Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அது நமக்கு லாபமா? நட்ட‍மா?

அவசர தேவைக்காக கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, எப் போது பணம் கிடைக்கும் என்று தான் காத்திருப்போம். அதே கட னை திரும்பக்கட்டும்போது, கடன் எப்போது முடியும் என்று காத்திரு ப்பவர்கள் பலர். மாதம் மாதம் இந் த இ.எம்.ஐ. யை கட்டி முடிப்பத ற்குள் உயிர் போகிறது என்று புல ம்புகிற வர்கள்தான் அதிகம்.

இப்படி புலம்புகிறவர்களில் சிலர், கையில் மொத்தமாக பண ம் கிடைக்கும்போது கடனை முன்கூட்டியே கட்டி முடித்துவி டுகிறார்கள். இதனால் சிபில் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற்று, உங்களுக்கான மதிப்பெண்குறையும் என

சிலர் சொல்லப்போக, முன்கூட்டியே கடன் பணத்தைத் திரும்பக் கட்டியவர்களும், இனி கட்டலாம் என்கிற நினைப் பில் இருந்தவர்களும் கல ங்கிப் போயிருக்கிறார்கள். வாங்கிய கடனை முன்கூ ட்டியே கட்டினால் நஷ்டம் வருமா, வராதா? என இந் தியன் ஓவர்சீஸ் வங்கியி ன் முன்னாள் பொதுமேலா ளர் (ஓய்வு) டாக்டர் எஸ். இளங்கோவனிடம் கேட்டோம்.

”வங்கியில் தனிநபர் கடன் ஒரு லட்சம் ரூபாயை, மூன்று வருடத்தில் திரும்பச்செ லுத்தும்விதமாக ஒருவர் வாங்குகிறார் என வைத் துக்கொள்வோம். இதன் மூலமாக வங்கிக்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி வருமானம் கிடைக்கும். கடன் வாங்கிய ஒரு ஆ ண்டுக்குள் கடனை திரு ம்பக் கட்டினால் வங்கிக்கு வட்டி வருமானம் இழப்பு ஏற் படும். இ.எம்.ஐ.யை சரிவர கட்ட முடியாததாலேயே கடனை முன்கூட்டியே கட்டினார் என சிபிலில் பதிவாகும் என பல ரும் நினைக்கிறார்கள். இது தேவையில்லாத அச்சம்.

ஒருவர் கடனை முன்கூட்டியே கட்ட பல காரணங்கள் இருக்கும். நிலம் விற்று அதன் மூலமாக பெ ருந்தொகை கிடைத் திருக்கும். பிசி னஸ் செய்பவர்களுக்கு வெளியி லிருந்து வர வேண்டிய பணம் வந் திருக்கும். இதுபோன்ற சமயங்களி ல் இருக்கும் கடனை அடைக்கத்தான் பலரும் முயற்சிப்பார்க ள். மேலும், அந்தப் பணத்தை முதலீடு செய்தாலும் குறை வான வட்டியே கிடைக்கும். அதோடு வாங்கிய கடனின் வட்டிவிகிதம் அ திகமாக இருக்கும் என்பதால் பலரும் முன்கூட்டியே கடனை அடைக்க நி னைப்பார்கள்.

இப்படி செய்வதால் சிபில் பட்டியலி ல் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படா து. மாறாக, நீங்கள் கடனை விரை வாகச் செலுத் துகிறவர் என்றே சிபிலில் பதிவாகும். இப்படி ப்ரீ-குளோஸ் செய்யும்முன் இ.எம்.ஐ. சரியாக கட்டியிரு ந்தாலே போதும்.

ஆனால், ஒரு வங்கியில் வாங்கிய கடனை அடைப்பதற்காக வேறு ஒருவங்கியில் கடன் வாங்கி கடனைக் கட்டினா ல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் சிபிலில் உங்களுக்கான மதிப்பெண் குறையாது. ஆனால், உங் கள் மீதான மதி ப்பீடுகள் மாறிவிடும். இதனாலும் புதிய கடன்களை வங்கி மேலாளர் நிராகரிக்க வாய் ப்பு உள்ளது.

சிபில் என்பது கடன் வாங்கியவரின் கடனைத் திரும்பக் கட் டும் திறனை கணக்கிடும் அள வுகோல்தான். பெரும்பாலா ன வங்கிகள் வாடிக்கையாள ர்களுக்கு கடன்தரும்முன்   இந்த அளவுகோலை அவசிய ம் பார்க்கும். இதை மட்டுமே அடிப்படையாக வைத்து கட ன் தரப்படுவதில்லை என்றா லும், இதில் ஒருமுறை பதிவான தகவலை மாற்ற முடியாது .  

ஒரே குடும்பத்தில்..!

ஒரு குடும்பத்தில் ஒருவரின் பெ யர் சிபில் பட்டியலில் இருந்தா ல் அதே குடும்பத்தைச் சேர்ந்த இன்னொருவருக்கு கடன் கிடை ப்பதில் சிக்கல் வரும் என்றும் சிலர் கவலைப்படுகிறா ர்கள். புதிய தலைமுறை வங்கிகள் சில இந்தக் கோணத்தில் அணு குவதாகவும் சிலர் சொல்கிறார் கள். இதுவும் தேவை இல்லாத கவலைதான்.

அதாவது, கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல் லும் சூழ்நிலையில் மனை வி தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் என சில கடன் களை வாங்கி, அதை சரி யாகக் கட்டாமல் செட்டில் மென்ட் செய்துள்ளார் என் று வைத்துக் கொள் வோம். பின்னாளில் மகனுக்கு கல் விக் கடன் கேட்டு விண்ண ப்பித்தால் தாயின் சிபில் மதிப்பெண்ணை காரணம் சொல்லி கடனை நிராகரிக்க முடியாது. ஆனால், சில வங்கி மேனேஜ ர்கள் இதைக் காரணமாகச் சொல்லி கடன் தர மறுப்பதும் உண்மை.

அதேபோல, அதிக தொகை கட னாக கிடைக்கும்என்று நினைத்து இருவர் இணைந்து கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, அதில் ஒருவரின் சிபில் மதிப்பெண் கு றைவாக இருந்தா ல் அந்த கடன் நிகாரிக்கப்படும்.

ஒருவருக்கு கடன் வழங்கும்போ து கடன் வாங்குபவரின் திரும்பச் செலுத்தும் திறன், மாத வருமானம், வேலை பார்க்கும் நிறு வனத்தின் துறை வளர்ச்சி, அந்தத் துறையில் இருவரு டைய எதிர்கால வளர்ச்சி என்பதை எ ல்லாம் அடிப்படையாக வைத்து தான் கடன் கொடுக்கவேண்டும். இதுதான் நடைமுறை. முதல்மு றையாக கடன் வாங்குபவருக் கும்இதைப்பின்பற்ற வேண்டும்.

அடமானக் கடன்..!

வீடு, நகை என எதையாவது ஒன்றை அடமா னமாக வைத்து அவசரச் சூழ்நிலையை சமா ளிப்பது நம்மில் பலருக்கு வழக்கம். ஆனால், இந்த கடனை திரும்பச் செலுத்துவதும் சிபில் பட்டியலில் பதிவாகும். இதில் வீட்டை அட மானமாக வைத்து கடன் வாங்கும்போது மா தத் தவணை கட்டும்படி இருக்கும். தவணை கட்டத் தவறினால் சிபில் மதிப்பெண் குறை யும். ஆனால், பெரும்பாலான தங்க நகைக் கடன் தவணை யில் திரும்பச் செலுத்தும் விதத்தில் இல்லை. மொத்தமாக திரும்பச் செலுத்தலாம் அல் லது நம்மால் முடிந்த அளவு அவ்வப்போது பணம் கட்டலா ம். ஆனால், வட்டியை சரியா க கட்டுவது அவசியம். வட்டி க்கு வட்டி கட்டினால் உங்கள் சிபில் மதிப்பெண் குறையலா ம்.  

எந்த ஒரு கடன் வாங்கினாலும் அவருடைய பெயர் சிபில் பட்டியலில் சேர்ந்துவிடும். சிபில் பட்டியலில் அவருடைய மதிப்பெண் எவ்வளவு என்பதைதான் வங்கிகள் பார்க்கும். முடிந்தவரை இந்த மதிப்பெண் அதிகம் பெற முயற்சி செய் யுங்கள்” என்று முடித்தார் இளங்கோவன்.

லோன் செட்டில்மென்ட்..!

கடன் வாங்கி அதை சரியாகக் கட்டாமல் கடைசியில் செட் டில்மென்ட் செய்தால் என்ன மாதிரியான பிரச்னை வரும் என்பதுகுறித்து பேங்க் பஜார் டாட்காமின் சி.இ.ஓ. அதில் ஷெட்டியிடம் கேட்டோம்.

”திடீர் வேலை இழப்பு, அதிக கடன் சுமை, இனி வேலைக்குச் செல்ல முடியாது, உடல்நலக் குறைவு போன்ற காரணத்தி னால்தான் பலரும் இ.எம்.ஐ. கட்ட தவறுகிறார்கள். கடன் வாங்கியவரால் கடனை சரி வர கட்ட முடியவில்லை என் ற சூழ்நிலை உருவாகியதும் கொடுத்த கடனை வசூலிக்கத் தான் வங்கி முயற்சிக்கும். தொடர்ந்து போன் செய்து, வீட்டிற்கு ஆள் அனுப்பிகூட கட னாக தந்த பணத்தை திரும்ப பெற முயற்சிக்கும். இம்முயற்சி தோல்வி அடைந்து, இனி கடனாக தந்த பணம்  திரும்ப வ ராது என்ற சூழ்நிலையி ல்தான் வங்கி செட்டில் மென்டிற்கு போகும்.

செட்டில்மென்ட் முடிவு க்கு வருவதற்குள் வங்கி உங்களை ஒருவழி ஆக் கிவிடும். கொடுத்த கட ன்தொகை வாங்க இதுதான் வழி என வங்கி நினைக்கும் போ துதான் செட்டில்மென் டிற்கு ஒப்புக்கொள்ளும். இதுபோன்ற சமயத்தில் கடன் வாங் கியவருடன் வங்கி பேச்சுவார்த்தை நடத்தும். அப்போது கடன் வாங்கியவர் கட்ட வேண்டிய அசல், அதற்கான வட்டி என எல்லாவற்றையும் சேர்த்து ஒரு தொகையைக் கேட்கும். இதில் பெரும்பாலானவர்கள் முடிந்தவ ரை தங்கள் பேச்சுத் திறமையைப் பயன்படுத்தி தொகையைக் குறைத்து விடுவார்கள். இதில் சில சமயங்களின் கடன் வாங்கிய அசல் தொகையைவிட குறைவான தொகைக்கு கூட  சென்ட்டில் மென்ட் செய்ய வங்கி ஒப்புக் கொள்ளும். இந்த சமயத்தில் கடன் வாங்கி யவரும் பெ ருமையாக வாங்கிய கடனை விட குறைவா ன தொகையே கட்டினேன் என்று பெருமை ப்பட்டுக்கொள்ளலாம்.

செட்டில்மென்ட் பணம் தந்தபிறகு செட்டில் மென்ட் கடிதம், பணம் கட்டியதற்கான ரசீது ஆகியவற்றை வாங்கி வைத்துக்கொள்வது அவசியம். இது எதிர்காலத்தில் தேவைப்ப டும். இந்தக் கடிதத்தில்தான் வங்கி தனது வேலையை புத்தி சாலித்தனமாக சரியாகச் செய்யும். உங்களுக்கு கொடுக்கும் செட்டில்மென்ட் கடிதத்தில் வா ங்கிய கடன் தொகையை விட குறைவான தொகையே திரு ம்பச் செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக சொல்லி விடும். இந்த தகவல் அப்ப டியே சிபில் ரிப்போர்ட்டில் பதிவாகி விடும். இதில் நீங்கள் தனிநபர் கடன் வாங்கி செட்டில்மென்ட் செய்திருந்தால், உங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துவி டும். பிற்பாடு வீட்டுக்கடன் கேட்டு வேறு வங்கியில் விண்ண ப்பிக்கும் போது, உங்களின் விண்ணப்பத்தை நிராகரிக்க வா ய்ப்பு உள்ளது. இதையும் மீறி தரப்படும் கடனுக்கு வட்டி வி கிதம் சற்று அதிகமாக இருக் கும். அதோடுகடனுக்குஒருவ ர் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் என்றும், கடன் தொகைக்கு ஈடான இன் ஷூரன்ஸ் பாலிசிகள், ஃபிக்ஸட் டெபா சிட் போன்றவற்றின் பத்திரத்தை வங்கியில் ஒப்படைக்கும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, மீதமுள்ள கடனுக்கான வட் டி அதிகம் என்றாலும் பரவாயில்லை . வங்கி கேட்கும் தொகை முழுவதை யும் செலுத்த முயற்சி செய்யுங்கள். சில ஆயிரங்களை மிச்சப் படுத்துவ தாக நினைத்து எதிர்காலத்தில் கடன் பெறும் வாய்ப்பை இழந்து விடாதீர்க ள்” என்றார். ஆக கடன் வாங்குபவர் கள் கவனமாக இருப்பது அவசியம்!

– இரா.ரூபாவதி, படம்: ஜெ.வேங்கடராஜ் & கூகுள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: