Thursday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மகாபாரதப்போரில் சண்டையிட்ட வீரர்கள் அனைவருக்கும் உணவளித்தது நம் தமிழகம்தான்! ஆச்சரிய வரலாற்றுத் தகவல்!

ம‌காபாரதத்தில் பஞ்சபாண்டவர்களுக்கும், துரியோதனன் முதலிய நூற்றுவருக்கும் இடையே பெரும் போர் நடந்தபோது இருதரப்புப் படைகளுக்கும் உணவு வழங்கி உதவியவன் சேரமான் உதியஞ் சேரலாதன் என்ற சேரமாமன்னன். அவன் இவ்வாறு உணவு வழங்கியதால், பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் என்றே சரித்திரத்தில் அவனது திருப்பெயர் விளங்குகிறது. புறநானூறு என்ற சங்ககால நூலின் இரண்டாவது பாடலில்

அந்த மாமன்னனைப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடினார்.

பாண்டவ-கவுரவ யுத்தத்தின் போது சேரமாமன்னன் உதியஞ் சேரலாதன் இருபடைகளுக்கும் சோறு வழங்கிய செய்தியை புலவர் வியந்து குறிப்பிடுகிறார். புறநானூற்றுப் புலவர் தெரிவிக்கும் இந்தச் செய்தியை சிலப்பதிகாரம் உறுதி செய்கிறது. மதுரை மாநகரம் கண்ணகியின் கோபத்தால் அக்கினிக்கு இரையான பிறகும் கண்ணகியின் கோபம் தீரவில்லை. அவள் வருத்தத்துடன் அமர்ந்திருந்தபோது, பாண்டிய மன்ன னின் குலதெய்வமான மதுராபதி என்ற குல தெய்வம் கண்ணகியின் பின்பக்கமாக வந்து நின்றது. நீ யார்? என்று கண்ணகி கேட்டாள்.

அவளுக்குத் தன்னைப் பற்றி தெரிவித்த மதுராபதி தெய்வம் மேலும் சில செய்திகளைக் கூறியது. பாண்டியன், கோவலன் இருவரும் தவறு செய்யாதவர்கள். ஆனால், இருவருக்கும் முன் செய்த தீவினையின் விளைவாக ஏற்பட்ட பழி ஒன்று உண்டு என்று மதுராபதி தெய்வம் கூறியது. பிறகு உயர்குடிப் பிறந்த மன்னர்கள் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பதைச் சில உதாரணங்களுடன் அந்த தெய்வம் விவரித்தது. தன் கையைத் தானே வெட்டிக்கொண்டு நீதி தவறாத நேர்மையாளன் என்று புகழ்பெற்ற பொற்கைப் பாண்டியன், ஒரு புறாவுக்காக தான் துலாக்கோல் ஏறிய சோழ மன்னன் சிபி, கன்றை இழந்த பசுவுக்கு நேர்ந்த துன்பத்தைப் போக்கி நீதி செய்த மற்றொரு சோழ மன்ன னாகிய மனு, பாரதப்பெரும் போரில் இரு தரப்புப் படைகளுக்கும் சோறு அளித்த சேர மன்னன் உதியஞ் சேரலாதன் என்று ஒரு பட்டிய லையே மதுராபதி தெய்வம் எடுத்து உரைக் கின்றது.

சிலப்பதிகாரம், மதுரைக்காண்டம், கட்டுரைக் காதை பகுதியில் பெருஞ்சோறு பயந்த திருந்து வேல் தடக்கை என்ற அடிகளில் சேரமன்னன் சோறு வழங்கிய செய்தி சொல்லப்படுகிறது. இதே செய்தியை, வஞ்சிக்காண்டம், வாழ்த்துக் காதை பகுதியில் இளங் கோ அடிகள் மீண்டும் குறிப்பிடுகிறார். தோழிப் பெண்கள் மன்னர்களைப் போற்றி புகழ்ந்து ஆடுகிறார்கள்; பாடுகிறார்கள். இதிலும் மகாபாரத யுத்தத்தில் இரு தரப்பு படைகளுக்கும் சேரமாமன்னன் பெருஞ்சோறு அளித்த செய்தி பதிவு செய்யப் படுகிறது. இந்தியாவின் வடக்கே ஒரு பகுதியில் ஒரு பெரும்போர் நடக்கிறது. அதற்கு தெற்கே தமிழ்நாட்டிலிருந்து சோறு வழங் கப்படுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செய்தி, இந்தியப் பண்பாட்டின் பழமையை மிகச்சரியாக எடுத்துக்காட்டுகிறது.

– ramanamam

One Comment

  • This story can nothing but an exaggerated praise for a king who might have been very generous by a poet who knew how to please the king.There is no corroborating information in any other literature about feeding the Pandava and Kaurava armies.Logistically also this is impossible.Imagination and Hyperbole are the interesting marks of any poetry including Tamil poetry.The “pahuththarivu” of DK/DMK scholars are always blind to such imagination and hyperbole.

    Another matching one is “Imayaththil Vil poriththa seralaathan”.Sky is the limit for such imaginations and hyperbole.One can enjoy the beauty of the language and the poetry but should not deceive oneself to such an extent that these statements are taken as proved historical facts.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: