Wednesday, October 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

என்னென்ன வேலைக்கு பெண்கள் எப்ப‍டி எப்ப‍டி உடை அணியவேண்டும்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு விருப்பத்தோடு சொல்றோம்!

டிரெஸ் கோடு என்கிற ஒன்று அனேகமாக இன்று எல்லா அலுவலகங்களிலும் ஒரு முக்கியமான விஷயமாக வலியு றுத்தப்படுகிறது. இன்னென்ன  வேலைகளில்

இருக்கும் பெண்கள் இப்படித்தான் உடை அணிய வேண்டும்..  நகை அணிய வேண்டும் என ஒரு வரையறை விதிக்கப்படுகிற து. ஒரே  அலுவலகத்திலே யே பலபிரிவுகளில் பெண்கள்வேலை பார்க்கும் போது, அந்தந்த பிரிவு க்கேற்ப அவர்களது உடையும் அலங்காரமும் இருக்க வேண்டும் என்ற விதிகளைச் சொல்லும் பணியிடங்களும் உண்டு.

இப்படி எந்த விதிமுறைகளும் இ ல்லாத இடங்களில் வேலை பார் க்கிற பெண்களும் இருக்கிறார்கள். எளிமையான ஒரே ஒரு செயின், காதில்  சின்னதாக ஒரு தோடு… இதுதான் பெரும்பாலான வர்களின் விருப்பம். அடுத்தபடி யாக மணிகள் வைத்த, கழுத்தை ஒட்டினமாதிரியான நெக்லஸ். ஒரு  சர மோ, இரட் டைச் சரமோ… அது அவரவர் விருப்பம். அத ற்கு மேட்ச்சாக அதே கலர் மணிகள் வைத்த தோடு. மிகப்பொடி யான மணிகளில் செய்த  கொத் தாக, முறுக்கின மாதிரியான கழுத்தணிகள், அதற்கேற்ப காதணிகளை விரும்புவோரும் உண்டு.

எந்த நாளும், எல்லா உடைகளுக்கும் பொருந்துகிற மாதிரி வெள்ளை முத்துக்கள் கோர்த்த சரமும், தோடும் அணிகிற வர்களும் உண் டு. முத்துக்களோடு, கலர் மணிகள் சேர்த்த கழுத்த ணி மற்றும் குட்டியாக வட்ட வடிவ தோடு, அதில் சின்னதாக ஒரே ஒரு தொ ங்கல்… இதுவும்  வேலை க்குச் செல்கிறவர்களின் வி ருப்பங்களில் ஒன்று. இந்த எல்லாமே எளிமையாக உடை அ ணிகிறவர்களுக்கான நகைகள். காட்டனோ, சிந்தெடிக்கோ … அதிக ஆடம்பரமில்லாத புடவை அல்லது சல்வார் அணி கிற போது, உடையின் கலருக்கேற்ப மேட்ச்சாக அணிய நினைப்பவர்களுக்கு  மேலே சொன்ன அத்தனை சாய்ஸும் உண் டு.

மேட்ச்சிங் நகைகளில் விருப்பமில் லாதவர்கள், மெலிதான சங்கிலி, மெலிதான வளையல்கள், பொடி கல் வைத்த வளையல்கள், மயில், பூ மாதிரியான  நளினமான டிசைன்க ள் பதித்த மெலிதான பிரேஸ்லெட்டுகள் அணியலாம். தங்க நகைகள் அணிய வசதியோ, விருப்பமோ இல்லாதவர்களு க்கு இன்று  அப்படி யே தங்கம் போலவே தோற்றமளிக்கிற கியாரண்டி நகைகள் கிடைக்கின்றன. பட்ஜெட்டும் இடிக் காது. தினம் ஒன்றாக அணியலாம்.  பாதுகாப்பும்கூட.

வரவேற்பாளராக வேலை பார்க்கிற பெண்கள், உடை மற்று ம் நகை வி ஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக் கும். இரட்டைச் சர மாகக் கட்டிய  மணி மாலை, பிளாக் மெட் டல் அல்லது சில்வர் ஃபினிஷ் நகைகளை அணியலாம். கழுத்துக் கு அணிகிற மாலை, உடைக்கு மேட் ச்சாக ஒரே கலரிலோ  அல்லது 2 கலர்கள் கலந்தோ இருக்கலாம். பெரி ய காதணிகளைத் தவி ர்க்க வேண்டும். அதிகபட்ச கவனம் ஈர்க்கும் வகையில் பள பளா நகைகளோ,  கன் னாபின்னா கலர் காம்பி னேஷனோ கூடாது. சுரு க்கமாகச் சொன்னால் அவர்களது உடையோ, நகையோ பார்வையாள ர்களை உறுத்தவோ, கவ னத்தைத் திசைத்திருப் பவோ கூடாது.

ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கு டி ரெஸ் கோடு என்பது ரொம்பவே முக்கியம். அலுவலகத்தில் அப்படியொரு விதி  இல்லா விட்டாலும், தனிப்பட்ட மு றையில் அவர்களுக்கு அதி ல் ஒரு அக்கறை அவசியம் .சேலை அணிகிறவர்கள் என்றால், காட்டன் சேலை, அதற்கு  மேட்ச் சான முத்து வைத்த நகைகள் அணிய லாம். காதுகளுக்கு அதிக நீளமான தொங்கட்டான்கள் இல்லாத காதணிகள் பெஸ் ட். கோல்டன் ஃபினிஷில்  குட்டி பென்டென்ட் வைத்த சங்கிலி, மெலிதான மோதி ரம் பொருத்தமாக  இருக்கு ம்.

வேலைக்குச்செல்கிறபெண் கள் பெரும்பாலும் வெள்ளி க் கிழமைகளிலும், விசேஷ நாட்களி லும் வழக்கத்தைவிட சற்றே ஆடம்ப ரமாகச் செல்வதை  விரும்புவதுண் டு. பட்டுச்சே லை அல்லது டிசைனர் சேலை என்றால், கோல்டன் ஃபினி ஷும், உடைக்கு மேட்ச்சான பீட்ஸும் வைத்துச் செய்த நகைகள் அணிய லாம். ஜிமிக்கி விரும்பிகள் விதம் விதமான ஜிமிக்கிகள் அணியலாம். பொடி கல் பதித்த அட்டிகை மாடல் நெக்லஸ், அதே மாடலில் வளைய ல்கள் அணியலாம். இதுபோன்ற விசேஷ தினங்களுக்கு அணிய சிவப் பு, வெள்ளை மற்றும் பச்சை கல் அல்லது முத்துக்கள் பதித்த நகைகள்  அட்டகாசமாகப் பொரு ந்தும். ஃப்ளோரல் டிசைன் எனப்படுகிற பூக்கள் வடிவிலான செட்டு களையும் அணி யலாம். அதில் கழுத்து க்கு, காதுக்கு, மோதிர ம்  எல்லாம் வரும்.

டிப்ஸ்… டிப்ஸ்…

ஒரே கலரில் இரண்டு, மூன்று உடைகள் வைத்திருக்கி றீர்களா? பொதுவாக ஒரே ஒரு செட் நகை மட்டும் வைத்திரு க்காமல், வேறு வேறு  டிசைன்களில் இரண்டு, மூன்று செட் வாங்கிக் கொ ள்ளுங் கள். ஒவ்வொரு முறையும் மாற்றி அணிகிற போது, புதிதாக இருக்கும்.

மணி, முத்து கோர்த்த நகைகள் வா ங்கும் போது, ஒழுங்காகக் கோர்க்க ப்பட்டிருக்கிறதா என சரிபார்த்து வாங்குங்கள். சில நேரங்களில் காத ணிகளிலோ,  வளையல்களிலோ எ ண்ணிக்கை கூடக் குறைய இருக்க லாம். வாங்கும்போது வித்தியாசம் தெரியாது. ஆனால், அணிகிற போது ஒரு முத்து கூடவோ,  குறைவாகவோ இருந்தாலும் ஒரு மாதிரியாகத் தெரியலாம்.

இரட்டைச்சரம் வைத்த கழுத்தணிகள் வாங்கும் போது, அது உங்கள் கழுத்தில் ஒட்டிப் படிந்தபடி பொருந்துகிறதா என சரிபா ர்த்து வாங்கவும். புரள வோ,  உறுத்தவோ கூடாது. எப்போதும் உங்கள் கைப் பையில் ஒரு செட் காத ணிகள், எக்ஸ்ட்ரா திருகு கள் வைத்திருங்கள். நிறைய பேருக்கு அடிக்கடி  தொலைந் து போகிற அயிட்டங்கள் இவைதான். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சட்டென உங்கள் கைவசம் வைத்திருக்கிற எக்ஸ் ட்ரா செட்  கைகொடுக்கும்.

வேலைக்குச் செல்லும் போது, நீங்கள் அணிகிற எந்த நகையும் அடுத்தவர்களி ன் கவனத்தைத் திசைத் திருப்பக்கூடாது. அதாவது, அவை அதிக  பளபளப்பாக வோ, சலசலவென சத்தம் எழுப்பும்படி யோ இருக்கக் கூடாது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: