Saturday, March 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு?

ஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு.

பெண்ணுக்கும் நகைக்குமான அந்த

பந்தம், பிறந்ததிலிருந்தே தொட ங்குகிறது. தங்கம், வெள்ளி, வைரத்தை விரும்பிய பெண்களின் கவனம், சமீபகாலமாக ஃபேஷன் ஜுவல்லரி பக்கம் திரும்பியிருக்கிற து. கையைக் கடிக்காத பட்ஜெட்டில், உடைக்கு ஒன்றாக, ஒவ்வொரு மு றையும் புதுசு புதுசாக அணிய ஃபே ஷன் நகைகள்தான் பெஸ்ட் சாய்ஸ்!

‘அந்தக்குடை ஜிமிக்கி உனக்கு நல் லா இருக்கு. நான்போட்டா சகிக்க லை . ..’ என்றோ, ‘கழுத்தை ஒட்டின மாதிரி ஒருசோக்கர் செட் வாங்கணு ம்னு ஆசை… ஆனா, வாங்கின பிற கு நல்லா இல்லைன்னா என்ன செய் யறது?’ என்றோ, ‘என் கலர்தான் எனக்கு மைனஸ்… கோல்டு தவிர வேற என்ன போட் டாலும் எடுப்பா இருக்கற தே இல்லை’ என்றோ ஒவ் வொரு பெண்ணுக்கும் ஒ வ்வொரு ஆதங்கம்…

அத்தனையையும் தீர்க்க வே இந்தப் பகுதி. உங்கள் வீட்டுக்குட்டிப்பாப்பா முத ல் பாட்டி வரை அத்தனை பேருக்கும் என்ன மாதிரி நகைகள் பொருந்தும்? எந்த உடை க்கு எதை அணி யலாம்? என்ன கலர் காம்பினேஷன் அழகு? இப்படி அத்த னை தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போ கிறார் நகை வடிவமைப்பாளர் சாந்தி ஸ்ரீனிவாசன். பிரபலங் களுக்கு நகை வடிவமைத்துக் கொடுப்பதிலும் அன் பளிப்பு நகைகள் டிசைன்செய்து கொ டுப்பதிலும் எக்ஸ்பர்ட் இவர் என்பது கூடுதல் தகவல்!

குட்டிப் பாப்பாக்களுக்கான நகைகள் …

எந்த உடைக்கு என்ன நகை?

பட்டுப் பாவாடை, சட்டைக்கு…

தங்க நிற நகைகளே பொருத்தம். அதிலும் பா வாடை ஜரிகை யில் உள்ள டிசைனுக்கு மேட் ச்சாக குட்டிக் குட்டி ஜிமிக்கி, அதே டிசைனில் கழுத்துக்கு நெக்லஸ், ஒரு கைக்கு பிரேஸ் லெட், மோதிரம், நெத்திச்சுட்டி, காலுக்கு கொலுசு எல்லாம் போடும்போது, குட்டி தேவதைகளாகவே மாறிவிடுவார்கள்!

காக்ரா உடைக்கு…

இவை பெரும்பாலும், கழுத்துப் பகுதியி ல் வேலைப்பாடுகள் கொண்டதாக வரு வதால், கழுத்துக்கென தனியே நகை தே வைப்படாது. உடையின் நிறத்தைப் பொ றுத்து, காதணியும் பிரேஸ்லெட்டும் அணி வித்தாலே போதுமானது.

ஃபிராக்…

இப்போது பெரும்பாலும் சில்வர் அல்லது காப்பர் அல்லது இரண்டும் கலந்த காம்பினேஷ ன்தான் குழந்தைகள் மத்தியில் ஃபேஷன். அதே கலரில் அவர் களுக்கான நகைகளை வடிவ மைக்கலாம். கழுத்துப்பகுதி முழுவதும் காட்டும்படியான ஃபிராக் என்றால் ஆடம்பரமான டிசைனில் சோக்கர் செட் அணிவிக்கலாம்.

காட்டன் ஃபிராக்

காட்டன் ஃபிராக் என்றால், குழந்தை களுக்குப் பிடித்த கார்ட் டூன் கேரக்டர் வைத்துச் செய்த தோடு, கழுத்துக்கா ன திரெட் செயின், பிரேஸ்லெட் பொ ருத்தம்.

சல்வார்…

குட்டி டாலர் வைத்த செயின், அதே டாலர் டிசைனில் காத ணி போதும். முத்து வைத்துச் செய்த குட்டி நெக்லஸ் மற்று ம் தோடுகூட அழகாக இருக்கும்.

வெஸ்டர்ன் டிரெஸ்…

ஒரே ஒரு மணி வைத்த சில்வர் கலர் செயி ன், காதுக்கு அதே மணி வைத்த வளையம் அல்லது கலர் மணிகள் வைத்த எலாஸ்டிக் பேன்டுகள் அல்லது வுட்டன் மணி செட்.

யாருக்கு எது?

முத்து மற்றும் கோல்டன் மணிகள் கலந்த நகைகள் எல்லாக் குழந்தைகளுக்கும் அழகு.வட்டவடிவ முகம் கொண்ட குழந்தைகளுக்கு பெரிய மணிகளும், ஒல்லியான, சின் ன முகம் கொண்ட குழந்தைகளுக்கு சின்ன மணிகளும் வைத்துச் செய்த நகைகள்தான் அழகு. நல்லநிறம் கொ ண்ட குழந்தைகளுக்கு டார்க் நகைக ளும், மாநிறமான குழந்தைகளுக்கு லைட் அண்ட் டார்க் காம்பினேஷனு ம், நிறம் கம்மியான குழந்தைகளுக் கு சில்வர் கலரில் கற்கள் பதித்தவை யும் பொரு ந்தும்.

தேர்ந்தெடுக்கும் போது…

குழந்தைகளுக்கு அளவு என்ப து மிக முக்கியம். அவர்களது கழுத்து, கை, கால் அளவுகளு க்கேற்ப சரியான நீள, அகலங்க ளில் நகைகளைத் தேர்ந்தெடுக் க வேண்டியது முக்கியம். கடை களில் கிடைக்காவிட்டால், ஜு வல்லரி டிசைனர்களிடம் பிரத் தியேகமாக செய்து வாங்கலா ம். குழந்தைகளின் சருமத் தை உறுத்தக் கூடாது. கூர்மையான முனைகள் இருக்கக் கூடாது. தொலைத்து விடுவார்கள் என் றோ, வீணடித்துவிடுவார்கள் என்றோ, விலைமலிவாக ந டைபாதைக் கடைகளில் வாங் க வேண்டாம். தவிர்க்க முடி யாமல் வாங்கும் போதும், ந கையின் உலோக பாகம் சரு மத்தில் படுகிற இடங்களில் டிரான்ஸ்பரன்ட் நெயில்பாலீ ஷ் தடவி அணிவித்தால் அல ர்ஜி இருக்காது.

தொடர்ந்து அலர்ஜி இருந்தால் சரும மருத்துவரைக் கலந்தா லோசிப்பது நல்லது. நகையில் உள் ள கெமிக்கல் பிரச்னையா அல்லது உடலில் பிரச்னையா எனத்தெரிந் துகொள்ளவேண்டும். குழந்தைகளி ன் சருமத்தில் தேங்காய் எண்ணெ ய் தடவிவிட்டு நகைகளை அணிவி த்தால், சருமம் பாதிக்கப்படாமலிரு க்கும். குழந்தைகளுக்கு நகைகள் வாங்கும்போது, மைக்ரோபிளேட்ட ட் செய்யப்பட்ட நகைகள் எனக்கே ட்டு வாங்கவும். அவற்றில் அலர்ஜி க்கான அபாயமில்லை. சாயம் போ கிற மணிகள், முத்துகள் வைத்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டாம் . வாயில் வைத்தால், அதிலுள்ள கெமிக்கல் ஆபத்தை ஏற்படு த்தலாம்.

– தினகரன்

Leave a Reply

%d bloggers like this: