Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“குரூபமான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன?” – மஹா பெரியவா

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறை த்துகொண்டேவர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்க ளை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரு ம்பப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப் போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரே லென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால் கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூ க்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டுவந்து, குரூப மான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை

அது தெரிந்து கொண்டிருக்கிறது!

அஷ்டாவக்ரர் எட்டுக் கோணலாக, மஹா குரூபமாக இரு ந்தார்; அவரை வித்வான்கள் தேடித்தேடிப் போய் தரிசனம் ப ண்ணினார்கள். இன்னும் எத்தனையோ மஹான்கள், ஞானிகள், ஸித்தபுருஷர்க ள் ரூபத்தைப்பார்த்தால் விகாரமாக அச டுமாதிரி, பயப்படுகிற மாதிரியெல்லா ம் இருக்கும். ஆனாலும் தர்சனம், தர்சன ம் என்று அவர்களை ஜனங்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்; திரும்பத் திரும்பப் பா ர்க்கிறார்கள்; வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் ஏன்? அவர்களுடைய அன்புள்ளம், அருளுடைமைதான் கார ணம்.

நாம் திரும்பித் திரும்பி விரும்பிப் பார்க்கும்படியாக இருப்பது தான் அழகு” என்ற Definitionபடி இவர்கள்தான் அழகு என்று சொல்ல வேண்டும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று, இவர்களுடைய உள்ளத்திலிருக்கிற அன்பு சரீரத்தின் அவலக்ஷணங்க ளையும் மீறி ஏதோ ஒரு அழகை அ ள்ளிப்பூசிவிடுகிறது என்றுஅர்த்தம்.

மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதெ ன்றால், ‘உயிருள்ள ரூபமாக இருக் கிற ஒன்றின் அழகு அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது; அ ன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்தி ருக்கிற நிலையில் ரூப அழகே எடு பட்டுப்போய் அன்புதான்அழகாகத்தெரிகிறது’ என்றுஆகிறது.

நமக்கு ஒன்றைப் பார்ப்பதி ல் ஆனந்தம் ஏற்படுவதால் தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத் தை அளிக்கவல் லதில் த லைசிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்து க்கு ஸமமாக எதுவும் இல் லை. இதனால் ஆனந்தத் தைத் தரும் அன்பே அழ காகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசை யோடு பார்க்கப் பண்ணுகிறது.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Leave a Reply

%d bloggers like this: