Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒருவிந்தணுவை மட்டுமே அனுமதிக்கும் கருமுட்டையின் ஆயுள் ஒரு நாள்தான்!- ஆச்சரிய தகவல்

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்ப ட்டால் பெண்களுக்கு மட்டு மே குறை இருப்பதாக கருதப்ப ட்டது. இதனால் குழந்தை பிற க்காததை காரணம் காட்டி பெ ண்ணை ஒதுக்கி வைத்துவிட் டு இரண்டாம்தாரம் கூட ஆண் கள் திருமணம் செய்து கொண் டனர்.

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு

தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக

சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கானசிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூ றும் ஆலோசனையை பின்பற்றுங்க ளேன்.

நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மக ப்பேறு. ஆணின் விந்துவும், பெண் ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழா விட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அ ல்லது 15 நாளில்,பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினை முட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டா கும்.

உடலுறவிற்கு பின் கோடிக்க ணக்கான ஆணின் விந்து அணு க்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன் நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்திஒடும். ‘ஸ்பீட்’ என்னதெரியுமா? ஒரு செ.மீ. கட க்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம்(பெண்ணு றுப்பிலிருந்து கர்பப்பையின் தூர ம்) 15 லிரு ந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந் துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையு ம் முன்பே லட்சக்கணக்கான விந் தணுக்கள் சோர்வ டைந்து விழுந்து விடும். வலிமையும், நக ரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அ டையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அள வே உள்ள) முட்டை யை உயிரணுக்கள் முட்டி, முட்டிமோது ம். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச்சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உட னே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சி னை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக்கொண்டுவிடும் ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!

சாதாரணமாக ஒரு ஆணி ன் ஒரு மில்லி லிட்டர் விந் தில் குறைந்த பட்சம் 4 கோ டி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடுதா ன் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தி யில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதி யாகவும், மனரீதி யாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக் கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். பு ற்றுநோய் அறிகுறிகள் இரு ந்தாலோ, மூளையில் கு றைபாடு இருந்தாலோ விந் தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்ட ச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ் டோஸ்டிரன் சுரப்பு குறை பாடினாலும் விந்தணு உ ற்பத்தியில் பாதிப்பு ஏற்ப டும்.

முருங்ககாயை நன்கு வேக வைத்து சாப்பிட்டு வந்தால் காமம் பெருக்கு ம். விந்து உற்பத்தியை அ திகரிக்கும். முருங்கைப்பூவை நீர் விட்டுக் காய்ச்சி எடுத்து ஒ ரு அவுன்ஸ் பசும்பாலுடன் கலந்து குடித்து வரவும். நெய், மி ளகு,உப்பு,பொன்னாங்கண் ணிக்கீரை, அரைக்கீரை, பசலைகீரை, நறுந்தாலி, நலமுருங்கை இவைகளை சேர்த்து துவையலாக்கி சா ப்பிட நல்ல பலன் கிடைக் கும்.

அரசம்பழம், வேர்ப்பட்டை இவைகளை இடித்து தூள் செய்து பாலில் கலந்து குடிக்கவும். அரசம்பழத்தை இடித்து தூளாக் கி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடவேண்டும். பின்னர் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட தாதுபலம் பெ றும். அமுக்க ராங்கிழங் கு பொடியுடன் தேனும் நெய்யும் கலந்து சாப்பி ட்டு வரவும். கருவேலம ரத்தின் பிசினை எடுத்து சுத்தம்செய்து காய வை த்து லேசாக வறுத்து தூளாக்கி சாப்பிட்டு வர பழைய நிலைமைக்கு வரலாம்.

ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும். காமம் பெருக்கும். விந்து உற்பத்தியை அதிகரிக்கு ம். ஜாதிக்காயை லேசான சூட் டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக்கொள் ளவும். 5 கிராம் சூரணத்தை கா லை, மாலை பசும்பாலில் காய் ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நர ம்பு தளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத் தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக் கும்.

வெள்ளைப்பூண்டு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். இ தேபோல் தர்பூசணி பழம் சாப்பிடுவத ன்மூலம் விந்தணு உற்பத்தி பெருகும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் கூ றப்பட்டுள்ளது. தினசரி ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டு ம். இதுஉடலில் ரத்த ஒட்டத்தின் அள வை அதிகரிக்கிறது. இதனால் டெஸ் டோடிரன் ஹார்மோன் சுரப்பும் அதி கரிக்கு ம். அதேபோல் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு உற்பத்தியும் அதிகரிக்கும். இது விந்தணு உற்பத்தி யை அதிகரிக்கிறது.

– யாகோபு சித்த‍ர்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: