Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சம்பளத்தில் பெறும் வாடகைபடிக்கு வரிச்சலுகையை துல்லியமாக கணக்கிடும் முறை

வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெ றுவதில்தான் எத்தனை குழ ப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிற து எ ன்பதே பலருக்கும் புரிந்து கொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீ டுகளும் ஒரே மாதிரி யாகவும் இருப்பதி ல்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக் கொண்டதாக இருக்கிறது. எந்தஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று

பலரும் க்ளைம் செய்கின்றனர்.

வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டு வந்துள்ளது மத்தியஅரசின் நேரடி வரிவிதிப்பு ஆணை யம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வீட் டுவாடகைபடிக்ளைம் செ ய்தால்,வீட்டு உரிமையாள ரின் பான் கார்டு எண் அவ சியம் தர வேண்டும் என் று அறிவித்துள்ளது.  வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபக ரமாக வரி விலக்கு பெற லாம் என்று ஆடிட்டர் சத்திய நாரா யணனுடன் பேசினோம்.

”வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்க வேண் டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வரு மானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மை யான வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட் டுவதில்லை. இதைக் கண்கா ணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படு ம் வரி இழப்பை சரிசெய்வதற் கும் கொண்டுவரப்பட்ட நடை முறைதான் இது.  வீட்டு வாட கையைச்செலுத்தி முறையா க ரசீது வாங்குபவர்களுக்கு எ ந்தச் சிக்கலும் இல்லை. அது போல, வாடகை வருமானம் ஈ ட்டும் வீட்டு உரிமையாளர் த னது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டு வந்துவிட்டால் சிக்கல் இல் லை.

சிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர்.  அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமை யாளர் வரிக் கணக்கில் கொ ண்டு வருவதை உறுதி செய்வ தற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக் கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.  

ஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கி டும் முறையையும் அவர் விளக்கி னார். வீட்டு வாடகைபடி வரிவிலக் குக்கு கீழ்க்கண்டுள்ள  3 முறைகளி ல் எது குறைவோ, அதற்கு வரிவில க்கு கிடை க்கும்.

1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.

2) கட்டும் வாடகையில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷ ன் ஆகியவை சேர்ந்ததா கும்).

3) சம்பளத்தில் 40% (மெட் ரோபாலிடன் நகரங்களுக் கு 50%).

மேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)  

ஹெச்.ஆர்.ஏ வரிச்சலுகை பெற சொந்த வீட் டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்

ஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக்கடனை செலுத்திவந்தால், அசல், வ ட்டி இரண்டுக்கும் வருமான வரிச்சலுகைஉண்டு. தவிர, கண வன் மனைவி இருவருக்குமே வீட் டு வாடகைபடி வரிச் சலுகை பெற லாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தா ன் பெற முடியும். வெளிமாநிலத்தி ல் வாடகை வீட்டில் வசிக்கும் குடு ம்பத்துக்காகவும் வீட்டுவாடகை படியை ஒருவர் க்ளைம் செய்ய லாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்” என்றார்.

– நீரை.மகேந்திரன்.

Leave a Reply

%d bloggers like this: