Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கற்றலில் குறைபாடு (Dyslexia) சிறப்பு உளவியல் பார்வை

கற்றலில் குறைபாடு (Dyslexia) என்றால் என்ன?

Ø மூளையில் உள்ள சில பிரச்னைகளால், இக்கு றைபாடு குழந்தைகளு க்கு ஏற்படுகிறது.

Ø இக்குழந்தைகளுக்கு, படிப்பதிலும் எழுதுவதி லும் சிரமங்கள் இருக்கு ம்.

Ø இவர்கள் மனநிலை சரியில் லாதவர்கள் அல்ல.

Ø இவர்கள் புத்திசாலியாக, சில செயல்பாடுகளில் ஆர்வம் உள்ளவர்களாக

இருக்கலாம்.

Ø இவர்களுக்கு எழுது வதும் படிப்பதும் மட்டு ம்தான் கொஞ்சம் கடி னமான காரியம்.

Ø கடின உழைப்பும், ச ரியான வழிகாட்டுத லும் இருப்பின் டிஸ் லெக்சியாவால் பாதிக் கப்பட்ட குழந்தைகளால் படிக் கவும் எழுதவும் முடியும்.

டிஸ்லெக்சியா ஏன் ஏற்படுகிறது?

டிஸ்லெக்சியா ஏற்படும் விதங்களைக் கீழ்க்கண் டவாறு வகைப்படுத்த லாம்.

1. Traumatic Dyslexia மூ ளையில் படித்தல், எழு துதலைக் கட்டுப்படுத்து ம் பகுதியில் ஏற்பட்ட அதிர்ச்சி அல்லது காயம் காரணமாக ஏற்படும் குறைபாடு Traumatic Dyslexia என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாகச் சிறு குழந்தைக ளிடம் அதிகம் காணப்படுவதில்லை

2. Primary Dyslexia – பிறவியிலேயே மூளையின் இடப்பக்கத்தில் (Cerebral Cortex) ஏற்படும் தவ றான வினையாக்கம், அல்லது அப்பகுதி சரிவர வேலை செய்யா மையின் காரணமாகப் படிப்பது, எழுதுவது இவற்றில் ஏற்படும் குறைபாடு, பரம்பரை பரம்பரை யாக(Hereditary)., ஜீன்களின் மூலம் கடத்தப்படுகிறது இது ‘Primary Dyslexia’, என்று அழைக் கப்படுகிறது. இக்குறைபாடு உடையவர்களுக்கு எத்தனை வய தானாலும் எழுதுவதும் படிப்பதும் சிரமமா கவே இருக்கும். இது இரு பாலாரிடமும் காணப்படும் குறைபாடு ஆகும்.

3. Secondary Dyslexia – பிறவிக்கோளாறு இல்லாமல், ஹார் மோன்களின் சுரப்பின் காரணமாக உரு வாவது Secondary Dyslexia என்று அழை க்கப்படுகிறது. இது சிறுவர்களிடம்தான் அதிகம் காணப்படும். இக்குறைபாடு வயதானால் குறைந்து விடக்கூடும்.

கற்றுக்கொள்வது என்பது பல நிலை களை உடையது.

ü ஒலிகள் இணைந்து எப்படி வார்த்தைகளை உருவாக்குகிற து என்பதை உணர்தல்

ü வடிவங்களைக் கவனித்து எழுத்துக்களை அறிதல்

ü ஒலிகளுக்கும் எழுத்துக்களு க்குமான தொடர்பை உணர்ந்து கொள்ளுதல்

ü ஒலிகளையும் , எழுத்துக்க ளையும் இணைத்து வார்த்தைகளாக்குதல்

ü புத்தகத்தின் பக்கங்களில் வரிகளின் மீதான ஒழுங்கமைவு மற்றும் கட்டுப்பாடு. அதா வது ஒரு வரியைப் படித்த பின் அதற்கடுத்த வரி, அத ற்கடுத்தது என்று வரிசை யாகப் படிக்க இயலுதல்

ü முன்பே அறிந்தவற்றையு ம், புதிதாகப் பார்ப்பவற்றை யும் தொடர்புபடுத்த இயலு தல்

ü புதிய கருத்துப் படிவங்கள், உருவகங்களை உருவாக்குதல், உத்திகளை உருவாக்குதல்

ü பார்த்தவை, படித்தவை களை நினைவில் நிறுத் துதல்

இவை அனைத்தும் சரிவர நடக்கும் பொழுதுதான், நாம் படிப்பது எழுது வது போ ன்றவை நடக்கும். இவற்றி ல் சிலவற்றை நம்மால் செ ய்ய மு டியவில்லை எனில், அச்செயல்பாட் டு சீர் குலைந்துவிடும். படிப்பது, எழுதுவது, நினைவு வைத்துக் கொள்வது இவற்றில் குறை பாடு உண்டா கும். டிஸ்லெக்சியாவா ல் பாதிப்புக் குள்ளான குழந்தைகளு க்கு, முதல் இரண்டு மூன்று படிகளி லேயே தடுமாற்றம் உண் டாகிறது. அவர்களால் ஒலி வார்த்தைகளை உருவாக்குவதையும், வடிவங்களை க்கொண்டு தொடர்புகளை உணர்வ தையும், பல ஆணைகளை ஒன்றாக க் கொடுக்கையில் அவற்றை வரிசை யாகச் செயல்படுத்துவதையும் கிரகி த்துக்கொள்ள இயலுவதில்லை. இத ன் காரணமாகவே அவர்கள் மேற் கொண்டு படிப்பது மிகுந்த கடினமா ன செயலா கி விடுகிறது.

குழந்தைகள் படிக்கையில் அ என்ற எழுத்துடன் து என்ற எழுத்தைச் சேர்த்தால் அது என்ற சொல் உருவாகும் என் பதைப் புரிந்துகொண்டு சொற்களை த் துவக்கத்தில் படிப்பார்கள். ‘எழுத் துக்கூட்டிப்படி’, ‘வாய்விட்டுப் படி’ என்று சிறு குழ ந்தைகளை நாம் கூறுவது அதனால்தான். நாளடை வில் பலமுறை ஏற்கனவே பார்த்த சொற்களை ஒலிவடிவத்தை உண ர்ந்து எழுத்துக்களைக் கூட்ட வேண் டிய அவசியம் இல்லாமலேயே, நி னைவாற்றலின் உதவியால் குழந் தைகளால் படிக்க இயலும். ஆனா ல், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்ப ட்ட குழந்தைகளால், இந்த இயல்பா ன செயலைச் செய்ய முடி யாது.

இவர்கள் எழுத்துக்களை அவற்றின் வரிவடிவத்தைக் கொ ண்டு அடையாளம் கா ண்பது முதல், முன்பு ப டித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்வது வ ரை ஒவ்வொரு கட்டத்தி லும் தடங்கல்களைச் சந்திக்கின்றனர். உதார ணமாக ‘cat’ ‘tac’ ஆக வும், ‘pot’ ‘top’ஆகவும், ‘was’, ‘saw’ ஆகவும் இவர்களுக்கு மாறி விடக்கூடும். அதே போல் ‘சுக்கு மிளகு திப்பிலி’ என்று எழுதினால் இவர்கள் அதை ‘சுக் குமி லகுதி ப்பிலி’ என்று பார்க் கக் கூடும். இதனால் இவர்கள் மிக மெதுவாகவும், ஏகப்பட்ட தப்பும் தவறுமாகவும் படிப்பார் கள். ஒரே விதமான எழுத்துப் பிழைகளைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள். எழுத்துக்களைத் தலைகீழாகவும் இவர்கள் எழுதக்கூடும்.

டிஸ்லெக்சியா குறைபாடு இருப்ப தை சிறுகுழந்தையாக இருக்கும் பொழுதே கண்டறிந்து அதற்கான சிறப்பு ஆசிரியர் களிடம் Dyslexia Specialists Teacher காட்டலாம். இ ரண்டு அல்லது மூன்று வயதுக் குழந்தையால் ‘ABCD’ எல்லா எழுத் துக்களையும் உணரவும், உச்சரிக்கவும் முடியும். குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொ டங்கிய பின்னும் எழுத்துக்களை இனம் காண்பதில் சிக்கல்க ள் இருப்பின் குழந்தை மருத்துவ ர்களிடம் காட்டவேண்டும். இக்குழந்தைகளுக்கு அவ ர்களுக்குப் புரியும்படி கற்றுத்தரும் சிறப்பு ஆசிரியர்களிடம் சில நாட்கள் கற்றுக்கொ ண்டால், அதன்பின் அவர்கள் தாமாகவே படிக்கத் தொடங்கிவிடுவர். பழைய முறைக ளின் எழுதுதல், படித்தல் மட்டுமின்றி இவர் களுக்கு, ஒலி ஒளிக்காட்சிகள் மூலம் கற் றுக்கொடுத்தல் நல்லது.

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்

சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)

விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன் 76 6720 9080 

– செந்தில்குமார்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: