக்க வேண்டுமோ, தெரியவில்லை ! என்று வருத்தத்துடன் கூறினார்.
 
அதற்கு வியாசர், பீஷ்மா… ஒருவர் மனம், மொழி, மெய் யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத்
தடுக்காமல் இருப்பதும் பெரும் பாவம்தான்! என்றார்.
 
பீஷ்மரின் கண்களிலிருந்து நீர் பெருகியது. ”புரிந்தது பக வானே! பாஞ்சாலியை அர சவையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது, வேட் டையாடப்பட்ட மான் போல் என்னையும் துரோணரை யும், திருதராஷ்டிரனையும் மலங்க மலங்கப் பார்த்தா ள் அவள். அந்தச் சம்பவத் தை இப்போது நினைத்தா லும் அம்புகளை விடக் கூர் மையாகத் துளைக்கிறது என் மனத்தை. அந்த அபலைக்கு நான் செய்தது மகா பாவம் தான். அதற்கு நான் என்ன பிராயச்சித்தம் செய்துவிட்டுப் பரலோகம் செல்வேன்?” என்று புலம்பினார் பீஷ்மர்.
 
”நீ உன் பாவத்தை உணர்ந்துகொண்டதுமே அது உன்னை விட்டு அகன்றுவிட்டது. ஆனாலும் அம்புப் படுக்கைக்குப் பின்னரும் நீ உடலால் அனு பவிக்க வேண்டிய வேதனை மீதம் இருக்கிறது. ‘கிருஷ்ணா… துவாரகாநாதா… அச்சுதா… கேசவா… என்னை ரட்சிக்க மாட்டாயா!’ என்று பாஞ்சா லி அந்தச் சந்தர்ப்பத்தில் கத றியபோது கேளாமல் இரு ந்த இரு செவிகளும், அதை க் கவனித்த இரு கண்களும், தட்டிக் கேட்காத வாயும், தோள் வலிமை இருந்தும் அநியாயக்காரனுடன் மோதாத இரு தோ ள்களும், அவளுக்கு உதவாத இரு கரங்களும், இருக்கையி லிருந்து எழும்பாத இரு கால்களும் இன்னமும் அந்தப் பாவத் துக்குக் கூலி தரவேண்டியுள்ளது பீஷ் மா!” என்றார் வியாசர்.
 
உடனே பீஷ்மர்,  ”அப்படிப் பட்ட என் அங்கங்களைப் பொசுக்கச் சாதாரண நெ ருப்பு போதாது. உங்களது தவ பலத்தால் சூரிய சக்தியைப் பிழிந்து தாருங்கள். அதனா ல் சூடு போட்டுக் கொள்கிறேன்!” என்றார்.
 
பீஷ்மரிடம் எருக்க இலை ஒன்றைக் கொண்டு வந்து காட் டினார் வியாசர். ”இதன் பெயர் அர்க்க பத்ரம். அர் க்கன் என்றால் சூரியன். இதில் சூரியனின் சாரம் உள்ளது. அதனால்தான் சந்திரனை முடியில் சூடு ம் சிவபெருமான் சூரிய னாக எருக்க இலையை யும் தரிக்கிறார். பீஷ்மா! நீ ஒரு நைஷ்டிக பிரம்மச்சாரி. பிரம்மச்சரி யத்தின் உருவமா ன கணேசனுக்கும் உகந்தது, இந்த எருக்கஞ்செடி. இதன் மூல மே உன் பாவத்தைத் துடைத்து விடுகிறேன்” என்று பரிவுடன் கூறிய வியாசர், பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார்.
 
அதன்பின் சப்தமி திதியன்று தியா னத்தில் மூழ்கினார் பீஷ்மர். மூன் றாவது நாளான ஏகாதசியன்று பீஷ்மரின் ஆன்மா, அவர் உடலி லிருந்து விடைபெற்றது. பீஷ்மர் விண்ணுலகை அடைந்தார்.
 
அவரை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த தர்ம நந்தனர், வியாசரிடம் கூறினார். ”பிதாமகன் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மறைந்து விட்டாரே. அதனால் அவருக்கு வழி வழி யான சிராத்தம் கிடையா தே!”
 
அதற்கு வியாசர், ”தர்ம நந் தனா… இதற்காகவா கவ லைப் படுகிறாய்? ஒழுக்கம் தவறாத பிரம்மச்சாரியும் துறவியும் பிதுர்லோகத்துக்கும் மே ம்பட்ட நிலையை அடைகின்றனர். அவர்களுக்காக யாரும் எந்த வித மான பிதுர்க்கடனும் செய்ய வேண் டியதில்லை. இருந்தாலும் உன் திரு ப்திக்காக இனி இந்த நாடு முழுவ தும் பீஷ்மருக்கு நீர்க்கடன் அளிக்கு ம். அது மட்டுமல்ல… பீஷ்மருக்கு நன்றி தெரிவிக்கும் முக மா க சூரியனின் ஏழு குதிரை பூட்டிய தேர் சுழலும் ரத சப்தமியன்று, மக்கள் அ னைவரும் எருக்க இலை யைத் தங்கள் அங்கங்களி ல் வைத்துக் குளிப்பார்கள். அப்படியே அவர்கள் தங்கள் உடலால் செய்த பாவங்களை யும் போக்கிக் கொள்வார்கள் ’’ என்று கூறினார்.
 
அதிலிருந்துதான் ரதசப்தமி தினத்தன்று எருக்க இலை யைத் தங்கள் அங்கங்களில் வைத்து ஸ்நானம் செய்யும் வழக்கம் வந்தது!
 
– ஆர். கண்ணன், சென்னை

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: