Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளராக வேண்டுமா?

ருநல்ல பணி வாய்ப்புகளைப் பெறு வதானாலும் சரி, நமது எண்ணங்க ளை தெளிவான முறையில் ரசிக்கும் படி வெளிப்படுத்துவதாக இருந்தாலு ம் சரி, ஆசிரியத் தொழிலில் மேம்பட் டு விளங்குவதாக இருந்தாலும் சரி, பேச்சுக்கலை என் பது முக்கியம்.

மைக் முன்பாக வந்து பேசுகை யில், பலருக்கு கை, கால்கள் நடுங்கும், ஏன், குரலேக்கூட நடுங் கும். பேச வந்ததை

மறந்துவிடுவார்கள். சொதப்புவார்கள். சமூ கத்தில் பிரபலமடைந்த பல நபர்கள் கூட, இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டர்கள்தா ன். ஏன், காந்தியடிகள்கூட இந்த சிக்கலை கடந் து வந்தவர்தான்.

எங்கே, நம்மை நிராகரித்து விடுவார்களோ அல்லது கிண்டல் செய்து விடுவார் களோ என்ற பயம்தான், பேச்சுக்கலை யின் போதான பலரின் தடுமாற்ற த்திற்கு பிரதான காரணம்.

உங்களின் பேச்சுக் கலையை மேம் படுத்திக் கொள்வதென்பது உடனடியாக நிகழ்ந்துவிடும் வி ஷயமல்ல. முறையான மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகளி ன்மூலமே, மேற்கூறிய திறனை ஒருவர் சிறப்பாக மேம்படுத்தி க்கொள்ள வேண்டும். எனவே, அது தொடர்பான சில பயனுள் ள ஆலோசனைகளை இக்கட்டு ரை அளிக்கி றது.

பிரபலங்களின் உரையைக் கேட்டல்

பல பிரபலங்கள் பங்கேற்றுப் பே சும் பொதுக்கூட்டங்களில் பங் கேற்பது மிகவும் நன்மை பயக்கு ம். அதுபோன்று பங்கேற்கையி ல் நீங்கள் செய்யவேண்டியவை

* பேசுவதை கவனத்துடன் கேட் க வேண்டும்.

* அவர்கள் எப்படி கோர்வையா க, பாயின்ட்டுகளை எடுத்துப் பேசுகிறார்கள் என்பதை கவனி க்க வேண்டும்.

* அவர்களின் உடல்மொழி யை அவதானிக்க வேண்டும்.

* பேசுகையில் எப்படி வாக்கி யங்கள் மற்றும் சொற்களுக் கு நடுவே இடைவெளி விடுகி றார்கள் மற்றும் கவனத்தைக் கவ ரும் வகையில் எப்படி பொருத்தமான மற்றும் வலிமையான வார்த் தைகளை பயன் படுத்துகிறார்கள் என்பதை கூர்ந்து நோக்க வேண்டும்.

மொழியறிவு மேம்பாடு

வலுவான மொழியறிவு கொண்டவர்தான் நல்ல உரையையு ம் வழங்க முடியும் என்பது ஒரு அடிப்படையான உண்மை. தாராளமய உலகில் ஆங்கில மொழியின் ஆதிக்கம் பற்றி விளக்கிசொல்ல வேண்டியதில்லை. எனவே, ஆங்கில மொழியில் தேவையான புலமைப் பெறுவது அவ சியம். அப்போது தான், உங்க ளது பேச்சு அனைவரையும் க வரும்படியாக இருக்கும்.

ஆங்கில அறிவை வளர்க்கும் முறைகள்

* நல்ல ஆங்கில தினசரிகள் மற்றும் பத்திரிகைகளை தின மும் படித்தல்.

* சில முக்கிய வார்த்தைகளை குறிப்பெடுத்துக் கொள்ளவும் மற்றும் அவ்வப்போது பத்திகளை நன்றாக வாசித்துப் பழகவு ம்.

* ஒரு நல்ல அகராதியிலிருந்து (dictionary) தினமும் 3 முதல் 5 வார்த்தைகளை தினந்தோறும் படித்து, அதை நினைவில் நிறுத்து வதோடு, அதை உங்களின் பேச்சி ன்போது பயன்படுத் தவும்.

* ஆங்கில புத்தகங்களைப் படிக்கையில், முக்கியமான மேற் கோள்களை குறித்து வைத்துக்கொள்ளவும். மேலும், தத்து   வம், அரசியல், இலக்கியம் மற் றும் வரலாறு ஆகிய துறைக ளைச் சார்ந்த பிரபலங்களின் மேற்கோள்கள் புகழ்பெற்றவை. எனவே, அவற்றை மனனம் செய்து வைத்துக்கொள்ளவும். தேவையானபோது, பொருத்த மான இடத்தில், சரியான மேற் கோளை பயன்படுத்தினால், அது உங்களின் உரைக்கு அழகு சேர்க்கும்.

கேள்விகளை எதிர்கொள்ளல்

சிலஇடங்களில் உரையாற்றும்போ து, பார்வையாளர்கள் பல தரப்பின ராக இருப்பார்கள். அதுபோன்ற சம யங்களில், உங்களின் உரை முடிந் தவுடன், நீங்கள் அவர்களிடமிருந் து கேள்விகளை எதிர்கொள்ள வே ண்டியிருக்கும். எனவே, நீங்கள் எ தைப்பற்றி பேசுகிறீர்களோ, முடிந் தளவு அதைப்பற்றி தெளிவாக படித் து செல்லுங் கள்.

அதேசமயம், சில இடங்களில், questioning session இல்லாத போது, உங்களின் உரை பற்றிய feedback கேட்கப்படும். எனவே, அவற்றை எதிர்கொள்வதற்கா ன பக்குவம் உங்களுக்கு இரு க்க வேண்டும்.

குறிப்பெடுத்துக் கொள்ளல்

ஒரு பிரபலம் கலந்துகொண்டு பேசும் பொதுக்கூட்டத்திற் கோ அல்லது கருத்தரங்கிற்கோ சென்றால், வெறும் கையை வீசிக் கொண்டு செல்லக்கூடாது. குறிப்பெ டுக்க தேவையான குறிப்பேடும ற்றும் பேனாவுடன் செல்ல வேண்டும்.

ஒரு பேச்சாளர், தான் உரையாற்ற வரும் முன்னதாக, பல விஷயங்க ளை படித்து, குறிப்பெடுத்துக் கொண் டே வந்திருப்பார். அதற்காக அவர் பல மணிநேரங்கள் செலவிட்டிருப்பார். எனவே, அவரிடமிரு ந்து வெளிப்படும் புள்ளி விபரங்கள் மற்றும் சில முக்கியப் பெயர்கள் மற்றும் ஆண் டு விபரங்களை குறிப்பெ டுத்துக் கொள்ள வேண் டும். இத்தகைய விபரங்க ள், உங்களின் எதிர்கால உரைக்கு பயன்படும் வா ய்ப்புகள் அதிகம்.

உதாரணங்கள், குட்டிக் கதைகள்

உரையாற்றும்போது, பொருத்தமான இடங்களில், சரியான உதாரணங்களைப் பயன்படு த்த வேண்டும். மேலும், சில இடங்களில் சுவையான குட் டிக் கதைகளையும் பயன்படு த்தலாம். அதேசமயம், உதார ணங்களோ அல்லது குட்டிக் கதைக ளோ சொல்வதற்கு தகுந்த இடம் எது என்பதை அறிவது முக் கியம்.

வாய்ப்புகளை உருவாக்குதல்

சிலருக்கு பேசுவதற்கு வாய்ப்பு களே கிடைக்காத மாதிரி இருக் கலாம். ஆனால், அதற்காக மு யற்சிசெய்யாமல் இருந்து விட க்கூடாது. உங்களுக்கான வாய் ப்புகளை நீங்களே உருவாக்க முயல வேண்டும். அப்போது தான், பேச்சுத்திறன் குறித்த அனுபவம் பெற்று, அத்திற னை மேம்படுத்திக் கொள்ள முடியும். இல்லை யெனில், நஷ்டம் நமக்குத்தான்.

இது விதை2விருட்சம் இணையத்திதன் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: