Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூப்பெய்தல் முதல் கர்ப்பம் வரை – மங்கையரின் உடலில் நடக்கும் மகத்தான நிகழ்வுகள்

தேக ஆரோக்கியம் நமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அள விற்கு அல்லது அதற்கும் மேலாகவே இல்லற வாழ்வில் சுகமும் ஆரோ க்கியமும் முக்கியமான தாகும். இல்லற வாழ்வி ல் சுகம் பெற, ஆரோக்கி யம் பேன நம்மில் ஆண், பெண் இரு பாலருக்கும் எந்தவிதமான நோய்க ளோ, குறைகளோ இல்லாமல் இருக்க வேண் டும். 

நம்முடைய சமூகத்தில் பெண்களை மிக உயற்வாக போற்றி வந்துள்ளோம்! பெண்கள் பருவமெய்திய

காலம் முதல்மாதம் தோறும் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுகிறது. பெண் களின் அடிவயிற்றினுள் வலது மற்றும் இடதுபுறங்களில் இருக் கும் சினைப்பைகளில் இருந்து சுழற்சி முறையில் மாதம் ஒரு கருமுட்டை வெளிப் படுகிறது. 

இந்த கருமுட்டை விந்தணுவோ டு சேரும்போது கருவாக வளர்கிறது. அவ்வாறு சேராதபோது மாதவிடாய் ஏற்படுகிறது. பெண்களுக்கு இந்த இயற்கை நி கழ்வு மாதம் தவறாமல் தடையின்றி ஏற்படும்போது உடல் ஆரோக்கியமும், மன நலமும் நன் றாக இருக்கும். ஆனால் இந்த மாதா ந்திர நிகழ்வில் தான் எத்தனை பிரச் சினைகள். 

பெண்களுக்கான கருப்பை மற்றும் அதனைச் சார்ந்த உறுப்புகளின் வளர் ச்சி கருவில் ஐந்தாம் வாரத்திலிருந் து இருபதாம் வாரம் வரை நடைபெ றுகிறது. இவ்உறுப்புகள் குழந்தை பிறந்து, பருவம் எய்தும் காலங்களி ல் மேலும் வளர்ச்சி அடைகி றது. 

ஒரு பெண்குழந்தை பூப்பெய்துவது என்பது அக்குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நிகழ்வாகும். கடந்த தலைமுறைகளில் பெண்கள் பூப்பெய்துவது சராச ரியாக 15 வயதுகளில்தான் நிகழ் ந்துள்ளது. ஆனால் தற்போது இது குறைந்து பத்து அல்லது பதி னொரு வயதுகளிலேயே பூப்பெ ய்துவது மிக அதி கமாக நிகழ்கி றது. 

மிகச் சிறிய வயதிலேயே பூப்பெ ய்துவதால் உடலில் உண்டா கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாததால் மனதளவில் அக் குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகின்றன. இது மட்டு மல்லாது, பெண்கள் திருமணம் முடிந்து இயல்பாக நிகழும் கருவுருதல் போன்றவையும் மோசமான பாதிப்புக்கு உள்ளா கிறது. 

இன்றைய சூழலில் பெரு ம்பாலான பெண்கள் வே லைக்குச் செல்வதால் அந் த சுற்றுப்புறங்களில் இருக் கும் நச்சுப் பொரு ட்களின் பாதிப்புக்கும் ஆளாகிறர்க ள். இத்தகைய சுற்றுச் சூழ ல் நச்சு காரணிகளால் இய ல்பான அளவில் இருக்க வேண்டிய எஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜன், தைராய்ட் ஹார்மோன்கள் போன்றவை பா திப்புக்கு உள்ளாகி குழந்தைப்பேற்றின் வாய்ப்பையும் குறை க்கிறது. 

பூப்பெய்துவதில் ஏற்படும் பிரச்சனைகளால் பெற் றோர்கள் மிகுந்த வேதனை க்குஉள்ளாகிறார்கள். அதே சமயம் சினைப்பைக் கோ ளாறுகள், கருப்பைக் கோ ளாறுகள் போன்றவை அப் பெண்களையும் குடும்பத் தாரையும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. சி னைப்பையைத் தாக்கும் பிரச்ச னைகளுள் முக்கியமானது சினைப்பைக் கட்டிகளாகும் (பாலி சிஸ்டிக் ஓவரிஸ்). 

குழந்தைப்பேறு இல்லாமலிருக் கும் பெண்களில் அதிகம் காண ப்படுவது இதுவே. சினைப்பை கள் கருமுட்டை உற்பத்தியாகும் இடமாகும். இவற்றில் ஏற்ப டும் கட்டிகளால் மாதம் ஒரு முறை வெளிப்படும் கருமுட் டை வெளியாவதில் சிக் கல் ஏற்பட்டு கருத்த ரித்தல் தடைபடுகிறது. 

“மன அழுத்தம்” தற் போதைய சூழலில் ஒவ் வொருவரையும் பாதிக் கிறது, பெண்களும் இத ற்கு விதிவிலக்கல்ல. பெண்கள் அன்றாட வீட்டுப் பணிக ளையும் பார்த்து வேலைக்கும் செல்ல வேண்டி இருப்பதால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 

மன அழுத்தம் உடலில் அனைத்து உறுப்புகளையும் பாதிப்ப தோடு முக்கியமாக இனப்பெருக்கத்திற்கு தே வையான உடலியல் செய ல்பாடுகளையும் வெகுவாக பாதிக்கிறது. தொடர்ச்சியான நீண்ட கால மன அழுத்தம் கருமுட்டை வெளியாவதைத் தடு த்து மாத விடாயையும் தடுக்கி றது.  

எம்மாதிரியான மூலிகைகள் பெண்களி ன் பிரச்சனைகளுக் கு தீர்வாக அமைகி றது என்ப தைத் தெரிந்து கொள்வது சிற ப்பானது. நம்மிடையே நெடுங் காலமாக பழக்கத்தில் உள்ள அசோகு, வெந்தயம், இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய், காட் டாத்திப்பூ, நன்னாரி, ஆல், அரசு போன்றவை பெண்களுக்கா ன நோய்களுக்கு அருமருந்தாக அமைந்துள்ளன.

அசோக மரத்தின் பட்டை, பூ ஆகி யவை பெண்களுக்கான சிகிச்சை யில் பெரும்பங்கு வகிக்கிறது. தற்போதைய ஆராய்ச்சிகளில் இருந்து இது கர்ப்பப்பை கோளா றுகள், மாதவிடாய் கோளாறுகள் , மாதவிடாயின் போது ஏற்படும் வலி ஆகியவற்றிற்கு தீர்வாக அமைவது கண்டறியப்பட்டுள்ள து. 

தண்ணீர்விட்டான் போன்றவை இனப்பெருக் க நோய்களுக்கு மட் டுமல்லாது மாதவிடாய் நிற்கும் காலங்களில் (மெனோ பாஸ்) ஏற்ப டும் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருகின்றன.

– மாலைமலர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: