ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு பெண், தனது குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவர்கள் இருவரையும் பெட்ரோல் ஊற்றி அந்த பெண்ணின் கணவரே கொலை செய்த சம்பவம் அந்த மாநிலத்தை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியுள்ளது.
அனு தேவி என்ற பெண், ஜார்கண்ட் மாநிலத்தில் தன் கணவருடன் வாழ்ந்து வந்தார். கர்ப்பிணியாகிய அவருக்கு சென்ற வாரம் பெண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அனு தேவியின் கணவருக்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவரது கணவர், நேற்று இரவு அனுதேவி, தன்னுடைய குழந்தைக்கு பால் கொடுத்துக்கொண்டிருக்கும்போது, இருவர் மீதும் பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டார். மறுநாள் காலை தாயும், மகளும் தீவிபத்தால் இறந்துவிட்டதாக கணவர் கன்ஜன் மஸட் நாடகமாடியுள்ளார். போலீஸார் வந்து இருவரது பிணங்களையும் கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கணவர் கன்ஜன் மஸட் ஐ விசாரணை செய்தபோது இருவரையும் கொன்றது கன்ஜன் மஸட் தான் என தெரிந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். ஆண் குழந்தை பிறக்கவில்லை என்பதற்காக தாய், மகள் இருவரையும் கணவரே எரித்து கொன்ற சம்பவத்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பில் உள்ளது.
படித்த செய்தி
Cruel