Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா?

மீரா ஜாஸ்மின், விடிவி கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா ? இல்லையா?

அண்ணன், தம்பிகளான விடிவி கணேஷும், சிம்புவும் ஒருநாள் இரவில் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது, ஆபத்தில் இருக்கும் மீரா ஜாஸ்மினை காப்பாற்றுகிறார்கள். இதனால் ஏற்பட்ட

பழக்கம் காரணமாக சிம்புவையும், கணேஷையும் தனது பிறந்தநாள் விழாவுக்காக அழைக்கிறார் மீரா ஜாஸ்மின்.

பிறந்தநாள் விழாவில் விலையுயர்ந்த வைரமோதிரம் கொடுக்கும் சிம்புவிடம் தனது காதலை கூறுகிறார் மீரா. ஆனால் சிம்புவுக்கு ஏற்கனவே ஆண்ட்ரியாவுடம் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதால் மீராவிடம் பதிலேதும் சொல்லாமல் போய்விடுகிறார். ஒருநாள் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி எஸ்.எம்.எஸ் ஒன்றை சிம்புவுக்கு மீரா அனுப்ப, அதை ஆண்ட்ரியா பார்த்துவிடுவதால் மீரா, ஆண்ட்ரியா இடையே பயங்கர மோதல்.

இதனால் அதிர்ச்சியடைந்த மீரா, விடிவி கணேஷ் மீது போலீஸ் புகார் கொடுக்கிறார். போலீஸாரின் விசாரணைக்கு பின்னர் சிம்புவை காப்பாற்றுவதற்காக மீரா ஜாஸ்மினை திருமணம் செய்துகொள்கிறார் கணேஷ். அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்துகொண்டிருக்கும்போது , கணேஷுக்கு மயில்சாமியுடன் நட்பு ஏற்படுகிறது. மயில்சாமியுடன் சேர்ந்து சினிமா படம் எடுப்பதாக கூறி மீராவின் சொத்துக்களை எல்லாம் அழிக்கிறார் கணேஷ். இதனால் ஆத்திரப்படும் மீரா, கணேஷுடன் சேர்ந்து வாழ்ந்தாரா என்பதே க்ளைமாக்ஸ்.

கதாநாயகனுக்கு உரிய எவ்வித தகுதியும் இல்லாமல் ஒரு படத்தை தயாரித்தால் மட்டும் கதாநாயகனாகிவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்டு படத்தை எடுத்துள்ளார் விடிவி கணேஷ். இவர் வரும் காட்சிகள் எல்லாமே பெரிய கொடுமையாக இருக்கிறது. ரன், சண்டைக்கோழி போன்ற படங்களில் அசத்தலான நடிப்பை கொடுத்த மீரா ஜாஸ்மீனா இது என்றே சந்தேமாக இருக்கிறது. சிறிது நேரமே வரும், சிம்பு, சந்தானம், ஆண்ட்ரியா காட்சிகள் மட்டுமே படத்தின் ஒரே ஆறுதல்.

போடா போடி படத்திற்கு இசையமைத்த தரண், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி சுத்த வேஸ்ட்.

இதுபோன்ற படங்கள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கினால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கும் பழக்கததையே கைவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

****

இங்க என்ன‍ சொல்லுது திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை ஓர் இணையத்தில் படித்தேன்.  படித்த உடன் சற்று வித்தியாசமான தலைப்புடன்  பகிர்ந்தால் எப்ப‍டி இருக்கும் என்று  நினைத்து பகிர்ந்தேன்.

Leave a Reply

%d bloggers like this: