Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூப்பெய்திய பெண்களுக்கு வரும் நோய்களும் இயற்கை மருத்துவமும்!

பெண் குழந்தைகளைப் பெற்ற எல்லா அம்மாக்களுக்கும், தன் குழந்தையின் பூப்பெய் தும் பருவம் குறித்த கவ லை நிச்சயம் இருக்கும். வரக்கூடாத வயதில் வந்து விடுகிற மாத விலக்கும் சரி, வர வேண்டிய வயதில் வராத மாதவிலக்கும் சரி… இரண்டுமே அம்மாக்களு க்குக் கவலையையும், மக ள் களுக்கு இம்சையையும் தரக்கூடியவை. அதிலும் மழலை மாறாத இளம் வயதில்,

அதாவது 9, 10 வயதுகளில் பூப்பெ ய்தும் பெண்குழந்தைகள் ரொம்பவே பாவம்! தம் உடலில் நிகழ்கிற மாற்ற த்தைப் புரிந்து கொள்ளக் கூடத் தெரியாமல் பெண் குழந்தைகள் ஒரு பக்கமு ம், அவற்றைப் புரிய வை க்க அவர்களது அம்மாக் கள் இன்னொரு பக்கமு மாகப் படும் அவஸ்தைக ளை வீட்டுக்கு வீடு பார்க்கலாம்.

‘நீ இனி குழந்தை இல்லை. குமரி…’ என்பதை உணர்த்தும் அடையாளமே மாதவிலக்கின் தொடக்கம். தாய்மை என்கிற மிகப்பெரிய பொறுப்புக்கு உடலை ஆயத்தப்படுத்தும் ஆரம்ப க் கட்டம் அதுதான். பூப்பெய்தும் வயதில் அந்தப் பெ ண்ணுக்குக் கொடுக்கப்படும் ஊட்டம்தான், அடுத்தடுத்து அவள் கடக்கப்போகிற பருவ ங்களுக்கு ஆதாரம். பருவமடையும் பெண் குழந்தைகளின் உடல், மன குழப்பங்களைப் போக்குவதுடன், அடுத்தடுத்து அவர்கள் கட க்கப் போகிற நிலைகளுக்கான ஆரோக்கிய அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியதும் அம் மாக்களின் பொறுப்பு.

பூப்பெய்திய முதல் சில மாதங்களு க்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்ற ங்கள் இருப்பது சகஜமே. அதிகபட்ச ம் ஒரு வருட த்துக்குள் அது முறை ப்பட்டு விடும். ஆரோக்கியமான பெ ண்ணுக்கு 28 நாள்களுக்கொருமு றை மாதவிலக்கு வர வேண்டும். ரத்த சோகை, பருமன், அதீத குளிர் ச்சியான உடல்வாகு, தைராய்டு, சி னைப்பை அல்லது கருப்பையில் பிர ச்னைகள் … இப்படி ஏதேனும் இரு ந்தால்தான், அந்த சுழற்சி முறை தவறும்.

‘வரும் போது வரட்டும்’ என அலட்சியமாக விடக்கூடிய விஷ யமில்லை இது. முறைதவறி வரும் மாதவிலக்கு, அக அழகு , புற அழகு என இரண்டையும் பாதிக்கும். வயதுக்கு வரும் பெண் குழந்தைகளுக்கு உளு ந்தங்களி, வெந்தயக்களி, எள் ளுருண்டை போன்றவற்றைக் கொடுக்கும் பழக்கம் கிராமப் புறங்களில் இன்றும் இருக்கிற து.

பூப்பெய்தும் வயது குறைந்து வருகிற நிலையில், இந்த மாதி ரி உணவுகளைக் கொடுப்பதன்மூலம், அவர்களது எலும்பு மண்டலத்தைப் பல ப்படுத்த முடியும். நகரங்களில் அந்தக் கலாசாரமெல்லாம் ஏது? அதனால்தான் சின்ன வயதிலேயே கண்ணாடி போடுவ து, வருடத்தின் எல்லா நாள்களிலும்தும் மல், இருமல், சைனஸ் பிரச்னை என நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் பாதி க்கப்படுகிறார்கள். வயதுக்கு வந்ததுமே எல்லாப் பெண்களுக்குள்ளும் ஒரு பெரி ய மனுஷத்தனம் வந்து உட்கார்ந்து கொ ள்ளும். உடலின் மீதும், புற அழகின் மீதும் அக்கறை அதிக மாகும். ஒல்லியாக இருப்பது தான் அழகு என்கிற நினைப்பி ல், உணவைத் தவிர்ப்பார்கள்.

குறிப்பாக காலை உணவு! தொடர்ந்து 3 மாதங்களுக்கு கா லை உணவைத் தவிர்க்கிற பெ ண்களுக்கு மாதவிலக்கு சுழற் சி முறையற்றுப் போவது, ரத்த சோகை, ஹார்மோன் மாற்றங் கள் வரலாம். மூன்றே மாதங்க ளில் கன்னாபின்னாவென எடை எகிறும். மாதக்கணக்காக வராமலிருக்கும் ரத்தப்போக் கை வரவழைக்க, ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக் கொ ள்வார்கள். அது மாதவிலக் கை வரச்செய்வதுடன், கூடவே சில இம்சைகளையும் இழுத்து விட் டுத்தான் போகும். உதட்டுக்கு மேலும், தாடையிலும் முடி வள ர்வது, எடை அதிகரிப்பது எல் லாம் ஹார்மோன் மருந்துகளி ன் கைங்கர் யமே! மாதவிலக்கு சுழற்சியை முறை ப்படுத்த பெண்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் தண்ணீரிலி ருந்து, காய்கறி, பழங்கள் எல்லாவற்றுக்கு ம் பங்குண்டு. பப்பாளியும், அன்னாசி யும் பெண்களின் மாதவிலக்கு சுழற் சியை முறைப்படுத்துப வை.

வெள்ளரி விதை அல்லது பூசணி விதையை பருவமடைந்த பெண்கள் தினம் சிறிது சாப்பிட்டு வர, ஈஸ்ட் ரோஜென் ஹார்மோன் சுரப்பு சீராகு ம். முருங்கைக்கீரை, முதுகெலும் பை வலுவாக்கும். தினம் மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் கர்ப் பப்பை மற்றும் சினைப்பை நோய்கள் அண் டாது. தவிர, டீன் ஏஜில் உண்டாகும் மன உளைச்சலையும், மன முரண்பாடுக ளையும் போக்கும் குணம் அதற்குண்டு. மன பலம் இல்லாத காரணத்தி னால் தான், அந்த வயதில் இனக்கவர்ச்சிகளால் ஈர்க் கப்பட்டு, காதல் எனக் குழ ம்பிப் போய் எதிர்காலத் தைத் தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் பலரும். மன ச்சிக்கலையும் மாதச் சிக்க லையும் தீர்க்கும் சக்தி மா துளைக்கு உண்டு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பருவ வயதுப் பெண்ணின் முதல் டாக்டர் அவரது அம்மா. அவர்க ள் வீட்டு கிச்சனே, கிளினிக். அம்மாவும் மகளும் இதை உண ர்ந்து, புரிந்து நடந் தால் போதும்.

– ஹேமா மேனன்

Leave a Reply

%d bloggers like this: