Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வ‌ழக்க‍றிஞரை தூக்குமேடைக்கு அனுப்பிவிடுவேன் என்று மிரட்டிய நீதிபதி!

வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக் கப்பட்டார். வழக்கறிஞர், மூதாட்டி யை நோக்கி, “திருமதி. மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?”

மூதாட்டி, “உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிரு ந்தே உன்னை எனக்குத் தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கி றாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படு த்திக் கொண்ட பின் அவர்களை

தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத் துக் கொண்டிருக்கிறாய்! ஆக வே, உன்னை எனக்கு மிக நன் றாகவேத் தெரியும்!” என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்க றிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சு ட்டிக் காட்டி, “திருமதி. மரகத ம், இவரை உங்களுக்குத் தெரி யுமா?” என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,”ஏன், ரமே ஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோ ம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிட மும் நல்லு றவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக் கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!” என்று கூறியதி ல் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்க றிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலி ல், “உங்கள் இருவரில் எந்த ராஸ்க லாவது அந்த கிழவியிடம் ‘என்னை த் தெரியுமா’ என்று கேட்டால் நிச்ச யம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!” என்றார்.

– நகைச்சுவையுள்ள இச்சிறுகதையை படைத்தவர் அனந்த நாராயணன் ராமசாமி, முகநூல்

Leave a Reply

%d bloggers like this: