Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திக் திக் திகிலில் . . . தமிழக முதல்வர்

1992-1995 காலகட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி படிவம் தாக்கல் செய்யாத வழக்கை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்ததுட ன், சென்னையில் உள்ள கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை நான் கே மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டுமென்றும் உத்தரவிட் டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அவரது சொத்துக் குவி ப்பு வழக்கு விசார ணையில் பெங்களூர் – நீதிமன்றம் விறுவி றுப்பைக் கூட்டியிருக்கிறது. அது விரைந்து

விசாரிக்கப்படும் நிலையைப் பார்க்கும்போது அந்த வழக்கி ன் தீர்ப்பும் மூன்று , நான்கு மாதத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. நாடாளு மன்றத்தேர்தல் பிரசாரத்தில் முழு கவ னம் செலுத்தி, நாற்பதையும் அள்ளும் முயற்சியில் இருக்கும் ஜெயலலிதா தேர்தல் நெருங்கும் சமயம், இந்த வழக் குகள் தமக்குத் தலைவலியாக மாறிவி டுமோ என்ற திக்… திக்கில் இருக்கிறாரா ம். எப்படியாவது இந்த இரண்டு வழக்கு களும் ஆறப்போடப்பட்டு, மே மாதத்துக் குப்பிறகு விசாரணைக்கு வரும் வகை யில், தாமதப்படுத்த தீவிரமாக யோசிக் கப்படுகிறதாம். இது ஒரு பக்கம் இருக்க, இந்த வழக்குகள் குறித்து ஜெ.வுக்குப் பாதகமான அம்சங்கள் நீதிமன்றத்தில் வெளிவரும்போது அதுகுறித்து செய்தி வெளியிடுவதைத் தவிர்க்கு மாறு செய்தித்துறை அதிகாரிகள் முன்னணி தமிழ் தினசரி பத்திரிகைகளிடம் ‘நட்பு’ ரீதியாகக் கேட்டுக் கொள்கி றார்கள். வருமானவரிவழக்கில் சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது அப்படிக் கேட்டுக்கொண்டது மட்டுமல்லா மல் தேர்தலின்போது ஆட்சி மட்டத்திலும் ஆளும்கட்சி மட்டத்திலும், பல பக்க ங்களுக்கு விளம்பரங்கள் வெளியிடும் யோசனைகள் இருப்பதையும் பூடகமா க, புரியும்படிச் சொன் னார்களாம்.

காவல்துறை மற்றும் மாநில, மத்திய அரசுகளில் முக்கிய மான பொறுப்புகளில் இருக்கும் ஐ. பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதி காரிகள் ஓய்வுபெற்ற உடனேயோ அல்லது ராஜினாமா செய்தோ, தேர்தல் நெ ருங்கும்போது, அரசியல் கட்சியில் இணைந்து பிரசாரம் செய்வதோ அல்லது தேர்தலில் போட்டியிடும் போக்குகளோ அதிகமாகிக் கொண் டே இருக்கிறது அல்லவா ? இந்தப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண் டும். இப்படிப்பட்ட அதிகாரிகள் பொ றுப்புகளில் இருந்த போது மத, இன, கட்சிப் பாரபட்சம் காட்டாமல் கட மையைச் செய்திருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அரசுத் துறைகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், குறிப்பாக உயர் அதிகாரிகள், ஓய் வுபெற்ற தேதியிலிருந் து, இரண்டு வருட கால ம், வருமானம் ஈட்டும் தொழிலிலோ, வேலை யிலோ செல்லக் கூடா து என்ற நடத்தை விதி இருக்கிறது. அதுபோல உயர் அதிகாரிகள் ஓய் வு பெற்றாலோ ராஜினாமா செய்தாலோ ஐந்து வருடம் எந்த அரசியல் கட்சியிலும் சேரக் கூடாது என்றும், தேர்தலில் போ ட்டியிடக் கூடாதென்று ம், நடத்தை விதிகள் திரு த்தப்பட வே ண்டும்.

அ.தி.மு.க. அமைச்சர்க ளும், பொறுப்புகளில் இ ருக்கும் கட்சிப் பிரமுகர் களும், யாரைக் கண்டு பயப்படுகிறார்களோ இ ல்லையோ மாவட்டத்திலும் உளவுப் பிரிவு (ஸ்பெஷல் பிரா ன்ச்) அதிகாரிகளைப் பார்த்துத்தான் மிகவும் பயப்படுகிறார்க ள். காரணம் ஜெயலலிதா, பெரும்பாலும், கட்சிக்கார ர்களின் செயல்பாடுகளை க் காவல்துறை நுண்ணறி வுத் துறை அதி காரிகளின் அறிக்கையின் மூலமே அ றிந்து கொள்வதால் ஆளு ம் கட்சிப் பிரமுகர்கள் மா வட்ட நுண்ணறிவு காவல் அதிகாரிகளைக் குஷியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழல் கார ணமாக ஒருவர்மீது அவருக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகி றது. பின்னர் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முத ல்வரால் வாய்ப்பு வழங் கப்படும்போது மீடியாக்கள் மூலமாகப் பாதக மான வி ஷயங்கள் வெளியே வருகி ன்றன. வேட்பாளரை மாற் றுகிறார் ஜெ. அ.தி.மு.க.வி ல் பலமுறை இதுபோன்று நடந்திருக்கிறது. கீழிருந்து நற் சான்றிதழ் கொடுத்த காவல் அதிகாரி எந்த நடவடிக்கைக் கும் ஆளாகாமல் தப்பிக்கிறார். இந்தப் பழக்கத்தை விட்டு விட்டு அ.தி.மு.க. தலைமை கட்சியின் முக்கிய தலைவர்க ளையோ மாவட்டச் செயலா ளரையோ நம்ப வேண்டும்.

– அபிமன்யு

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: