Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தெளிவான குழப்ப‍ம் (தலையங்கம்)

தெளிவான குழப்ப‍ம்

2014, பிப்ரவரி (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்

நம் தேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் களக் காட்சிகளைப் பார்க்கும்போது தலை சுற்றுகிறது. கண் இருட்டுகிறது. மண்டைகாய்கிற து. பைத்தியம் பிடித்துவிடுமோ என்ற பயம் கவ்விக்கொள்கிறது. யாருடன் யார் சேருவார்கள் என்று நம் அரசிய ல் தலைவர்கள் போட்டுக்கொண்டிரு க்கிற கூட்ட‍ணி கணக்கிற்கு இராமா னுஜத்தாலோ, சகுந்தலா தேவியா லோ ஐன்ஸ்டீனாலோ விடை காண முடியாது.

சுதந்திரம் பெற்றுத் தந்த காங்கிரஸ் கட்சி கடையை

திறந்து வைத்துக்கொண்டு கஸ்டமருக்காக காத்துக் கொ ண்டு இருக்கிறது. கூவிகூவி அழைக்கிறது. ஆனால் எவரு மே எட்டிப் பார்ப்பதாய் இல் லை. காம்ரே டுகள் உட்பட குட் டிக் குட்டி கட்சிகளெல்லாம் மூன்றாவது அணா மாற்ற‍ணியா என்ற பெயர்க் குழப்பத் திலேயே சிக்கித் தவிக் கிறார்ள். எந்த அணி எவ்வ‍ளவு தொ குதிகள், யார் பிரதமர் என் பதையெல்லாம் இவர்கள் முடிவு செய்வதற்குள் அடு த்த‍ தேர் தலே வந்துவிடும்.

நம் தமிழகத்தின் தேர்தல் காட்சியில் இன்றுவரை தெளிவு இல்லை. குடும்ப கலகத்தில் ஒரு கழகம் கல ங்கிக் கொண்டி ருக்கிறது. ஐயா சாமி எங்களை யாரா வது பாருங்களேன் என் று கையேந்தி நிற்கிறது காந் தி கண்ட கட்சி. நான் வருவேன் ஆனா வரமாட்டேன், சேரு வேன் ஆனா சேரமாட்டேன். என்று முரண்டு பிடிக்கிறது முரசு கட்சி, மோடி வித்தை யை இங்கு காட்ட‍ மும்முரம் காட்டுகிறது மற்றொருகட்சி.

தானும் குழம்பி மக்க‍ளையு ம் குழப்புகிற காளான்களை விட வேகமாய் முளைக்கும் இந்த கட்சிகளின் நோக்க‍த்திலு ம் கட்சித் தலைவர்களின் லட் சியத்திலும் மட்டும் குழப்ப‍மே கிடையாது. பதவி என்கிற தெ ளிவான இலக்கிற்காக எதையும் செய்யு ம் தெளிவான குழப்ப‍ வாதிகள் இவர்கள்?

கூட்டுக்கும் அவியலுக்கும் என்ன‍ வேறு பாடு? என்ற கேள்வி க்கு ஒத்துப் போகிற போகாதவர்க ளையும் சேர்த் து தேர்தலுக்கு ப் பின் ஆட்சி அமைத்தால் அது அவி யல் என்று உரத்த‍ சிந்தனையுள்ள ஒரு வாசகர் பதில் அளித்திருந்தார். இது உண்மைதான் என்பதை நமது தலைவர்கள் பல தேர்தல்களி ல் மெய்ப்பித்திருக்கி றார்கள். எவர் வேண்டாம் எது வேண்டாம் என்று வாக்களி தோமோ அவர்களோடு கூட்ட‍ணி அமைத்து அந்த ஆட்சியை நம்மீது திணித்திருக்கிறார்கள்.

நமக்குக் கூட்டும் வேண்டாம் அவியலும் வேண்டாம். தேசத்தி ன் வயிற் றை கெடுக்காத நிர்ந்தர மான செரிவான உணவுதான் வே ண்டும். என்பதை வரும்தேர்தலில் தெளிவு படுத் துவோம்.

கறை படிந்த நம் தேசம் பொலிவு பெற வேண்டுமானால் வாக்காளராகிய நாம் தெளிவு பெறவேண்டுமானால் வாக்காள ராகிய நாம் தெளிவு பெற வேண்டும்.

வாக்காளரின் தெளிவு . . தேசத்தின் பொலிவு என்ற உரத்தசிந்தனையை தேச மெங்கும் ஏற்படுத்துவோம்.

இந்த வைர, வைடூரிய வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த‍ சிந்தனை)
தொடர்புக்கு கைபேசி 94440 11105

One Comment

  • Dheenadhayalan, Hyderabad

    Excellent Editorial. Politicians have no principles. They don’t have permanent friends or Permanent enemies. To come to power, they can make any compromise with any body. They don’t even think about people’s or nation’s problems. What they want is power so that they can loot the country by any means. We, the voters also have to be blamed. We take money during election time and elect the corrupt candidate. It is a sad situation.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: