இந்தியாவின்நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வுமற்றும் மீள்குடியேற்றச்சட்டம் (Land Acquisition and Rehabilitation & Resettlement Bill) என்று அறிமுக ப்படுத்தப்பட்டது . இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரை யறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. சட்டம் பற்றிய
முன்னுரை:
.
பொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பா ட்டிற்காக தனியார் நிலங்க ளை, பயன்பாடு மற்றும் அ தன்மூலம் கிடைக்கும்வரு வாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகபடுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர் பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம், 1984 என அழைக்கப்படுகிறது.
.
சட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:
.
1. முதல் அறிக்கை:
நிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கைய கப்படுத்தும்முன், அவ்வாறு கை யகபடுத்துவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ் க்கண்டவற்றில் அறிவிக்க வே ண்டும்.
.
அ. அரசிதழ் ஆணை
.
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட் டார மொழியில் இருக்க வேண்டும்.
இ. நிலம் அமைந்துள்ள பகு தியில், பொதுமக்களுக்கு வ சதியான இடங்களில் அறிவி க்கை.
.
இத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட் ட அறிக்கை வெளியான நா ள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடி ப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட
வேண்டும்.
.
2.ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:
.
அறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடையஅல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறி விப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சே பணைகளை மாவட்ட ஆட்சியரி டம் தெரிவிக்க வேண்டும்.
.
நிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகபடுத்துவது, கையகபடு
த்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தது அல்லது அந்த இட த்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டு த்தலம், சமாதிகள் அல் லது மயானங்கள் இரு ப்பது போன்ற காரண ங்களுக்காக நிலம் கையகபடுத்துவதற்கு ஆட்சேபணை தெரி விக்கலாம்.
இந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு பதில் வேறு
மாற்று இடத்தை கையகப டுத்துமாறு மாவட்ட ஆட்சி யருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆ லோசனைகளுக்கு மதிப்ப ளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சை யாக முடிவெடுத்ததாக உயர் மன் றத்தில் வாதாடலாம்.
அறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கரு த்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவி
ர்க்கலாம்.
3. கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
கையகபடுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவ ற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்
அ. அரசிதழ் ஆணை
ஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ் கள், அவற்றுள் ஓன்று வட்டா ர மொழியில் இருக்க வேண் டும்.
.
இ. நிலம் அமைந்துள்ள பகுதி யில், இந்த அறிக்கை அறிவிப் பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகபடுத்த ப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகபடு த்தபடும் நோக்கம் ஆகியவற்
றை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:
கையகபடுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட் ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைக ளில் உள்ள ஆட்சேபணைகளை தன்னிடம் குறிப்பிட்ட தேதி யில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்று
ம் சம்பந்தபட்ட அனைவரு க்கும் தனித்தனியே அறி விப்பு அனுப்பவேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரி விக்க 15நாட்கள் கால அவகாசம் தர வேண் டும்
5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:
சம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்டபின் கையகப
டுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகி யவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறு தி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலி ருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வே ண்டும்.
சந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப்பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்ப டுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழ
ப்பீடாக வழங்கப்படும்.
தீர்வுக்கான வழிமுறைகள்:
எந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்?
சட்டபிரிவு 4: முதல் அறிக்கை
சட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:
சட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின்
உறுதி
சட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை
சட்டபிரிவு 28A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்
யாரிடம்/எப்போது புகார் செய்யலாம்?
மாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தி யடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை
செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.
வழக்கை எவ்வாறு பதிவுசெய்வ து?
சம்பந்தப்பட்டவர்களின் கோரிக் கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்தி ற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதி மன்ற கட்டணங்கள் செலுத்த தே வையில்லை. இழப்பீட்டை அதி கரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட் சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்.
என்னினும் இழப்பீட்டு அள வை நீதிமன்றம் குறைக்கமுடி யாது.
அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
இழப்பீட்டு தொகையை அதிக ரித்து நீதிமன்றம் ஆணையிட் டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட் சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந் து 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செ ய்யலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்க ளுக்குள் உச்சநீதிமன்றத்தி ல்மேல் முறையீடு செய்ய லாம்.
மாற்று வழிமுறைகள்:
இந்த சட்டத்தின்கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை எ ன்று இருந்தது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது
தொ டர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நி றைவேற்றியது. இதற்கு ஜனாதி பதி பிரணாப் முகர்ஜி கடந்த 27 .8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி வி ட்டார். மசோதா பற்றியும் , இது ப ற்றிய தகவல்கள் என்ன என்ப தையும் அடுத்தபதிவில் விரிவாக பார்க்கலாம்.
– P.இராஜா