Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நிலையான நிம்மதியோடு நீ வாழ‌ . . . !

உன் குற்றம் குறைகளை கண்டுபிடி. அடுத்தவரிடம் குணங்களைத்தேடு. அடுத் தவரிடமுள்ள குறைகளை த் தேடுவது பாவம். மிருக உணர்ச்சிகளை களைந்து விட்டால், தெய்வீக உணர் வுகள் பெருக்கெடுக்கும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய். ஒளி உன்னிடம் இருக்கிறது. நீயே ஒளியாகிறாய். உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை

கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக் கொள். அப்போதுதான் பிரச் சனைகள் வெள்ளம்போல வ ந்துதாக்கும்போது, பாறை போலஎதிர்த்து நிற்க இயலும் .வெளியுலகவாழ்வின்மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக் கை மறக்கவைக்கும். ராமதா சர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றிகூறினார். ஏனென்றா ல், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவுகூர்ந்து, வெளி உலகத் தை முழுமையாக விலக்கிவைத்து, ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத் தமைக்காக நன்றி பாராட்டி னார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும். அறியாமைத்திரை கிழிபடட் டும். தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும். நிலையான நிம்மதியில் நீ இரு ப்பாய்.

முன்னதாக புறப்படு. மெது வாக ஓட்டு. பாதுகாப்பாய் போய்ச் சேர். உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக் கொள். அது ‘நறுமணம்’ என்ற மவு னமொழியில் பேசட்டும்.

தன்னலமற்றதொண்டு என்னைமகிழச்செய்கிறது. அனைத் து ஒழுக்கங்களுக்கும் அடிப்படைதூய்மையான மனம்தான்.

மிகவிரும்பக்கூடியசெல்வம் இறையருளே. கண்ணை இ மைகாப்பதுபோல் அவன் உங் களை காப்பாற்றுவான். இதி ல் சந்தேகம்வேண்டாம். நல் லதையேகேள்; நல்லதையே காண்; நன்றேசெய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.

* இன்று மனிதன் கவலையின் கைதியாக இருக்கிறான். மன நிறைவின்மையே கவலைக்கு காரணம். கவலை வேகத்தை வி ளைவிக்கிறது. இதய நோய்களு க்கு காரணம் கவலை. பயமே நோய்க்கு பெருங்காரணம்.

* ஆரோக்கியத்தின் இன்னொரு பகைவன் கோபம். அது ரத்த ஓட் டத்தில் விஷத்தை செலுத்திவிடுகிறது. சாத்வீக உணவை உட்கொள்ளுங்கள். கொழுப் பு சேர்த்த, வறுத்த உணவு இதய நோய்க்கு காரணம். கனிகள், முளைதானியங்கள் ஆகியவை உடலுக்கு மிகவும் சிறந்தது.

* ஒவ்வொரு நாளும் உணவு உண்ணும்போது, உணவுப் பொருட்களை, ஜீரணமாவதற்கென கடவுள் அளித்துள்ள நெ ருப்பில் அர்ப்பணிக்கிறோம். இறைவனுக்கு நன்றி பாராட்டி வழிபடும் வகையில் சாப்பிட வேண்டும். உணவைசமைக்கும் நெருப்பை கடவுள் என கீதை சொல்கிறது. உண்பதன் நோக்க ம், கடவுள் நமக்கு அளித்த கட மைகளைச் செய்வது அல்லது அவனை மகிழ்விப்பதாகும். இத ன் விளைவு கடவுளை நோ க்கி முன்னேறுவது.

* மனிதன் இன்பமாக வாழவே பிறந்திருக்கிறான். ஆனால், அவன் துன்பத்தில் தவழு கிறான். இது வருத்தமான விஷயம். ஆனந்தத்தின் ஆதாரம் அவனிடமே இரு க்கிறது. உண்மையான க ல்வி, மனிதனுக்கு இன்பத் தை எவ்வாறு பெறவேண் டும் என்பதுபற்றி கற்பிக்க வேண்டும். கல்வி உன்னை இருளிலிருந்து ஒளிக்கு அழை த்துச்செல்ல வேண்டும்.

* ஒருவன் உன்னை குற்றம் கூறி யோ, அவதூறாக பேசியோ, துன் புறுத்தினாலும், அதனையே அவ னுக்கு திருப்பாதே. சகிப்புத்தன் மையுடன் நடந்துகொள். ஒருவ னை நாய் கடித்தால் அவன் அதை திரும்ப கடிப் பதில்லை.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

%d bloggers like this: