Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விதவைகளாக வாழ்வதை விட சாவதே மேல்! – கதறும் கைம்பெண்கள்! -அதிர்ச்சித் தகவல்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சிகர மான தகவலை வெளியிட் டுள்ள‍து.

பெண்களை கடவுளின் வடி வமாக கருதும் நாடு இந்தி யா. நாட்டை தாய் நாடு என்கிறோம். நதிகளுக்குக் கூட பெண் பெயர்களைத் தான் சூட்டியிருக்கிறோம். பெண்களின் நல னை பாதுகாக்க தனியாக ஒரு மத்திய அமைச்சகம். அது போதாது என்று

தேசிய பெண்கள் நல வாரியமும், மாநில மகளிர் நல வாரிய ங்களும் அமைத்திருக்கிறோ ம்.இதற்கு ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்கிறோம். பெண் ணைப் போற்றும் இந்த நாட்டி ல் விதவைப் பெண்களின் வேத னைகளை நாம் அறிந்திருக்கி றோமா?.

கடந்த ஆண்டு நம் காதுகளில் அக்னியாய் இறங்கிய அந்த தகவல்.. “இந்துக்கள் புனிதமான நகரமாகக் கருதப்படும் உத் தரபிரதேசம், மதுரா மாவட்டத்தில் ஆதரவற்ற ‘விதவை’ப் பெண்களுக்கான மறு வாழ்வு இல்லம் உள்ளது. 2006 ஆம் ஆண்டு உ.பி. பெண் கள் மற்றும் குழந் தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகத் தால் துவங்கப்பட்ட து. விருந்தாவன் ‘அகில பாரதிய மாசாரதா சமாஜ் கல்யாண் சமிதி’ என்ற அரசு சாராத அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் காப்பகத்தில் மரணமடையும் விதவையின் சடலத் தை அடக்கம் செய்ய அந்த அரசு சாரா அமைப்பு மறுத்து வி ட்டது. அதனால் குப்பை எடுப்பவர்களிடம் சடலம் அளிக்கப் பட்டது. அவர்களோ சட லத்தை துண்டு துண்டுக ளாக வெட்டி, சணல் சாக் கு களில் திணித்து தூக்கி எறிந்தார்கள். அதுவும் சாக்கில் உள்ள இந்தப் பெண்களின் உடல்களை பணம் தந்தால் மட்டுமே அங்கிருந்து அகற்றப்படு ம் என்கிற நிலை நிலவியது.

மாவட்ட சட்ட சேவை ஆணையகம் நேரில் ஆய்வு நடத்திய போது இந்த அதிர்ச்சியான உண்மைகள் வெளிவந்தன. ஆங் கில நாளேடு ஒன்று இந்தச் செய்தியை வெளிக் கொண்டு வந்தது. சட்டசே வை மையம் உச்சநீதிமன் றத்தின் கவனத்துக்கு இத னைக்கொண்டு சென்றது. இதுபற்றி விசாரித்து அறி க்கை  அளிக்ககுழு ஒன்றை உச்சநீதிமன்றம் நியமித்தது. கேட்கவே கொடூரமான நிகழ்வு இது.

“பச்சைக்கீரை உண்ணல்” (புறம். 246), “பாயின்றி வதிதல்” (புறம். 246) என்பது போன்று விதவைகள் செய் ய வேண்டிய வனவாக புற நானூறில் பல்வேறு பாடல் கள் சொல்லும் தகவல்கள் வேதனையை அளிக்கின்ற ன.

சங்ககாலத்தில் மட்டுமில்லாமல் கடந்த நூற்றாண்டிலும் விதவைப் பெண்கள் நிலை மிக மோசமாகவே இருந்தது. காதரைன்மேயோ என்ற அ மெரிக்கப் பெண் 1928ல் எ ழுதிய ‘இந்திய மாதா’ என் ற நூலில் இந்திய விதவை கள்பற்றிசொல்லும்போது

விதவையாயிருந்து வீட் டிலுள்ள அனைவரும் துன் பப்படு த்துவதைச்சகித்துக் கொண்டிருப்பதை விட இற ந்துவிடுவதே மேலென எண் ணுகிறாள்”–என்று குறிப்பிட்டி ருந்தார்மேயோ. இது 

அப்போது காந்திஜியால் எதிர்க்கப்பட்டாலும் இந்தி யாவிலுள்ள விதவைகளி ன் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்துவதா யிருந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில், ‘இந்து விதவைகள் மறும ணம்’ சட்டம் இயற்றப்பட் டது. 1871 இல் ‘விதவைகள் மறுமணச் சங்கம்’ அமைக்கப்ப ட்டது. 1856 டிசம்பர் 7இல் வங்காளத்தில் முதன்முதலாக வித வை மறுமணம் நடந்தது.

சென்னை மாகாண அரசு 1903-ல் இந்து மற்றும் மு ஸ்லீம் விதவைகளுக்குக் கல்வி வழங்கும் நோக்கத் துடன் நிதி உதவி வழங்கும் திட்டம் ஒன்றை அறிவித் தது. சென்னை மாகாணத் தில் வீரேசலிங்கம் முயற்சி யால் முதல் விதவை மறு மணம் பலத்த எதிர்ப்புகளு க்கு மத்தியிலும் காவல்துறை பாதுகாப்புடனும் நடத்த ்பட் டது. சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, விதவை மறு மணத்துக்கான கருத்து கள் வீரியத்துடன் மக்கள் மன்றத் தில் கொண்டு சேர்க்கப்பட் டது. பெரியார் தனது சொந் த குடும்பத்திலேயே வித வை மறுமண த்தை நடத்தி வைத்தார்.

இன்றைக்கும் விதவைகள் நிலைமை மாறவில்லை. உலகம் முழுவதும் விதவைகள் எண்ணிக்கையும் அவர்கள் மீதான வன்முறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உல கம் முழுக்க சுமார் 24.5 கோடி விதவைகள் இருக்கி றார்கள். இவர்களில் கிட்டத்த ட்ட நம்நாட்டில் விதவைகள் எண்ணிக்கை 4.8 கோடி பேர் 

இது பெண்கள் மக்கள் தொ கையில் 8% 

60 வயதுக் கு மேற்பட்டவர்கள் 64%
70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80%
எழுதப்படிக்கத் தெரியாதவர்கள்.
கிராமங்களில் 93%
நகர்புறங்களில் 68%
வேலைக்குச் செல்பவர்கள் 25%
நல்ல வேலையில் 1%
கிளார்க் வேலை 5%
கூலிவேலை & வீட்டுவேலை 12%
தனியாக வசிப்பவர்கள் 7%
11..5 கோடி பேர் மிகவும் ஏழ்மையில் வசித்து வருகிறார்கள்.

நம்நாட்டில் விதவைகள் எண்ணி க்கை 40 மில்லியன். நாட்டின் பெ ண்கள் மக்கள் தொகையில் 8 வி ழுக்காடு பெண்கள் விதவைகள். இதில் 64 சதவீதம் பேர் 60 வயதுக் கு மேற்பட்டவர்கள். இதில் 80 வி ழுக்காடு பேர் 70 வயதுக்கு மேற்ப ட்டவர்கள். கைம்பெண்களில் கி ராமங்களில் வசிக்கும் 93 விழுக் காடு பேரும் நகர்புறங்களில் வசிக் கும் 68 விழுக்காட்டினரும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். 25 விழு க்காடு கைம் பெண்கள் வேலைக் குச் செல்கிறார்கள். இதில் 1 விழு க்காடு பேர் தான் நல்ல வேலையி ல் இருக்கிறார்கள். 5 விழுக்காடு பேருக்கு கிளார்க் வேலை. மீதமுள்ளவர்கள் கூலி வேலைக் கும் வீட்டுவேலைக்குச் செல்கிறார்கள். 7 விழுக்காடு கைம் பெண்கள் தனியாகத் தான் வசிக்கிறார்கள். இது இந்தி யாவின் நிலை. தமிழகத் தைப் பொறுத்தவரை வித வைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம். இந்தியாவி லேயே தமிழகத்தில் தான் விதவைகள் அதிகம் என்கிற து ஐ.நா. அறிக்கை. இது இன் னும் பதற்றமடைய வைக்கும் விஷயம்.

ஆணின் இயற்கை மரணத்தைத் தவிர்த்து பெண்களை வித வையாக்குவதில் குடியும், இயற்கைச் சீற்றமும் முக்கி ய காரணிகளாகின்றன. அதி லும் தமிழகத்தில் குடி மிக முக்கிய காரணம், இது குறித்து தொடர்ந்து ஆய்வும் மாணவர்களுக்கு கவுன்சிலி ங்கும் அளித்து வருகிறார் கல்வியாளர் முனைவர் அருணகிரி. மதுரையின் புகழ்பெற்ற கல்லூரியின் முதல்வ ராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும் கிராமப்புறத்தைச் சார்ந்த கல்லூரி ஒன்றி ல் முதல்வராக பணி செய்கி றார். அவரிடம் பேசினோம்..

“இன்றைக்கு கல்லூரி மாண வர்களிடையே மது பழக்கம் அதிகரித்து விட்டது. இது குறித்துப் பெற்றோர்களிடம் பு கார் சொன்னாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை என்ப து இன்னும் வேதனையானது. இன்று தமிழகத்திலுள்ள குடி காரர்கள் சராசரி வயது 13.7. தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. அவர்களில் 20 விழுக்காட்டினர் குடியை விட்டு மீளமுடியாத அளவுக்கு அடிமைகள். தமிழ கத்தி ல் அன்றாடம் மது அருந்துபவர்களில் 49 இலட்சம் பேர் 13 முதல் 28 வயதை சேர்ந்தவர்கள். மிக அதிகமான சாலை விபத்துக்களைக் கொண்ட மாநிலம் என்ற ‘பெருமை’ தமிழ கத்தையே சேரும். ஓராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலை கள் இருக்கலாம். ஆனால் 60 விழுக்காடு சாலை இறப்பு களுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே காரணம்.

மதுபான விற்பனையால், ஆண்டுதோறும் தமிழக அ ரசுக்கு கிடைக்கும் வருவா யானது அரசின் மொத்த வருவாயில், கிட்டத்தட்ட 30 விழுக்காடாகும். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தங் கள் வருமானத்தில் 24 விழுக்காட் டையும், நகர்ப்புறங் களில் உள்ளவ ர்கள் 32 விழுக்காட்டையும் மதுபா னத்துக்காக செலவிடுகிறார்கள். குடியால் கணவனை இழந்து மனைவி விதவையாவது ஒருபுறம் இருந்தாலும் குடிகாரக் கணவனா ல் பெண் சித்திரவதைக்கு உள்ளாவதும் அதைத் தாங்க முடி யாத குடிகாரக்கணவனை கொலை செய்யும் மனைவியரும் அதிகரிக்கின்றனர். அனை த்து வளர்ச்சிகளுக்கும் குடி தடையாக இருக்கிறது” என வேதனையோடு சொ ன்னார் பேரா சிரியர் அருணகிரி.

தமிழகத்தில் ஏற்பட்ட சுனா மியால் அதிகம் பாதிக்கப் பட்டவர் கள் மீனவர்கள் தான். சுனாமியால் நாகை மாவட்டத்தில் மட் டும் 3,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாகை மாவட் டத்திலுள்ள, கீச்சாங்குப்பம், தரங்கம்பாடி, அக்கரைப் பேட் டை போன்ற மீனவ கிராமங்களைச்சேர்ந் த 500க்கும்மேற்பட்ட மனை வியரை இழந்த ஆண்களில் பெரும்பாலானவர்கள் 20வய துக்குட்பட்ட பெண்களைத் தான் திருமணம் செய்துள்ள னர். அதேசமயம், கணவர்க ளை இழந்த பெண்களுக்கு இ ந்த உரிமை பல இடங்களில் மறுக்கப்பட்டுள்ளது அல்லது அதற்குரிய வாய்ப்புகள் ஏற்படுத்தப் படாமலேயே உள்ளன. கணவர்களை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய எந்த ஆதரவும் கிடைக்கவில் லை.

சுனாமியால் பாதிக்கப்பட்ட வித வைகள், தங்களது குழந்தைக ளை மட்டுமல்லாது, சுனாமியா ல் சகோதர, சகோதரிகள் யாரா வது இறந்திருந்தால் அவர்களது குழந்தைகளையும் பார்த்துக் கொ ள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ள னர் என்பது கூடுதல் சோகம்.

பொருளாதார ரீதியில் கைம்பெண்கள், கணவனால் கைவி டப்பட்டவர்கள் வலிமையாக இல்லை என்றாலும், அவர்கள் மனரீதியாக வலிமையா னவர்களாக இருக்கிறார் கள். தற்கொலை செய்து கொள்வது, குடும்பப் பெ ண்களை விட வித வை பெண்கள் மத்தியில் கு றைவாக இருக்கிறது. இதைக் காலம் கொடுத் த வல்லமையாகக் கருத வேண்டும்.

‘கலங்கரை’ இயக்கத்தின் இயக்குநர் அருட்திரு பால் மைக் கிடம் பேசினோம். “இந்தியாவி ல் நான்கு கோடியே எண்பது லட்சம் விதவைகள் இருக்கிறார் கள்.. அதில் தமிழகத்தில் 37 லட்சம்

கணவனை இழந்து ‘கலங்கரை’ என்னும் அமைப்பால் கரை சேர்ந்துள்ள பெண்கள் சிலரிடம் பேசியபோது…

திருமணம் 1991-ல் நடந்தது. கை யில் பத்து நாள் குழந்தை இருந்தபோது கணவர் போயிட் டாரு. இனி என்ன நடக்கப் போறதோ என நினைச்சிட்டு இருக்கிறேன். அப்போ எங்க மா மனார் கூப்பிட்டார். நீ வயசு பொண்ணு. உன்னைப் பாதுகா க்க என்னால் முடியாது. அதனால நீ வேற இடம் பார்த்துக் கோ என்றார். கஷ்டப்பட்டு உழைத்து பசுமாடு வாங்கி னேன். “பாரு.. எவனையோ கை யில போட்டுட்டு மாடு வாங்கியிருக் கா..”ன்னு பேசினாங்க. இதுமாதிரி ஏராளமான நக்கல் பேச்சு க்கள் கேட்டுக் கேட்டு மனதும் உடம்பும் துவண்டு போச்சு…

“கணவர் இறந்தவுட னேயே பிறந்த வீட்டா லும் புகுந்த வீட்டாலு ம் நானும் என் மூணு குழந்தைகளும் வெ றுக்கப்பட்டோம். அவரை பறிகொடுத்து ஒரு வாரம் கூட ஆக ல்ல, எங்கிடடு வந்து உன் புருஷனை அடக்கம் பண்ணுனதற்கான செலவை த் தா..ன்னு கேட்டாங்க. காதில் கிடந்த கம்மலை கழற்றி கொடுத்தேன். பிறகு நான் வேலைக்குப் போனேன்.. வேலைக் குப் போகும்போ து சின்னப் பிள்ளைகளை வீட்டில் கட்டிப் போட்டுட்டுப் போவேன்.. விதவைகள் நிலையை விவரிக்க முடியாது.. அது கொடூரமான அனுபவம்..” என்றார் கோமதி.

“22 வருடத்துக்கு முன்னாடி என் கணவர் இறந்து போயிட்டா ர்..” என பேசத்துவங்கினார் பூபதி “ கணவர் இறந்ததும் கு ழந்தைகளைக் காப்பாற்ற வழிதெரியல்ல. யாரோடு பேசினா லும் கள்ள உறவு ன்னு சொன்னாங்க. புருச னோடு வாழ்றவ ளுக சிலர் தவறு செய்யறாங்க. ஆனா ல் அது வெளியே பேச ப்படு வதில்லை. ஆனால் விதவைப் பெண் தவறே செய்யல் லேன்னாலும் அசிங்கமாக பேசப்படுறா.. ஒரு விதவைப் பெ ண் தனித்து வாழ்வது அவ்வளவு சுலபமில்லீங்க… என்றார் பூபதி.

“ஏழு வருடம் தான் கண வரோடு வாழ்ந்தேன். இறந் துட்டார். ராசியில்லாதவ ள்னு பிறந்தவீட்டிலேயும் புகுந்த வீட்டிலேயு ம் வி ரட்டி விட்டாங்க. ஒதுங்க கூட இடமில்லாமல் பத்து நாட்கள் அலைஞ்சேன். குழந்தை மட்டும் இல்லேன்னா செத் துப்போயிருப்பேன். குடு ம்பச் சொத்தில் எனக்கு பங்கு கேட் கப் போனேன். மறுத்து ட்டாங்க, திரும்புன பக்கமெல்லாம் வசைதான். சின்னச் சின்ன வேலை பார்த்து குழந்தையை பிளஸ் டூ வரை படிக்க வைச்சிருக்கேன். கணவனை இழந் தது நாங்களாக தேடிகிட் டதா? அப்படியிருக்கையில் எங் களை ஏன் இப்படி வார்த்தைக ளால கொல்லறாங்க..?” கேள் வி எழுப்பினார் ஜோதி.

“குடிப்பழக்கத்தால் என் கணவர் இறந்து போயிட்டாரு.. பள்ளிக்கூடத்திலே படிக்கிற குழந்தை கள். கஷ்டப்பட்டு பாடு பட்டேன். சொந்தக்காரங்களே அசிங்க மாகப் பேசினாங்க. முதலில் அதையெல்லாம் கேட்டபோது செத்துப் போயிடலா ம்னு தோணிச்சு. பிறகு பிள்ளைகளை நினைச்சு பார்த்தேன். பி ள்ளைகளை படிக்கவை ச்சேன். இன்றைக்கு என் மகள் எம் .சி.ஏ. படிச்சி ருக்கிறாள். மகன் பி.எஸ் சி. படிக்கிறான். நான் கூ லி வேலை பார்க்கிறேன். நான் இந்த சமுதாயத்தி டம் கேட் டுக்கிறதெல்லா ம்… நீங்க எங்களுக்கு உதவி கூட செய்யவே ண்டாம். தவறா கப் பேசாதீங்க.. உங்க சகோதரிக்கு இப்படி ஒரு நிலை ஏற் பட்டால்.. எப்படி பார்ப்பீங்களோ அதுபோல பாருங்க…” என கண்ணீர் விட்டார் புஷ்பா.

பேர்., இந்தியாவிலேயே த மிழகத்தில்தான் விதவை கள் அதி கம் என்கிறது ஐ .நா. அறிக்கை ஒன்று. அது போல குடிப்பவ ர்களும் இங்குதான் அதிகம். தமிழ கத்தில் எட்டு பெண்களில் ஒருவர் விதவை. நான்கு வீடுகளுக்கு ஒரு வீட்டில் விதவை ஒருவர் இருக்கி றார். தமிழகத்திலுள்ள விதவைகளில் ஐம்ப து விழுக் காட் டினர் 35 வயதுக்கு கீழ் உள் ளவர்கள். விதவை கள் நிலை வேதனைக்குரியது. பொரு ளாதார, கலாசார ரீதி யாக கேவ லப்படுத்தப்படுகிறார் கள். அந்த நிலையை மாற்ற வேண்டும். அவர்கள் காக்கப் படவேண்டும். மாநில அளவி ல் விதவைகள் மற்றும் கண வனால் வஞ்சிக்கப்பட்ட பெண்களின் வாழ்வுரிமை மீட்டெடு க்கப்படவேண்டும் என்பதுதான் இயக்கத்தின்நோக்கம். அதை நோக்கியே எங்கள் பயணம் உள்ளது” என்றார் அருட்திரு பா ல்மைக்.

“இத்தனைக்கும் மத்தியில் அண்மையில் வெளியான ஒரு செய்தி ஆறுதலைத் த ந்தது. அதாவது, “சிலதினங் களுக்குமுன் நடந்தஹோ லி  பண்டிகையில் பிருந்தாவனத்தில் உள்ள விதவைப்பெண் கள், பொதுமக்களுடன் ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர். பிருந்தாவன ஹோலி நிகழ்ச்சி, விதவைப் பெண்களின் மன மாற்றத்துக்கு மட் டுமல்ல, அவர்கள் இது போன்ற கலா சார நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒரு தூ ண்டுகோ லாகவும் அமைந்தது. இவர் களை பொது சமூக த்துடன் ஒன்ற வைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் வரவேற்க ப்பட வேண்டியவை” என்றார் சுலப் இண்டர் நேஷனல் நிறு வனர் பிந்தேஷ்வர்பதக். இது துவக்கம். இப்படிமாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது நமது கடமை. முடங்கிக்கிடக்கு ம் நம் சகோதரிகளை இயங்கவைப்பதில் இந்த சமுதாயத் தி ன் பங்கு பெரிதானது.

– ப. திருமலை

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: