Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்த பிரசன்னா

ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வர வழைத்த பிரசன்னா

விமல், அனன்யா, சூரி ஆகி யோர் சூப்பர் மார்க் கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வரு கிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மே னனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும்

ஒரு வருக்கொருவர் உயிருக்குயிராக காதலித் து வருகின்றனர்.

மறுமுனையில் பெரிய தொழில திபரான பிரசன்னா, அவருடை ய கம்பெனியில் வேலை செய்யு ம் ஓவியாவுடன் மிகவும் நெருக் கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றி திரியும் பிரச்சன்னாவி ன் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார் ஓவியா.

இந்நிலையில், பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி இனியாவை பேசிமுடிக்கின்றனர் . இந்தவேளையில் ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து அவளுடன் நெருக் கமாக இருக்கிறார் பிரசன்னா. இதை தன்னுடைய செல்போனி ல் படம் பிடித்தும் வைத்துக் கொள்கிறார்.

பின்னர், ஓவியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இனி யாவைப் பார்க்கச் செல்கிறார் பிரசன்னா. அப்போது டிரைவ ர் மூலமாக பிரசன்னாவுக்கு இனியாவு டன் நிச்சயதார்த்தம் ஆன விஷயம் ஓவியாவுக்கு தெரியவர, பிரசன்னா வை போ னில் அழைக்கிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறும் அவள், தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இரு வருக்குமுள்ள உறவை வெளியே சொல் லிவிடுவேன் என மிரட்டுகிறாள்.

பயந்துபோன பிரசன்னா ஓவியாவை சந்திக்க விரைந்து வருகிறான். இருவரு ம் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒருவருக் கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இறுதியில் பிரசன்னா, ஓவியாவிடம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பிக்க அதன்பிறகு அமைதியாகிறார் ஓவியா. பிரசன் னாவிடம் கோபித்துக்கொண்டு வெ ளியே சென்று விடுகி றார்.

பிரசன்னாவும் கோபத்தில் எழுந்து போக, அவருடைய செல் போன் அங் கேயே விழுந்துவிடுகிறது. இந்நி லையில், அங்கு வரும் விமல் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு செ ல்கிறார். ஓவியாவும், பிரசன்னாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந் த செல்போனில் இருப்பதால் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டு ம் என்று தீவிரமாக தேடி வரு கிறார் பிரசன்னா. இறுதியில், விமல்தான் அதை எடுத்தவர் என்று தெரியவர, விமலும் அ தைக் கொடுக்க வருவதாகக் கூறி விட்டு, கமலா தியேட்டரு க்கு வருகிறார். ஆனால், பிரச ன்னாவிடம் அதைக் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறார்.

ஒருகட்டத்தில் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, அதை சார்ஜ் செய்வத ற்காக தன்னுடைய நண்பன் கடை க்கு செல்கிறார் விமல். அங்கு தன து நண்பனிடம் செல்போனை கொ டுக்கிறார். அவர் செல்போனில் இரு க்கும் வீடியோவை பார்த்து, அதை யூடியூப்பில் அப்லோடு செய்துவிடு கிறார். இதனால் அவமானம் தாங்க முடியாத ஓவியா தற்கொலைக்கு முயல்கிறார். பிரசன்னாவின் திரும ணமும் தடைபட்டு விடுகிறது.

இறுதியில் ஓவியாவும், பிரசன்னாவும் ஒன்று சேர்ந்தார் களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விமல் வழக்கம்போல் எல்லா படங் களிலும் வருவதுபோல் அப்பாவியா ன முகத்துடன் படம் முழுவதும் வல ம் வருகிறார். இவரது முகபாவணை யை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலிப்படைந்து விட்டது. இனிமேலா வது இவரது நடிப்பை மாற்றிக் கொ ண்டால் ரசிக்கலாம். அந்த அளவுக் கு இந்த படத்தில் சொதப்பியிருக்கி றார்.

பிரசன்னா தன்னுடைய கதாபாத்திர த்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். ஓவியா, இனியா, அனன்யா என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், இவர்க ளுக்கு நடிப் பதற்கு வாய்ப்பு குறைவே. அனைவருடைய கதாபாத்திர த்தையும் வீணடித்திருக்கிறார் கள். ஓவியாவை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கி றார்கள்.

சூரி, தம்பி ராமையா என கா மெடி ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் காமெடிக்கு பஞ்ச மே. மொபைலில் வரும் பஞ்ச் டயலாக்குகளையே காமெடி என்ற பெயரில் பேசி சூரி கடுப் பேத்தியிருக்கிறார். வழக்கம் போல், இவர் தனி டிராக்கில் காமெடி செய்திருந்தாலாவது ரசித்திருக்கலாம்.

செல்போன் என்பது இப் போது எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்றாட தேவையான ஒன்றாக மாறிவிட் டது. அதை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார் கள். அதனால் ஏற்படு ம் விளைவை இயக்கு னர்இப்படத்தில் சொல் லியிருக்கிறார். இந்த கதையை சொல்ல 15 நிமிடகாட்சிகளே போ துமானது. ஆனால், 2 மணி நேரம் படத்தை ஓட்டுவதற்காக காட்சி களை இழுஇழுவென்று வைத்து போரடிக்க வைத்திருக்கி றார். இயக்குனர் சொல்ல வந்த விஷயம் நல்லதாக இருந் தாலும் அதை ரசிக்கும் படியாக வைப்பதில் கோட்டை விட்டிருக் கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுத ல் கவனம் செலுத்தியி ருக்கலாம். போஜன் கே.தினேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது வலுசேர்த்திருக் கிறது.

மொத்தத்தில் ‘புலிவால்’ மொட்ட வால்.

(புலி வால் விமர்சனத்தை கொஞ்சம் வித்தியாசமாக இங்கே பகிர்ந்தேன். )

இது விதை2விருட்சம் இணையதின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: