Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

100/100 இல்லீங்க! இது 400/400 – வியத்தகு தகவல்கள்

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தி ல், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர் கள் தஞ் சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ள ன.

அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரி க்கும் நன்முயற்சியாக, 400 விஷ சில ந்திகளுடன் மூன்று வாரங்கள் வசித் து உலக சாதனை படைத்தார் ஆஸ்தி ரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர் ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.

1900-ம் ஆண்டில் இருந்து ஆண்களுக்காக மட்டுமே நடத்தப் பட்டு வந்த 400 மீட்டர் தடை தாண்டும் ஓட் டப் போட்டி, 1984-ம் ஆண்டில் இருந்து, பெண்களுக்காகவும் நடத்தப் படுகிறது.

ஜாக்கிசான் நடித்து சமீபத்தில் வெளிவந் திருக்கும் ‘போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6-வது பாகம் சீனா வில் மட்டும் ரூ.400 கோடி வசூலை அள்ளியது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது தான் அமெரிக்கா. ஆனால், அந்த பிரமாண்ட நிலப்பர ப்பில் பல்லாயிரக்கணக்கா ன ஆண்டுகளுக்கு முன்பி ருந்தே வாழ்ந்து வந்த /வா ழ்ந்துவரும் பல்வேறு இனகுழுக்களே…. அதன் பூர்வகுடிகள்.

‘புன்னகை அரசி’ என அழைக் கப்படும், பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா… தமிழ், கன் னடம், மலையாளம், தெலுங் கு உட்பட சுமார் 400 திரைப் படங்களில் நடித்திருக்கிறார்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்க ளைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத் தமிழ் பாடல்க ள் கொண்டநூலாகும். மேலு ம் அக நானூறு என்ற நூலில் மனிதர்களின் அக வாழ்வின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக 400 பாடல்கள் இடம்பெற்றுள்ள‍ன• 

விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பா டு, விமானத்தின் பிற க ருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்ட த்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செ ய்யும் விமான கறுப்புப் பெட்டி, விமான விபத்து தொடர்பான காரணங்களை அறிவ தற்கும், ஆராய்வதற்கு பெரிதும் உதவக் கூடிய கருவி.

கடல் மட்டத்திலிருந்து 650மீட்டர் உயரத்தில் இருக்கும் வால் பாறை, மானாம்பள்ளி வனச்சர கத்தின் ஷேக்கல்முடி எஸ் டேட்டில் 400 ஆண்டு பழமையான தேக்கு மரம் பிரமாண்ட மாக வளர் ந்து நிற்கிறது!

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அரு கிலுள்ள மொரீஷியஸ் தீவில் வாழ்ந்த, ஒரு மீட்டர் உயரமுடைய, ‘ டோடோ’ எனும் பறவை இனம், கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு முற் றிலுமாக அழிந்துபோனது!

சென்னையின் புகழ்பெற்ற அண் ணா சாலை (மவுன்ட் ரோடு ), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.

பூமியின் அளவும், எடையும் கொ ண்ட(கற்பாறைகள் மற்றும்இரும் பால் ஆன) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலை வி ல் இருப்பதாக கண்டறியப்பட்டு, கெப்லர் 78 பி (KEPLER 7 8B) எனப்பெயரிடப்பட்டுள் ளது.

பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி, சர் வதேச அளவில் 400 சிக்ஸர் களை அடித்த முதலாவது கிரி க்கெட் வீரர்.

1605-ல் பெல்ஜியத்தில் தொட ங்கிய ‘நியூ டெய்டிங்கென்’ (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாள் 400 ஆண்டுகளை கடந்து நிற்கிறது.

மேற்கு இந்தியத் தீவைச் சேர்ந்த பிரையன் லாரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட் டிகளில் 400 ரன்களை அடித்து உலக சாத னை செய்த, முதல் கிரிக்கெட் வீரர்.

கிறிஸ்தவர்களின் புனித இடமான நாசரே த் மலைக்குன்றில் வளர்ந்த, 4 மீட்டர் உயரமு டைய, 400 ஆண்டுகள் பழமையான ஒலிவ மரத்தை வத்திக்கான் தோட்டத்துக்காக இஸ்ரேல் அரசு வழ ங்கியிருக்கிறது!

கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்கப்படும் இந்திய கிரி க்கெட் வீரர் சச்சின் டெண்டு ல்கர், 400 ஒருநாள் கிரிக்கெ ட் போட்டிகளில் விளையாடி ய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறி ஸ்துவின் வாழ்கை வரலாற்றை கவி தை வடிவில் கூறும், ‘ஏசு காவியம்’ எ ன்ற நூல், 400 பக்கங்களைக் கொண்ட தாகும்.

செல்போன் பாதிப்பு பற்றி ஆராய்ந்த இ ந்திய சுகாதாரத்துறை, பயோடெக்னா லஜி துறை மற்றும் தொலை தொடர்புத் துறை நிபுணர்கள் கொண்ட குழு, ‘செல்போனில் அதிக நே ரம் பேசும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மூ ளை கேன்சர் ஏற் படும் அபாயம் 400 சத விகிதம் இருக்கும்’ என்று கூறியிருக்கி றது!

சீனாவைச் சேர்ந்த 52 வயதான ஷங்பு க்ஸிங் என்ற செருப்பு தயாரிப்பாளர் 400 கிலோ எடையுள்ள இரும்பினாலான செருப்பை அணிந்து நடந்து ஆச்சர்யப்படு த்துகிறார்.

சிலந்தி மனிதன்’ என்று அழைக்கப்படும் ஆலன் ராபர்ட் 400 அடி உயரம் உள்ள கட்ட டத் தின் சுவர்களில் எந்தவித பாது காப்பு மின்றி ஏறி புதிய சாதனை படைத்தார்.

400 மி.மீ உயரம் கொண்ட ‘கிவி’, நியூசி லாந்தில் வாழும் அ ப்டெரிக்ஸ் என்னும் இனத்தைச் சேர்ந்த சிறிய, பறக்காத வி நோதப் பறவை.

வானியல் மேதை கலீலியோ, 400 ஆ ண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கி யை முதன்முதலாக பயன்படுத்தி, கோ ள்களை ஆராய்ந்ததன் நினைவாக, 2009-ம் ஆண்டினை, அனைத்துலக வா னியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித் தது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல்  உ லகக் கோப்பையை வா ங்கிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரிய கபில் தேவ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவர்.

400 கி.மீ நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கி ய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, கர் நாடக மாநிலம் சிக்கபல்ல பூர் மாவட்டம், நந்தி மலை யில் பிறந்து, தமிழ் நாட்டி ன் பல மாவட்டங்களை கட ந்து வங்காள விரிகுடாவி ல் கலக்கிறது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் புனரமைப்பு பணிமேற்கொள்ள சுற்று லாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 400 ஆண்டு பழமையான, ம ன்னர்கள் காலத்தில் பய ன்படுத்தப்பட்டகுளம் கண் டு பிடிக்கப்பட்டுள்ளது.

– எம்.மரிய பெல்சின், சா.வடிவரசு ப‌டங்கள் கூகுள்

One Comment

Leave a Reply

%d bloggers like this: