சில பற்கள் அல்லது முழுவதும் பல் கட்டியிருந்தால், சாப்பி ட்டபின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவியபின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும்போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொ ண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமு ம் வெளி யிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்துவிட வேண்டும் .பல்செட்டில் இயற்கையாகவே நு ண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினியை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை
சுத்தம் செய்யவேண்டும்.
1. நாக்கை சுத்தம் செய்வது மிக வும் முதன்மையானதும் அவசி யமானது மாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல் புறத்தில் (Hard palate) உராய்வ தால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனா ல் நாக்கின்பின் பகுதி மிருதுவான Soft palateல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தி யாகும் கிருமி களையும், கந்தக காம் பெளன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின்டை ஆக்ஸைடு அல் லது Cetylpyridinium குளோரை டுகலந்த பற்பசையைப் பயன் படுத்த வேண்டும். டூத் பிரஷ் மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scara- per உப யோகித்து நாக்கின் பின்பகுதி யையும், பற்க ளையும்
சுத்தம் செய்ய வேண்டு ம்.
2.முறையானஇடைவெ ளியில் பல்மருத்துவரி டம் ஈறு பரிசோதனையு ம், பற்களை சுத்தம் செ ய்வதும்மிக அவசியம். பற்களின்நிலைமையும் , ஈறு நன்றாகவீக்கமின்றிஇருக்கிறதா என்பதையும் பல் மருத்துவ ரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களி ல் காரைபடிந்தும், எலு ம்பு தேய்ந்து பற் குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந் த சிகிச்சை அளித்து பற் களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார். புரதச் சத்துள் ள ஆகாரத்தை குறைத் தும், அதே நேரத்தில் ஆ ரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட் டு வந்தால், வாயில் நுண்கிருமிகள்
வளர வாய்ப்பிருக்காது.
3. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகு தியை சுரண்டி வழித்தும், பற் களுக்கு இடையில் சிக்கியுள் ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய்கொப்பளிக்கும் கிருமி நாசினிமருந்து திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர்நாற்றத்தைப்போக்கலா ம் வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண் டும். குறிப்பாக இரவில் தூ ங்கும் போது உமிழ்நீர் சுரப் பது குறைந்து, தூங்கி எழு ம்போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும்,
பேசி ய பின்னும் ஈரப்பத மின்றி வாய் உலர்ந்து விடும்.
4. வாயில் ஈரப்பதம்இல்லையெ ன்றால் துர்நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக் கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொ ப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கி ருமிக ளையும் அதன் கழிவுகளையும் அகற்ற லாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவை ப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமா க்கி துர்நாற்றத்தை போக்கலாம். கிருமிநாசி னியாக வாய்கொப்பளிக்கும் மருந்தையும் பய ன்படு த்தவேண்டும்.
Reblogged this on My blog- K. Hariharan and commented:
nice blog with lot of informative articles.