Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தயி(ர்)ரில் இருப்பது இனியவை இருபது

நாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங் களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt)என்று அழைக்கப்படுகிறது. 

ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்

றில் சில …

தயிரின் பயன்கள்

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக் கம் நன்றாக வரும்.

2.தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3.தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர் தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டி ருக்கும்.

6.பாலைத்தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக் டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கு ம் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக் குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்ப து LACTO BACIL. இது ஜீரண சக்தியைதூண் டி வயிற்றின் உபாதைகளை சரிசெய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத் துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பி ட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைக ளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அ திகம் கேடு விளைவிக்காமல் இருக்கத் தான் தயிர் ‘ரயித்தா’ சாப்பிடுகிறோம்.

12.மெனோபாஸ் பருவத்தை எட்டப்போ கும் பெண்களு க்கு தயிர் மிகவும் உபயோகமாகிற து. உடலுக்குத்தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13.வெண்ணெய் காய்ச்சி இறக்கும்பொழு து சிறிது தயிர்சேர்த்தால் நெய்வாசமாக இருக்கும்.

14.புளித்த தயிரை த லையில் தேய்த்து சுத் தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மாறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17.வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18.மண்ணெண்ணெய் வாசம்போக தயிர் கொண்டு கை கழு வலாம். 

19.மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: