Saturday, April 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேனை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்!

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபதுவகையான உடலு க்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின் களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்து க்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டுவிடுகிற து.

கண் பார்வைக்கு:

தேனை கேரட்சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு

ஒருமணி நேரத்திற்குமுன் பருகினா ல் கண் பார்வை விருத்தியடையும்.

இருமலுக்கு:

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொ ண்டை வலி, மார்புசளி, மூக்கு ஒழு குதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவார ணம் கிடைக்கும்.

ஆஸ்துமா:

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமா கும்.

இரத்த கொதிப்பு:

ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:

ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமு ம் காலைக்கடன்களுக்குமுன் பருகவும். இது இரத்த சுத்திக ரிப்பிற்கும், உடல் கொழுப்பை கு றைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும்உதவும் 

இதயத்திற்கு டானிக்:

அனைஸ் பொடியுடன் (Anise Powder / Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கு ம்.

– ஹேமா மேனன்

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: