Wednesday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தி.மு.க. – மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆவார்களா?

கட்சியை விட்டு அழகிரியை நீக்கி குடும்ப அரசியல், வாரிசு களுக்கு இடையேயான பதவிச் சண்டை போன்றவற்றுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கலைஞர். கடுமையான
சவால்களை சமாளித்து வெற்றி வாகை சூடி திமுக என் னும் பெருங் கப்பலை செலுத்திக் கொண்டிருக் கும் கலைஞருக்கு இது எல்லாம் ஜுஜுபி மேட்டர்தான் என்றாலும் அழகிரியை வைத்தே பல சூழல்களி ல் கலைஞரையும் திமுகவையும் கடுமையாய் விமர் சித்து வந்த அத் தனை பேரையும் இந்த செய்தி தே ளாய் கொட்டி திருடர்களாய் துடிக்க வைத்தது என்பது ம் உண்மைதான்.
 
தென்மாவட்டங்களில் அழகிரிக்கு செல்வாக்கு இருப்பது என்னவோ உண்மைதான் என்றாலும் அந்த செல்வாக்கின் அடித்தளம் திராவிட முன்னேற்றக் கழக ம். திராவிட முன்னேற்றக்கழக ம் இல்லாத அழகிரி செல்வா க்குள்ள ஒரு மனிதர் என்பதைக் கடந்து வேறு எந்த ஒரு ஆளுமை யையும் தமிழக அர சியலில் செலுத்தி விட முடியாது. அந்த செல் வாக்கும் அவரது அப்பா வான கலைஞர் என்பவ ரால் ஊதி பெரிதாக்கப்பட்ட செல்வாக்குதான்.
 
அழகிரி எந்த சூழலிலும் தன்னை ஸ்டாலினோடு ஒப்பிட்டுக் கொள்ள முடி யாது. ஸ்டாலின் தன் னை திமுகழகத்தின் அடி மட்டத்திலிருந்து உயர்த் திக் கொண்டவர். தமிழக மக்களிடையே கலைஞ ரின் மகன் என்ற ஒரு உறவுத்தொடர்பையும் கடந்து அரசியல் அனுபவம் கொண்டவர் என்ற ரீதியிலும் அறிமு கமாகி இருப்பவர். ஸ்டா லினை தலைவராக ஏற் றுக் கொண்டு அழகிரி பெருந்தன்மையோடு கட் சியில் தொடர்வாராயின் திமுகவிற்கு அது இன்னு ம் பலத்தைக் கூட்டும் என்றாலும் அழகிரி இல்லாவிட்டால் மிகப்பெரிய இழப்பு ஒன்றையும் அந்தக் கட்சி அடைந்து விடாது.
 
இன்னமும் கலைஞர் செய்து கொண்டிருக்கும் ஒரே தவறு ஸ்டாலினை கட்சித் தலைவராக அறி விக்காததுதான். ஸ்டாலி னை கட்சித் தலைவராக அறிவித்து அவரின் கை யில் கட்சியை முழுமை யாக ஒப்படைக்கும் பட்சத்தில் அதிரடியாக பாரளுமன்றத் தில் நினைத்ததை விட அதிக இடங்களை பெற திமுகவால் முடியும். ஏனெனில் சம கால மக்களின் தெளிவா ன விருப்பங்களை புரிந்த வராய் ஸ்டாலின் இருக் கிறார். காங்கிரஸ் கூட கூட்டணி வேண்டவே வேண்டாம் என்று பிடி வாதமாய் நின்றவர் ஸ்டாலின்….அதே போல தேமுதிக என்னும் ஓட்டைப் பிரிக்கும் கட்சியை சாதுர்யமாய் பாராளுமன்றத் தேர்தலில் சேர்த்துக்கொண்டால் இன்னும் அதிக இடங்களை ஜெயிக்கலாம் என்ற எதார்த்த கணக்கை போட்டவரும் ஸ்டாலின் தான்….
 
ஸ்டாலினின் திட்டமிடுதலில்  இப்போது ஓரளவிற்கு இயங்க ஆரம்பித்திருக்கும் திமுகழ கம் முழுமையா ஸ்டாலினி ன் கட்டுப்பாட்டிற்குள் வரும் பொழுது…. மம்மிக்கள் எல்லாம் டம்மிக்கள் ஆகும் கண்கொள்ளா காட்சிகள் தமிழகத்தில் நடந்தேறும் என்பதே உண்மை…!
 
நாடகமாயிருந்தாலும் அரசியல்சூழ்ச்சியாய் இருந்தாலும் … அழகிரி நீக்கம் அதிரடிதான்…!
 
 – கழுகு

One Comment

Leave a Reply