Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நினைவாற்றலை மேம்படுத்தி நினைத்ததைச் சாதிக்க . . .

பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெ ரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை
2. ஆர்வம், அக்கறை
3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற் சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டிய

தில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கா ன சில பயிற்சி முறைகளைப் பார்ப் போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண் ணுங்கள். பிறகு 2,4,6 என்று இர ண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலை கீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண் டாகக்குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையு ங்கள். இப்படியே 5,6,7 வரை தாவி த் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறை த்து எண்ணக் கற்றுக் கொண்டீ ர்கள் என்றால், உங்களுடை ய நினைவுத்திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த் தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரி கையை எடுத்துக் கொள்ளுங் கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடு த்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல் லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டு ம் ஒருமுறை திருப்பிப்பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்க ள் என்று தெரியவரும். அதை வை த்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்துகொள்ள லாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவு த் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். தொலைக் காட்சியில் வரும் விளம்பரங்க ளைப் பாருங்கள். அந்த விளம் பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச் சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந் திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித் துப் பாருங்கள். சிந்திக்க சிந்தி க்க மூளையின் சிந்திக்கும் ஆ ற்றல் வளர்வதோடு நினைவா ற்றலும் பெருகும். முயன்று பா ருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி.

உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறு நாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள்.

(உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வே ண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங் கள். இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன் னொரு புரோகிராம் எழு திப் போடுங்கள். அதே போன்று அடு த்தடுத்த நான்கு அறைகளும், இப் படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத் ததும் உங்களுக்கே ஆச்ச ரியமாக இரு க்கும். இந்த 6 புரோகிராம்களும் அடு த்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்று ம். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறை களைக் கை யாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையி ல் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்தி ருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யா சங்கள் செய்வது இதனா லெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம். உடலின் ஒவ் வொரு உறுப்பும் ஓர் இ யந்திரம். அதிலும் இதய மும், மூளையும், ஓய்வி ல்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன் றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய் விடும். ஆகையால் எந்த நேர மும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத் துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச்சாதியுங்க ள் .

– ஹேமா மேனன்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: