Thursday, June 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சொத்துப்பத்திரத்தை பதிவு செய்யும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டியவைகள்

சொந்த வீட்டு கனவை நினைவாக்கும் முதல் அஸ்திவாரமா க பத்திரப்பதிவு அமைகிறது. வாங்கும் இடம் நமக்கு உரிமை யுடையது என்பதை உறுதி செ ய்யும் அடிப்படை தாக்கீதாக இருக்கும் பத்திரப்பதிவை மேற் கொள்ளும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்க ளை பற்றி பார்ப்போம்.

* வாங்கும் இடத்தின் மீது எந்த வில்லங்கமும் இல்லை என்ப தை அது சம்பந்தமான ஆவணங்கள் மூலம் சரிபார்த்த பிறகு இடத்தின் விலையை பேசி முடிவு எடுத்ததும் வழிகாட்டி மதிப்பின்படி தான் பத்திரப்பதிவு மேற்

கொள்ள வேண்டும்.

* இடத்துக்கான வழிகாட்டி மதிப்பு எவ்வளவு என்பதை அந்த இடம் அமைந்துள்ள எல் லைக்குட்பட்ட பத்திரப் பதிவு அலு வலகத்துக்கு சென்று தெரிந்து கொள் வது நல்லது. பின்னர் அந்த மதிப்புக்கு ஏற்ப முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.

* அதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு எழுத்தரை நாடி பத்திரம் எழுதும் நட வடிக்கையை தொடங்க வேண்டும்.

அப்போது பத்திரத்தில் சே ர்க்க வேண்டிய முக்கிய மான விவரங்கள் விடுபட் டு போகாமல் சேர்க்கப்பட்டு இருக்கிறதா? என்பதை சரி பார்க்க வேண்டும்.

அதற்கு நேரடியாக முத்திரை த்தாளில் எழுத தொடங்காமல் முதலில் ஒரு பேப்பரில் எழுதி பார்த்து விவரங்கள் அனைத் தும் இடம்பெற்று இருக்கிறதா? என்று அலசி ஆராய்ந்து பார் க்க வேண்டும்.

* ஒருமுறைக்கு இருமுறை படித்து பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் முத் திரைத்தாளில் எழுத வேண்டு ம்.

*முத்திரைத்தாளில் சொத்து சம்பந்தமான விவரங்கள் அ னைத்தும் தெளிவாக குறிப்பி டப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முக்கியமாக சொத்தை விற்பனை செய்பவரின் பெயர், அவ ருடைய தந்தை பெயர், மு கவரி, சொத்துதொடர்பான விவரங்கள், அதை விற்ப னை செய்ய அவருக்கு உண்டான அதிகாரம், விற் க சம்மதித்த விவரம்,

சொத்தை வாங்குபவர் பெ யர், தந்தை பெயர், முகவ ரி, சொத்து விற்பனைக்கு பரிமாறிக்கொண்ட தொகை, சாட்சிகள் பெயர், முகவரி உள் ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும்.

* வாங்கும் இடத்தின் அளவு எவ்வ ளவு? அது இருக்கும் திசை, அதை சூழ்ந்துள்ள விவர குறிப்புகள் தெ ளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.

* இந்த விவரங்களில் பிழைகள் எ துவும் இல்லாதவாறு சரி பார்த்து க்கொள்ள வேண்டும். முக்கியமா க அவசர கதியில் பத்திரப்பதிவுக் கான வேலை மேற்கொள்வதை தவிர்க்கவேண்டும். அதுவே பிழை கள் நிகழ்வதை பெரும்பாலும் தடு க்கும்.

* பத்திரப்பதிவுசெய்யும் நாளில் வாங்கும்சொத்துக்கு கொடு த்திருக்கும் முன்தொகை போக மீதமுள்ள தொகை யை கொடுக்க வேண்டும். அதற்கு முன்பு மொத்த பணத்தையும் கொ டுப்பதை தவிர்க்க வேண்டும்.

* பத்திரத்தில் சொத்தை வா ங்குபவர், விற்பவர், சொத் தை விற்பனை செய்பவர் க்கு வாரிசுகள் இருந்தால் அவர்கள், சாட்சிகள் உள்பட சம்ப ந்தப்பட்ட அனைவரும் கையெழுத்து போடவேண்டும்.

* பத்திரப்பதிவு செய்யும் நாளில் பத்திரப்பதிவு அ லுவலகத்தில் இருப்பதற்கு ஏதுவாக சில மணி நேரத்துக்கு முன்பே அனை வரும் சென்றுவிடவேண் டும்.

* பத்திரத்தில் இடம்பெறும் விற் பவர், வாங்குபவர்களின் புகைப் படங்கள் தெளிவாகவும் சமீபத் தில் எடுக்கப்பட்டதாகவும் இருக் குமாறு பார்த்து கொள்ள வேண் டும்.

* பத்திரப்பதிவு மேற்கொள்வத ற்கான ஆவணங்களின் ஒரிஜி னல்கள் அனைத்தையும் வைத் திருக்க வேண்டும்.

* ஆவண சரிபார்ப்புக்கு பின்னர் பத்திரப்பதிவு முடிந்ததும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்க வேண்டும்.

சில நாட்களுக்கு பிறகு அந்த ரசீதை சார்பதிவா ளர் அலுவலகத்தில் கொ டுத்து பத்திரத்தை வாங் கி விட வேண்டும். அதை வாங்குவதற்கு தாமதம் செய்ய க்கூடாது.

அதுபோல் பத்திரம் வாங் கிய உட னே பட்டா மாற்றத்துக்கும் உடனே விண்ணப்பித்து விட வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: