Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காக்கா, ஏன் “கா கா” என்று கத்துகிறது? புராணம் கூறும் வியத்தகு தகவல்!

இராமன் வனவாசம் சென்றபோது, ஒரு நாள் சீதையின் மடி யில் தலை வைத்துத்தூங்கிக் கொண்டிருந்தான். இலக்குவ ன் உணவுக்காக கனிகள் கொ ண்டு வரப்போயிருந்தான்.

அப்போது அவ்வழியாக சயந் தன் என்பவன் வந்தான். தேவ ர் தலைவனான இந்திரனின் மகன் அவன்.

சீதையின் அழகைக் கண்டு மயங்கிய சயந்தன், இராமன் தூங்குகிறான் என்ற தைரிய த்தில், காக்கை உருவம் கொண்டு சீதையின் மார்பைக்

கொத் தலானான்.சீதையின் மார்பு புண்ணாகி, அதிலிருந்து வழிந்த ரத்தம் இராமன் மேல்பட்ட து.

இராமன் திடீரென்று விழித்துக் கொ ண்டான். உலகின் தாயா கிய சீதைக் குத் தீங்கிழைத்த காகத்தின்மீது அவனுக்கு ச் சினம் மூண்டது. உடனே பக்கத்தில் கிடந்த ஒரு துரும்பை எடுத்து அந்தக் காகத்தின்மேல் ஏவினான். அந்தத் துரும்பு பிரம்மாஸ் திரமாக மாறி காக வடிவில் இருந்த சயந்தனைத் துரத்தி யது.

உயிருக்குப்பயந்த சயந்தன், “என்னை க் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்’ என்று அலறிக் கொ ண்டேசிவன், பிரம்மா, இந்திரன் முத லியோரிடம் ஓடி முறையிட்டான். ஆனால் யாராலும் அவனுக்கு அபய ம் தர இயலவில்லை.

மூவுலகும் ஓடிக் களைத்துப்போன காக வடிவிலிருந்த சயந் தன், “இனி நம்மைக் காப்பார் யாரும் இலர். நாம் அழிவது உறுதி. இந்த அஸ்திரத்தை ஏவிய இராமனிடமே அடைக் கலம் புகுவோம்’ என்று முடிவு செய்தான்.

“வண்டு படுதுளவ மார்பனிடைச் செய்த பிழை

உண்டு பல என்று உளம் தளரலேல்! – தொண்டர் செயும்

பல்லாயிரம் பிழைகள் பார்த் திருந்தும் பார்க்கும் கண்

இல்லா தவன்கண் இறை’

என்ற முன்னோர் மொழி அவன் நினைவுக்கு வந்தது.

“அபயம், அபயம்’ என்று இராமனிடமே ஓடினான்.

“காகுத்தனே கா! கா!

கார் வண்ணனே கா! கா!

கருணைக் கடலே கா! கா!

காக்கும் கடவுளே கா! கா!

கதி வேறில்லை கா! கா!”

என்று கதறிக் கொண்டு இராமன் திருவடி களில் விழுந்தான்.

சீதையை அபகரித்த இராவணனுக்கே அடைக்கலம் தருவே ன் என்ற அருட்கடல் இவனை கை விடுவானா? பிராட்டியும் அவனைக் காக்குமாறு இராம னிடம் பரிந்து ரைசெய்தாள். ஆயினும் இராமபாணம் வீ ணாகாதே! தவறு செய்தவர்க ளை இராமன்பொறுப்பான்; ஆனால் ஏவிய பாணம் மீளாதே!

எனினும் அன்னலின் கருணையால் அந்த பிரம்மாஸ்திரம் காகத்தின் ஒரு கண்ணை மட்டும் பறித்துக் கொண்டு இராம னின் அம்புறாத் தூணிக்குத் திரும்பிய து.

(அன்று முதல்தான் காகங்களுக்கெல்லா ம் இரு கண்ணுக்கு ஒ ரே கண்மணி ஆனது. ஆம்;காகங்களின் இரண்டு கண்களும் ஒரே திசையில் பார்க் கப் பயன்படாது. ஏதா வது ஒரு கண் தான் பார்க்கப் பயன்படும்.)

உயிர் தப்பிய சயந்தன் காக வடிவம் நீங்கி, இராமனைப் பலவாறு துதி செ ய்துவிட்டுத் தேவலோகம் சென்றா ன்.

காகாசுரன் பிழைத்துப்போன பின்பு, காக்கைகள் அனைத்தும் ஒன்றுகூடி இராமன்தங்கள் இனைத்தையே அழித்து விடாம ல் காத்ததற்காக நன்றி தெரிவித்தன.பெருமானையும் பிரா ட்டியையும் வாழ்த்தின. “பொறுமை யில் பிராட்டிக்குச் சம மானவர் உண்டோ? தீங் கு நினைத்த வரிடத்தும் கருணைகாட்டியவர்கள் பிராட்டிபோன்றவர் யார் ? இராமன் போன்றவர் யார் ?’ என்று பாராட் டின.

பெண்பாலரை “யார்’ என்று கேட்பதற்கு வடமொழியில் “கா’ என்று கூறுவதுண்டு. ஆ ண் பாலரை “யார்’ என்று கேட்பதற்கு வடமொழியி ல் “க’ என்று கூறுவர். காகங்கள் போட்ட இரை ச்சலில் “காக’, “காக’ என் ற ஒலியே மிக்கொலித்த து.

பெருமானுக்கும் பிராட்டிக்கும் பெருமை சேர்ப்பதற்காக இன்று முதல் நம்இனத்துக்கு “காக’ என்ற பெயரே நிலைக் கட்டும் என்று முடிவு செய்தன காகங்கள்.

பகவானிடம் தீங்கு நினைப்பவர் களுக்கு நமது வாழ்க்கையே பாடமாக அமையட்டும். நாம னைவரும், “பெருமாளே கா! கா! பிராட்டியே கா! கா!’ என்று குர லெழுப்புவோம்என்று அன் று முதல் குரலெழுப்பத் தொடங்கி ன.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: