Sunday, June 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு…?

‘ஊர்ல நம்ம வீட்டுலயும் ‘வாட்ட ர் ப்யூரிஃபையர்’ போட்டா ச்சுல. நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இப்ப இந்த மெ ஷினுங்க தான் ஓடிட்டிருக்கு. உங்க ‘ மினரல் வா ட்டர்’ எல்லாம் தோ த்துடும். சும்மா கல் கண்டு மாதிரி இருக்கும் ல ….” 

”என்னது, அந்த வரப்பட்டிக்காட்டுல வாட்டர் ப்யூரிஃபையர் பயன்படுத்தறீ ங்களா?”

”பின்ன என்னப்பா. பத்து, பதினைஞ்சு வருஷத்துக்கு

முன்ன வாய்க்கா தண்ணி யைக்கூட அள்ளிஅள்ளி குடி ச்சுட்டு இருந்தவங்கதான். ஆனா, இப்ப தண்ணி சரியா இல்ல. நிலத்தடி நீர் கெட்டுப் போச்சு. போர் போட்டு எடுக்க ற தண்ணியைகூட அப்படியே வாயில வெக்க முடியல. சுத் தமான தண்ணியா குடிக்க ணும்ல…”

-நகரங்களில் மட்டுமல்ல… இன்று தமிழகத்தின் பெரும்பா லான கிராமங்களிலும்கூட மினரல் வாட்டர் பாட்டில்கள் பளபளக்கின் றன. வீட்டுக்கு வீடு டிஷ் ஆண்டெ னா வைத்திருப்பதுபோல… ‘தண் ணீர் சுத்திகரிக்கும்’ இயந்திரங்க ளையும் மாட்டி வைத்திருக்கிறார்க ள்.

நியாயம்தான்… சுத்தமான குடிநீர் அவசியம்தான். ஆனால், ஒட்டு மொத்த தண்ணீரின் சுத்தத்தைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படாம ல், நாம் குடிக்கும் தண்ணீர் மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்கிற நிலைப்பாடு… எந்த அளவுக்கு சரி?

நீர் நிலைகளைப் பாதுகா த்து காலாகாலத்துக்கும் ஜீவராசி களுக்கான நீர்த் தேவையை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கம் தான்.ஆனால், ‘தனியார்20  ரூபாய்க்கு மினரல் வாட் டர் பாட்டில் விக்கறாங்க… உங்கள் அன்புச் சகோதரி யான நான் 10 ரூபாய்க்குக் கொடுக்கிறேனே…!’ என்று முதல்வரே பெருமை அடித்துக் கொண்டிருக்கும்போது… வேறென்ன சொல் ல!

இது, இன்றைக்குச் சரியாக இருக்கலாம். நாளைக்கு..?

ஆம், உடனடித் தேவைக்கு சரி. ஆனால், நீண்டகால அடிப்படையில் பார்த்தால், ‘கடல்நீரைச் சுத்திகரித்து குடி நீராக்குகிறோம்…’, ‘வீட்டுக்கு வீடுதண்ணீரைச் சுத்திகரிக்கிறோம்’ என் கிற பெயரில், இருக்கின்ற நீரையெல்லாம் சுத்திகரிக்க ஆரம்பி த்தால், அதன் எச்சமாக தேங்கும் கழிவுநீர், திரும்பத் திரும்ப பூமிக்குள் அனுப்பப்பட்டு, ஒரு கட்டத்தில்… ”இந்தத் தண் ணியில தொடர்ந்து கழிவு நீர் சேர்ந்ததால… 10 ஆயிரம் டிடி எஸ் இருக்கு. இதை சுத்தப்படுத்தவே முடியாது. வேணும் னா… செவ்வாய் கிரகத்துல தண்ணியிருக்காம். ஒரு கிரவு ண்ட் 500 கோடி ரூபாய்தான். பேசாம அங்க போயிட்டா… தண்ணி என்ன, பைப் போட்டு தேவலோக அமிர்தத்தையே கூட எடுத்துக்க லாம். நானெல்லாம் ஏற் கெனவே ஏழு கிரவு ண்ட் வாங்கிப் போட்டுட்டேன். என்ன… நீங்க நாலு கிர வுண்ட் புக் பண்றீங்களா. ..?” என்று நம்ம ‘டெல்லி’ கணேஷ் உள்ளிட்ட பெரி யதிரை, சின்னத்திரை நட்சத்திரப் பட்டாளங்கள் டிவி-யில் தோன்றி உங்களிடம் வீட்டுமனை விற்கவேண்டிய நிலை வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை!

காற்று, தண்ணீர் இந்த இரண்டும் இயற்கை அளித்த இலவச ங்கள்.. ஆனால், கால ஓட்டத்தி ல் குடும்ப பட்ஜெட்டின் செலவுப் பட்டியலில் அவையும்கூட இடம் பி டிக்க ஆரம்பித்துவிட்டன! இயற்கையின் அருட்கொடைக ளை முறையாகப் பயன்படுத்தாதன் விளைவு… இலவசமா கக் கிடைத்து வந்த தண் ணீர் இன்று விலைக்கு வாங்க வேண்டிய பொரு ளாக மாறி யிருக்கிறது. ஊதாரித்தனமாக செலவு செய்பவர்களை, ‘ காசை தண்ணியா செலவு செய் றான் பாரு’ என உவமை யாகச் சொல்வார்கள். ஆ னால், இன்று தண்ணீருக்காக காசு செலவு செய்யும் நெருக்க டியான நிலை!

குடிநீருக்கே இந்த நிலை என் றால்… விவசாயத் தேவைக்கு?

வேரில் வெந்நீர் ஊற்றிவிட்டு, பழங்களை எதிர்பார்த்து அண் ணாந்து பார்த்துக் கொண்டிருக் கிறோம். நீராதாரங்கள் அனை த்தையும் அழித்துவிட்டு, நீரை எதிர்பார்த்தால் எப்படி கிடைக் கும்? மலைகளில் இருந்து மர ங்களை அழித்தோம்… பிறகெ ப்படி மேகம் சூழ்கொள்ளும்?

மலைகளில் உருவாகி ஆறாக மாறி, குளம், குட்டைகளைக் குளிர்வித்து, ஏரி நிறைத்து, குடிநீர் கொடுத்து, கடலில் கலக்கும் தண்ணீர், அதன் பாதையில் பயணித்த வரை யில் பிரச்னை இருக்கவில் லை. ஆனால், வயல்காடு, ஆறு, குளம், குட்டை, ஏரி, கண்மாய் என்று அனைத்து நீராதாரங்களையு ம் ஆக்கிர மித்து பெரும்பெரும் பங்களாக்கள், அடுக்குமாடி குடியிருப்பு கள், ஏர்போர்ட், நீதிமன்றங்கள், நட்சத்திர ஹோ ட்டல்கள், ஷாப்பிங் மால்கள், தொழிற்சா லைகள் என்று அமைக்க ஆரம் பித்த பிறகுதான், பொறுமை இழ ந்து, தன் பாதையை மாற்றிக் கொண்டுவிட்டாள் தண்ணீர் தாய்! கடை சியில், அவள் தனது பயணத்தை நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

விளைவு, பாசனம் இல்லாமல் கரு கிக் கிடக்கின்றன பயிர்க ள். முடங்கிக் கிடக்கிறது விவசாய ம். தை மாதத்திலேயே தலைவிரித்தாடும் பஞ்சம், கொளுத் தும் கோடையில் எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார் க்கவே நடுங்குகிறது நெஞ்சம்.

கோடையைச்சமாளிக்க, என்ன செய்யலாம்..? என்பதற்கான ஆய்வுப் பணிகளை போர்க்கா ல அடிப்படையில் தொடங்கி யிருக்கிறது, தமிழக அரசு. அப்படி ஆய்வுக்காகச் சென்ற அதிகாரிகள், பிரச்னையின் வி ஸ்வரூபத்தை கண்ட அதிர்ச்சி யில் ஆடிப்போய் கிடக்கிறார் கள்.

‘நீரை நிலத்துல தேடாதே… வானத்துல தேடு’!

யாரால் நிகழ்ந்தது இந்தப் பேராபத்து..? ‘தீதும் நன்று ம் பிறர் தர வாரா..’ என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை மனதில் நிறுத்தி னால், இதற்கு முழுப்பொ றுப்பு ஏற்க வேண்டிய து, நாம் ஒவ்வொருவரும்தான்.

நீரை நிலத்துல தேடாதே… வானத்துல தேடு’ என்பார், ‘இய ற்கை வேளாண் விஞ் ஞானி’ நம்மாழ்வார். அ தாவது, மழை பொழிய என்ன செய்ய வேண் டுமோ, அதைச் செய்யுங்கள் எ ன்பதுதான் அதன் உட் பொருள். இனியாகிலும், நெருங்கி வரும் பேராபத்தைத் தடுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண் டாமா? தும்பை விட்டு வாலைப் பிடித்திருந்த நாம், தற்போது வாலையும் அல்லவா கைவிட் டுக் கொண்டிருக்கி றோம்.

‘எஞ்சியிருக்கும் தண்ணீரையா வது காப்பாற்றினால்தான்… இனி எதிர்காலம் என்கிற எச்சரி க்கை உணர்வு, நம் ஒவ்வொரு வருக்குள்ளும் ஊற வேண்டும். அது பெருவெள்ளமாகப் பாய்ந் து ஆட்சிப்பொறுப்புகளில் அமர் ந்து கொண்டு, சூழலைப் பற்றி யும்… எதிர்கால சந்ததி பற்றியு ம்… இயற்கைச் சுர ண்டல்கள் பற்றியும் கண்டுகொள்ளாமல், பொதுச் சொத்து க்களைச் சுருட்டுவதை மட்டுமே குறிக்கோ ளாக மேற்கொண் டிருப்போரை சுருட்டிக் கொண்டு போக வேண்டும்…’

இப்படியெல்லாம் வீராவே சம் கொண்டு சாபம் விடலா ம்தான். ஆனால், அதைவிட முக்கியம்… நிஜத்தில், நாம் ஒவ்வொ ருவருமே களத்தி ல் இறங்க வேண்டும் என்ப துதான்!

இருக்கும் நிலத்தடி நீரை, கிடைக்கும் மழை நீரை எப்படியெ ல்லாம் சேமிக்கலாம் என்பதை அறிந்துக் கொண்டு, நடை முறைப்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட நுட்பங்களை, உங்களுக்கு அறிமுகப்படுத் தவே… ‘தண்ணீர்… தண்ணீ ர்…’ எனும் இந்தப் புதிய தொ டர் இங்கே பாய்ந்து வருகிற து. நீர் மேலாண்மை வல்லு நர்கள், பொறியாளர்கள், வி வசாயிகள்… என பலதரப்ப ட்டவர்களும் மிரட்டும் வறட் சியை விரட்டும் தொழி ல்நுட்பங்களை உங்களிடம் பகிரப் போகிறார்கள்.

நிலங்களைக் குளிர வைக்கும் குளங்கள்!

இதைச்சொன்னதுமே … ‘என்ன பேசி என்ன பயன். சொல்றதுக்கு நல்லாத்தான் இருக் கும். ஆனா, நடைமு றையில இதெ ல்லாம் சாத்தியமா?’ என்கிற சந்தேகக் கேள் விகள் இந்நேரம் அனைவரிடமுமே மையம் கொண்டிருக்கு ம். அதில் தவறில்லை. ஆனால், அனைத்தும் நடைமுறை சாத்தி யம்தான் என்பதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

ஆம். மகாராஷ்டிர மாநிலத்தின் , ராலேகண்சித்தி எனும் வறண் ட கிராமத்தை, இன்றைக்கு வள மான விவசாய பூமியாக அண் ணா ஹஜாரே மாற்றியிருக்கி றாரே! அதே மாநிலத்தில் புனே அருகில் இருக்கும் ஹிவ்ரே பஜார் எனும் வறண்ட கிராமம், அந்த ஊர் நல்ல உள்ளங்கள் சிலரின் முயற்சியால் இ ன்றைக்கு சோலைவன மாக மாறியிருக்கிறதே! எல்லாமே, நீர் மேலாண் மை எனும் மந்திரத்தால் விளைந்த உண்மையே!

இவையெல்லாம் தொ லை தூர நிஜங்கள். இங் கே உங்கள் கைக்கு எட்டும் தூரத்தில் திண்டுக்கல் மாவட்டத் திலேயே, நேரடி சாட்சிகளாக நின்று கொண்டிருக்கின்றன பத்துக்கும் மேற்பட்ட குளங்கள்!

நம் முன்னோர்கள், குள ங்களை முறையாக தூர்வாரி, வண் டலை நிலங்களில் போட்டன ர். நீரும் நிறைந்தது, நி லமும் விளைந்தது. அ ந்த முறையைக் கைவிட்டதன் விளைவு, குள மும் காய்ந்து, நிலமும் வறண்டு கிடக்கிறது. குளங்கள் விவ சாயத்தின் அடி ப்படை ஆதாரங்கள். அவற்றை முறையாகப் பராமரித்தா லே… பாதி பிரச்னை தீர்ந்து விடும். ஒரு குளம் நிறைந் து, அடுத்தகுளம்… அது நி றைந்தவுடன் அடுத்த குளம் … என வரிசையாகக் குள ங்களை நிறைத்துக் கொ ண்டே ஏரி களை அடையும் வகையில் பாசன வாய்க் கால்களை அமை த்திருந்த னர், நம்முன்னோர். அவை யெல்லாம் பராமரிப்பில் லாமல் தூர்ந்து போனதும், ஆக்கிர மிக்கப்பட்டதும்… குளங் கள் வறண்டுபோக ஒரு காரண ம்.

இதைச் சரியாக புரிந்துகொ ண்டு, கடந்த 2010-ம் ஆண் டு, குஜிலியம்பாறை ஒன்றி யத்தில் உள்ள அத்தனைக் குளங்க ளையும் இணைத் தார், அப்போதைய மாவட்ட ஆட்சித் தலை வர் வள்ளலார் (தற்போது தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்). கிட்டத்தட்ட 14 குளங்கள் இணைக்கப்பட் டதன் பலன், பல ஆண்டுக ளுக்கு பிறகு, அங்கிருந்த தரிசு களில் அரங்கேறிய து, உழவுத் தொழில். ‘இனி இந்த மண்ணி ல் விவசா யமே இல்லை’ என நினை த்து, வேலை தேடி வெளி யூர் சென்றவர்கள், மீண்டும் ஊர் திரும்பிய அதிசயம் அர ங்கேறியது! நம்பிக்கை விதை விதைக்கப்பட்டிருக்கிறது!

(படித்தது)

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: