இறைவனுக்கு நாம் பலவிதமான அபிஷேகங்களை செய்து வழிபட்டு வருகிறோம். ஆனால் என்னென்ன அபிஷேகம் செ ய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரிந்து செய்தா ல், அதற்குரிய
முழு பலனும் நம்மை அடையுமே அல்லவா, அதற்காக இந்த பதிவு
1) நெய் அபிஷேகம்
இறைவனை நெய்யால் அபிஷேகம் செ ய்ய மனம் அமைதி பெற்று முக்தி கிடை க்க வழி வகுக்கும்.
2) பசுப்பால் அபிஷேகம்
சுத்தமான பசும்பாலினால் அபி ஷேகம் செய்ய ஆயுள் அதிகரிக் கும்.
3) இளநீர் அபிஷேகம்
குடும்ப ஒற்றுமைக்கும், குதூகலத்திற்கும் இ றைவனை இளநீரினால் அபிஷேகம் செய்தா ல் நிச்சயம் பலன் கிடைக்கும்.
4) நல்லெண்ணெய் அபிஷேக ம்
நல்லெண்ணெயில் அபிஷேகம்செய்ய பிர ச்சனை தலை யெடுக்காது உங்கள் வீட்டில்.
5) மாப்பொடி அபிஷேகம்
மாப்பொடியினால் அபிஷேகம் செய்தால் கடன் தொல்லை தீரும்.
6) சுத்தமான தண்ணீர் அபி ஷேகம்
சுத்தமான தண்ணீரால் அபிஷேகம் செய் ய காரிய சித்தி உண்டாகும்.
7) கரும்புச்சாறு அபிஷேகம்
கரும்புச்சாறு அபிஷேகம் பிணிகளை அகற்றி ஆரோக்கியம் நல்கும்.
8) பசுந்தயிர்
நல்ல பசுந்தயிரினால் அபிஷேகம் செய்ய குழந்தை பாக்யம் உண்டாகும்.
9) எலுமிச்சை சாறு அபிஷேகம்
மனதில்தோன்றும் இனம்புரியா பயத்தை நீக்க எலும்பிச்சை சாற்றால் அபிஷேகம் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.
10) தேன் அபிஷேகம்;
இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்தா ல் வாழ்வும் இனிமை யாகும். குரலும் தேன் குரலாகும்.
11) பஞ்சாமிருத அபிஷேகம்
பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்ய உடல்நலம் மட்டுமல்லாமல் செல்வமும் பெருகும்.
12) சந்தன அபிஷேகம்
சந்தனத்தால் அபிஷேகம் செய்ய எட்டு வித செல்வங்களையும் அடையலாம்.
13) பஞ்சகவ்யம் (பால், நெய், தயிர், சாணம் கோபியம்)
பசுவின் ஐந்து உப உற்பத்தியான பால், நெய், தயிர், சாணம், கோமியம் சேர் ந்த கலவையை பஞ்சகவ்யம் என்கி றோம். இந்த பஞ்சகவ்யத்தால் அபிஷே கம் செய்ய பாவங்கள் கரை ய உதவும்.
14) நெல்லி முல்லைப் பொடி அபிஷேகம்
நெல்லி முல்லைப் பொடிகொண்டு இறைவ னுக்கு செய்து அபிஷேகம் செய்தால் நம்மை பிடித்திருக்கும் நோய்கள் நீங்கும்
15) வாழைப் பழ அபிஷேகம்
வாழை பழத்தால் அபிஷேகம் செய்தா ல் உணவு மற்றும் வாணிப பயிர்கள் செழித்து வளரும்
16) அண்ணத்தால் அபிஷேகம்
அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்தால் நமக்குராஜவாழ்க்கைகிட்டும்
17) மஞ்சள் பொடி அபிஷேகம்
பார்த்தவுடன் பிறரை வசியமாக்கும் வசீகரம் நமக்கு உண்டா கும்.
18) 13 வகை பொருட்களின் கலந்த கலவை அபிஷேகம்
தேன், பால், தயிர், இளநீர், விபூதி, ச ந்தனம், கரும்புச்சாறு, நெய், அரிசி மாவு, நல்லெண்ணெய், திருமஞ்சன ம், பஞ்சாமிர்தம், புனித நீர் போன்ற 13 வகைப் பொருட்களைக் கொண்டு ராகு காலத்தில் சிவலிங்க த்தின் உச்சியில் இருந்து அபிஷேகம் செய்தால்.நம்மை ஆட் டிப்படைக்கும் அனைத்துப் பிரச்சனைகளும் தீரும் என்பது ஐதீகம்.
– விதை2விருட்சம்
Reblogged this on Gr8fullsoul.