Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எம்பிராய்டரி உடைகளின் வகைகளும்! பாதுகாப்பு வழிகளும்!

உடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் டரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம்  விருப்பத் துக்கு ஏற்ப  உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை  எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி  பாதுகாக்க
வேண்டும் என்று விளக்குகிறார் உடை அலங்கார நிபுணர் உஷா.
எம்பிராய்டரியை பொறுத் தவரை குறிப்பிட்ட உடைக ளுக்குதான் செய்துகொள் ள வேண்டும் என்றில்லை. எல்லா வித உடைகளையு ம் அழகுப்படுத்திக் கொள் ளலாம். இந்தியாவை பொ றுத்த வரை பெண்களுக் கான உடையில் புடவை, சுடி தார், குர்தா, ஸ்கர்ட்,  பிளவுஸ் போன்றவற்றில் எம்பிராய்டரி  டிசைன் செய்கிறார் கள். ஆண்களுக்கு சட்டை காலர், கை கப், குர்தா, கழுத்து பகுதி மற்றும்  ஷர்வானியில் எம்பிராய் டரி செய்யலாம்.
இவை தவிர, தலையணை கவர், குஷன் கவர், துணிப்பை, காகிதங் கள் வைக்க பயன்படும் பைல்களி லும் மனதுக்கு பிடித்த  எம்பிராய் டரியை  செய்துக்கொள்ளலாம். சாதாரண துணிகளை தைக்கும் நூல்களில் எம்பிராய்டரியை போ டமுடியாது. பட்டு நூல்  அல்லது ஸ்கின் நூல்களில் தான்  எம்பிராய்டரி டிசைன்களை போட முடியும். அதே போல பட் டுத்துணி, பருத்தி, சில்க், காட்டன்,  இத்தாலியன் கிரேப், ஷிபான், தசர், ராசி சில்க், போன்ற  து ணிகளில் எம்பிராய்டரி வேலைப்பாடு செய்வதா ல் பார்க்க நேர்த்தியாக  இருக்கும்.
அமெரிக்கன் ஜார்ஜெட் துணி வழுவழுப்பானது என்பதால் இதில் எம்பிராய்டரி செய்ய முடியாது. எம் பிராய்டரி செய்யப்பட்ட  துணிகளை மிகவு ம்  பத்திரமாக பாதுகாக்க வேண்டும். அதி க ரசாயன கலவை இல்லாத ஷாம்பு கொ ண்டு துவைக்க வேண்டும். பட்டு புடவைக ள் என்றால் வாஷிங்மெஷின் பயன்படுத் தாமல் கைகளால் துவைக்க வேண்டும். அவ்வாறு சலவை செய்யும்போது  அடித்து துவைக்கக்கூடாது.
துணிகளை அயர்ன் செய்யும்போது டிசை னிங்மேல் அப்படியே செய்யாமல் துணியை திருப்பித்தான் செய்ய வேண்டும்.  புடவையின் கீழ் பகு தியில்  எம்பிரா ய்டரி செய்யும் போது அரை இஞ்ச் மேலேதான் செய்ய வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை  ஒவ்வொரு மாநி லத்துக்கு ஏற்ப எம்பிராய்டரி  டிசைன் மாறுபடும் . தமிழகத்தில் உள்ள எம்பிராய்ட ரி டிசைன்க ளுக்கு தோடா என்று  பெயர். இத னை நீலகிரி மலை வாழ் மக்கள் போடுகிறார்கள்.
ஆந்திர மாநிலத்தில் போடும் எம்பிராய்டரியின் பெயர் பஞ் சாரா மிரர். கண்ணாடி, சோழி, பாசி மணிகளைச்சுற்றி வேலைப்பாடு  செய்யப்பட்டி ருக்கும்.  மேற்குவங்க எம்பிராய்டரிக்கு காந்தா என்று பெயர். இங்குள்ள மக்கள் மீன்களை விரு ம்பி சாப்பிடுவார்கள்.  அதனால் அவர்களின் வே லைப்பாடுகளில்  மீன் அல்லது தண்ணீர் அலை இருக்கும். கர்நாடக மக்க ளின் டிசைனான கசோ டியில், கிளி, மான், துளசி மாடம், என அனைத்து ம் கணித ஜியா  மென்ட்ரி டிசைன்களில் இருக்கு ம்.
ராஜஸ்தான் என்றாலே நினைவுக்கு வருவது. காக்ரா சோளி தான் அதா வது பாவாடை சட்டையில் கண்ணா டி முத்து போன்ற  வேலைபாடுகளு க்கு  நடுவே எம்பிராய்டரி செய்திருப் பார்கள். பஞ்சாபி டிசைன்களுக்கு புல்காரி என்று பெயர். இது செழிப் பான  மாநிலம் என்பதால் பூந்தோட்ட டிசைன்களை  அடர்த்தியாக சாட்டின் நூலில் வடிவமைத்திருப்பார்கள். கா ஷ்மீர் மாநிலத்தில்  காஷ்மீரி காஷ் மீரி உடைகள் பிரபலம்.
பளிச் நிற உடைகளின் வண்ண நூல் களில் நிறைய தையல் களை ஒரே டிசைன்களில் போட்டு அடைத்திருப் பார்கள் என்று ஒவ்வொரு மாநிலத்தி ல்  உள்ள எம்பிராய்டரி டிசைன்களை பற்றி கூறிய உஷா இந்த உடைகளுக் கு கற்கள், முத்து கள் மற்றும் குறத்தி பாசி  மணிகள் போன்ற நகைகளை  அணிந்தால் மிகவும் எடுப்பாக இருக் கும் என்கிறார்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: