Wednesday, December 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எந்த வயதில் ஒரு பெண் கருத்தரிக்கலாம்?

ஒவ்வொரு பெண்ணில் வாழ்விலும் கர்ப்பம்டைதல் என்பது அவளுக்கு எல்லையற்ற மகி ழ்ச்சியை அளிக்கும் ஒன்றாக வே இருக்கின்றது. அது அந்த பெண்ணிற்கு மட் டுமல்லாது அந்த குடும்பத்தில் உள்ள அ னைவருக்கும் பேரின்பத்தை அளிக்கக் கூடிய ஒன்றாக

இருக்கின்றது.

ஒரு பெண்ணின் வயது அவள் கர்ப்பமடைவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஆகவே, கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை கண்டறிவது மிகவும் முக்கி யமான ஒன்றாகும். ஒரு பெண்ணி ன் வாழ்வில் கர்ப்பம் அடைதல் என் பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும். கர்ப்பம் அடை வதற்கு முன்னதாகவே சரியாக திட்டமிடுவ து ஆரோக்கியமான கர்ப்பத்தை அ டைய உதவும். உங்கள் கர்ப்பகாலத் தை சந்தோஷமாகவும் ஆரோக்கிய மாகவும் வைப்பதற்கு பல வழிகள் உள்ளன.

கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இது உங்களு க்கு அமைதியான கர்ப்ப காலத்தையும் ஆரோக்கி யமான குழந்தையையும் அளிப்பதற்கு தேவை யான முக்கியமான ஒன்றாகும். கர்ப்பம் அடைவதற்கான தகுந்த வயதை அறிந்து வைத்து கொள்ளுவது உங் களுக்கு மனரீதியான மற் றும் உடல்ரீதியான பலன்களை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

இது உங்களை ஆரோக்கியமா க வைப்பதோடு மட்டுமல்லாது உங்கள் குழந்தையின் சரியான மூளைவளர்ச்சிக்கும் மற்றும் உடல்வளர்ச்சிக்கும் உதவிபுரியு ம். பாதுகாப்பான வயது என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வே றுபட்டே இருக்கும். பொதுவாக 30 வயதிற்குமுன் கர்ப்பம் அ டைவது சிறந்த வயதாகும். 30 வயதிற்கு பிறகும் கர்ப்பம் அ டையலாம். ஆனால், அது குழந்தைக்கும் தாய்க்கும் பல பிர ச்சனைகளையும் ஆபத்து களையும் அதிகரிக்க செ ய்யும். உங்கள் வயது 30 க்குள் இருந்தால் அந்த குழந்தையை பராமரிக் க தேவையான அதிக சக்தி யும் வலிமையும் இருக்கு ம். 35 வயதிற்கு பின் உங் களின் கருவளம் குறைய த்தொடங்கிவிடும் இதனால் கர்ப்பம் அடைவதற்கான வாய்ப் புகள் குறைந்து விடக் கூடும். எந்த வயதில் கர்ப்பம் அடைந்தாலு ம் அதற்குரிய நன் மைகளும், தீமைக ளும் நிச்சயம் இருக் கும். நீங்கள் கர்ப்பம் அடைவதற்கான தகு ந்த வயதை கண்டறியும் சூழ்நிலையில் கீழேயுள்ள சிலவற் றை

மருத்துவரீதியான ஆ ரோக்கியம் கர்ப்பம் அ டைவதற்கான வயது எ ன்பது ஒவ்வொரு பெண் ணின் உடல்நிலையை பொறுத்தே இருக்கும். நீ ங்கள் கர்ப்பம் அடைவத ற்கு முன்பு மருத்துவ பரி சோதனை செய்து கொள் ளுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதன் மூலம் உங் களின் கர்ப்பத்தை பாதிக்கும் ஏதேனும் பிரச்சனையை உள்ள தா என்பதை கண்டறிய உத வும்.

உங்கள் கணவரின் ஆரோ க்கியம் கர்ப்பம் அடைவத ற்கான வயதை கண்டறியு ம் பொது உங்கள் கணவரி ன் ஆரோக்கியத்தையும் க ண்டறிவது மிகவும் அவசி யமான ஒன்றாகும். ஏன் னெனில், ஆரோக்கியமான குழந்தையை பெற நீங்களும் உங்கள் கணவரும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாகும்.

வாழ்க்கை முறை கர்ப்பம் அடைவதற் கான வயதை கண் டறிவதற்குமுன் உங் கள் வாழ்க்கைமுறை யை கருத்தில் கொள் ள வேண்டும். உங்க ள் வாழ்க்கை முறை உங்களை மட்டுமல்லாது உங்கள் குழந்தையையும் பாதிக் ககூடும். குடும்பம், வேலை, நிதிநிலைமை, எதிர்கால திட்ட ம் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கர்ப்பம் அடைவ தற்கான வயதை தேர்ந்தேடுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: