Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டுமா?

உங்கபேரும் வெற்றிப்பெற்ற‍வர்களின் பட்டியலில இடம்பெற விரும்புவராக இருந்தா! கீழ்வரும் வரிகளைக் கொஞ்சம் பொறுமையாக படியுங்க,  

அது ஒரு பெரிய MNC கம்பெனியின் அனுவல் மீட்டிங். ஏன் எதிர்பார்த்த அளவுக்கு சேல் ஸ் ஆகலைன்னு குரூப் டிஸ் கஷன் நடந்துக்கிட்டு இருக் குது. அங்கு இருந்த ஒவ் வொருத்தரும் ஆளாளுக்கு ஒரு ஒரு காரணம் சொல் லிக்கிட்டு இருக்கிறாங்க.

அப்போ அந்த கம்பெனி CEO ஒரு சின்னதா ஒரு கேஸ் ஸ்டடி சொன்னார்.

ஒரு சிச்சுவேஷன் : ஒரு ஊர்ல ஒரு குளம் இருக்கு. அந்த ஊர்ல ஒரு பத்து குடும்பம் இருக்கு. அந்த குளத்தில தினமும்

கடவுள் ஒரு மீன் அனுப்பு வாரு. ஒரு நாளைக்கு ஒரு மீன் தான். காலை யில் மூணு மணியில் இருந்து நாலு மணிக்கு ள்ளே அந்த மீன் வந்திடு ம்.அந்த மீனைப் பிடிக்கி றவங்க, குடு ம்பத்துக்கு ஒரு நாள் சாப்பாட்டுக்கு அந்த மீன் போதும். மீன் கிடைக்காதவங்க, வெளியிலே கஷ் ட்டப்பட்டு வேலை செஞ்சு வந்தாத் தான் வீட்டிலே அடுப்பு எரியும். ஆனா, வெளியிலே வேலை கிடைக்குமா? கூலி, நே ரத்துக்கு கிடைக்குமான்னு எந்த உத்திரவாதமும் இல் லை.

இப்போ, நீங்க அந்த ஊர்ல இ ருக்கிறதா நினைச்சிக் கோங் க! வீட்டில குழந்தைங்க ரெ ண்டு நாளா பட்டினி. ரெண்டு நாளா மீன் பிடிக்கவே போக லை. காலை நேரம். தூக்கம். சோம்பே றித்தனம். வெளியில் வேலை கிடைக்கும்னு நம்பி, எங்கேயும் கிடைக்காம, காசும் கடனுக்கு கிடைக்காம, குழந் தைகளுக்கு சாப்பிட கூட வழிஇல்லாத ஒருநிலை …!

மூணாவது நாள் என்ன செய்வோம்?

கண்டிப்பா மீன் வரும்னு தெரியும். ஒரே ஒரு மீன் தான். வேற யாரும் வந்து பிடிக்கிறதுக்குள்ளே, இன்னைக்கா வது பிடிக்க ணும்னு தோணும் இல்லே..! பசியோட துடிக்கிற பிஞ்சுங்க முகம் ஞாபகம் வரும்போது – தூக்கமாவது ஒன் னாவது….!

மூணு மணிக்கு மேலே தான் வரும்னு தெரியும்.

நீங்க பன்னிரண்டு மணிக் கே போய் அங்கே நிப்பீங்க தானே … அங்கே பார்த்தா.. உங்களுக்கு முன்னாலே இன்னும் அஞ் சாறு பேர் நிக்கிறாங் க….! இருந்தாலும் நம்பிக்கையோட குளத்திலே இறங்கி தே டுவீங்க தானே….? அந்த நேரத்தில, இது ஆச்சு, அது ஆச்சுன் னு சாக்கு, போக்கு சொல்ல மாட் டோம்ல…?

இதே ஒரு மீனுக்கு பதி லா… நூறு மீன் ஒரு நா ளைக்கு வந்தால்………?அங்கே தன்னைப்போல மெத்தனமும், சோம் பேறி த்தனமும் வந்துவிடும்.

“அப்போ , நம்மளை மாதிரி நம்ம போட்டிக் கம்பெனிங்க – ஆயிரம் விக்கிற இடத்துல, நம்ம கம்பெனி ப்ராடக்ட் நூறு கூட தாண்ட மாட்டேங்குது. நாம எல்லாம் இங்க சாக்கு – போக்கு காரணம் சொல்லிக் கிட்டு இருக்கோம். ஏன்? ஒரு மீன் தான் கிடைக்கும்னு நி னைச்சு வேலையைப் பாருங் க. இல்லையா, இதே நிலை மைதான் கண்டினியூ ஆகும் னா, இதே அலட்சியம் தான் வாழ்க்கைனா , நாளைக்கு எல்லார் குடும்பமும் – பசியி லதான் வாட வேண்டி இருக் கும். இதுக்கு அப்புறம் உங்க சாமர்த்தியம்..!” னு சொல்லிட்டு எழுந்து போயிட்டார்.

வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நாம எல்லோரும் இந்த நிலைமைதான் இருக்கி றோம். எதாவது கொஞ்சம் நேரம் கிடைச்சாலும், மனசு நம்ம ளை அடிமைப்படுத்த ஆரம்பிச்சிடும். கூர்ந்து கவனிச் சோம்னா, வாழ்க் கையில எவ்வளவு நேரத்தை வீண டிக்கிறோம், எவ்வளவு அலட்சிய மனப்பான்மையோட இருக்கிறோம் னு நல்லாப் புரியும்.

ஒருபக்கம் ஆண்டவன் சோதனை. நல்ல முயற்சி நடந்துக்கிட்டு இருக் கும்போதே நேரம் சரி இல்லைன்னு ஒன்னும் தர மாட்டாரு. இந்த லட்சணத்துல நமக்கே நம்ம மேலே, நம்ம முன்னேற்றம் மேலே அக்கறை இல்லை னா, ஆண்டவன் கூட, “அட ப்போயா ” ன்னு , ‘அம்போ ‘ன்னு விட்டி டுவாரு.

பெரும்பாலானோருக்கு இ ருக்கிற ஒரே அலட்சியம் – இதுதான் . அட, குளம் நி றைய மீன் இருக்குதுயா, பிடிக்கிறவங்க எல்லோரும் பிடிச்சிட்டு போனதுக்கு அப்புற ம், நாம மெதுவா போய், பிடிப்போம்..!

அதுக்கு அப்புறம் இருக்கிற எல்லாத்தையும் பிடிச்சிட்டுப் போ யிட்டாங்கன்னு, அடுத்தவங்க ளைப்பார்த்துக்கிட்டு பெருமூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டி யது…..

ஒரே ஒரு மீன் தான்னு நினைச் சிக்கிட்டு ஒட்டு மொத்த முயற் சியும் மனதொருமித்து , எல்லா செயலையும் செய்யுங்கள்….! அப்புறம் பாருங்க ! நிஜமாவே உங்க பேரும் வெற்றிப் பெற்ற‍வ ர்களின் பட்டியலில இடம்பெற் றிருக்கும் முயற்சி மெய் வருத்த எனில், இறையும் அதற்குத் தகுந்த கூலி நிச் சயம் தரும்!

– livingextra

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: