பெரிய நடிகர்கள் யாரும் இல்லாமல் வெறும் நகைச்சுவை யை மட்டுமே நம்பி தயாரிக்கப்பட்டு, 1972 ஆம் ஆண்டு வெ ளிவந்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளித் தந்த திரைப்படம்தான் “காசேதான் கடவுளடா. ஏ.வி.எம்.நிறுவ னம் தயாரித்து, கோபு அவர்க ள் கதைவசனம் எழுதி இயக் கிய இத்திரைப்படத்தில் முத் துராமன், லக்ஷ்மி, ரமாபிரபா, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், “ஆச்சி” மனோரமா, “வெண்ணிற ஆடை” மூர்த்தி, எம்.ஆர்.ஆர். வாசு, ஸ்ரீகாந்த், “டைபிஸ்ட்” கோபு, “பக்கோடா” காதர் மற்றும் பலர் நடித்து ள்ளனர். இந்த திரைப்படத்தில்
இடம்பெற்ற கண்ணதாசனின் பாடல்களுக்கு மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வ நாதன் அவர்கள் இசை அமைத்து ள்ளார்.
அதன் கதைச் சுருக்கம்
பணம் கிடைக்காத காரண த்தால் பாதாள அறையில் இருக்கும் பணத்தை அபகரிக்க முத்துராமனும், ஸ்ரீகாந்தும் போடும் திட்டங்களும், அதை நிறைவேற்ற டீக்கடைக்காரர் தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் வீட்டுக்கு வரவழை த்து அவர்கள் அடிக்கும் லூட்டியும் சிரித்து, சிரித்து வயிற் றை வலிக்கச் செய்யும் நகைச் சுவையாகும்.
யாரையும் நம்பாத கோடீஸ்வர பெண்மணியாக மனோரமா, அவ ரது கணவராக வெண்ணிற ஆடை மூர்த்தி, வெ.ஆ. மூர் த்தியின் மூத்த தாரத்து தாரத்து மகனாக முத்துராமன், அவ ரது உறவினராக ஸ்ரீகாந்த், இந்த வீட்டில்தான் மனோ ரமாவின் உதவியாளர் பணிக்கு வருகிறார் லட்சு மி, முத்துராமனுக்கும் லட் சுமிக்கு இடையே காதல் துளிர்விட ஆரம்பிக்கிறது. இதற்கிடையில் முத்து ராமனுக்கு தனது பைத்திய க்காரப் பெண்ணை எப்படியாவது மணமுடித்து விட வேண்
டும் என்ற ஒரு நேக்கத்தோடு எம்.ஆர்.ஆர்.வாசு, நடித்திருப் பார். இவர து பைத்தியக்காரப் பெண்ணாக ரமாபிரபா சிறப் பா தங்களது நடிப்பினை வெளி ப்படுத்தி இருந்தனர்.
தனது மனைவியிடம் கோடிக் கணக்கில் பணம் இருந்தும் தனக்கு வேண்டியதை பெற்றுக் கொள்ள முடியாத மனைவி க்கு அடங்கிய கணவராக நடித்திருக்கும் வெண்ணிற ஆடை மூர்த்தி மூக்குப் பொடிக்காக கண்டவர்களிடமும் 25 பைசா கேட்கும் பாத்திரத்தில் மூர்த்தி நம்மை சிரிக்க வைத்திருக்கி றார். இவர் போதாது என்று சொந்த வீட்டில் முத்துராமனி ன் தங்கையின் நல்வாழ்வுக்கு சிறிது பணம் தேவைப்படுகிறது . அதற்கான முத்துராமனும் ஸ்ரீ காந்தும் சொந்த வீட்டிலேயே கொ ள்ளையடிக்க தீர்மானித்து, இதற்காக தங்களது நண்பனான தேனீர் கடை வைத்திக்கும்
தேங்காய் சீனிவாசனின் உதவியை நாடுகிறார்கள். தேங்காய் சீனிவாசனை சாமியார் வேடத்தில் தங்க ளது சொந்த வீட்டிலேயே தங்கவைத்து தனது சித்தி யின் பாதாள அறையில் உ ள்ள பணத்தை எடுக்க போ டும் திட்டங்கள் அனைத்து ம் நம்மை வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கின்றன•
இத்திரைப்படத்தில் இடம் பெ ற்ற அத்தனை பாடல்களும் தேனில் ஊறிய பலாச்சுளை கள்தான்!
ஒரு பக்திப்பாடலை யாருடை ய மனதையும் புண்படுத்தாம லும் அதன் புனிதம் குலைய மலும் அதே நேரத்தில் கேட்ப வர் கள் அதை ரசிக்கும்படியாக பாடலை அமைக்க முடியுமா எ ன்ற கேள்விக்கு பதிலாக கீழுள்ள பாடலே சான்று! முடியும் என்றே நிரூப்பித்திருக்கின்ற னர். ஆம் பக்திப்பாடல்களோ டு கொஞ்சை சென்னைத் தமி ழையும் கலந்து நம்மை ரசிக் கும் படியாகவும், அதே நேரத் தில் சிரிக்கும்படியாக அமை த்துள்ளதை மனதார பாராட்ட வேண்டும்.
இதோ அந்த நகைச்சுவை கலந்த பக்திப்பாடல்
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே… ஏ..ஏ… மகாதேவா
காலனை உதைத்த என்னப்பனே – உன்னை
காலால் உதைத்தான் கண்ணப்பனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
பாம்பை அடிக்கும் ஆண்டவனே.. (அடேய்)
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
பம்பை அடிக்கும் ஆண்டவனே
உன்னை பிரம்பால் அடித்தான் பாண்டியனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
சைவப்பொருளாய் இருப்பவனே…. ஏ..ஏ…
சைவப்பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே
பிள்ளைக்கறியை கேட்டவனே…
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
காட்சி பொருளாய் நின்றவனே
அன்று சாட்சியை சொல்ல வந்தவனே
அதே அதே சபாபதே அதே அதே சபாபதே
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
ஹர ஹர சிவ சிவ அரோகரா…
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே..ஏ..ஏ..
மகனிடம் பாடம் படித்தவனே
அன்று காமனை கண்ணால் எரித்தவனே
மல கசாயத்தை குடித்தவனே….
மகா விஷத்தை குடித்தவனே
தில்லை வெளியில் ஆடி முடித்தவனே
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
ஆனை முகத்தில் ஒரு பிள்ளை
இன்னும் ஆறு முகத்தில் ஒரு பிள்ளை
நானும் கூட உன்பிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஒரு ஞானம் இல்லாத சிறுபிள்ளை
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
வாயுலிங்கமே அடா புடா பஞ்சலிங்கமே மடா படா
வாயுலிங்கமே சதாசிவா பஞ்சலிங்கமே மகாதேவா
ஜம்புலிங்கமே ஜடாதரா ஜோதிலிங்கமே அரோகரா
விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி