Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்(STI)

உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்(STI)

இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை.பக்டீரிய மற்ற வைரஸ்கள் இலிங்க உறுப்புகள் இரு க்கும் இடங்களில், சுக்கிலபாய்பொரு ள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

பொதுவான உடலுறவால் தொற்றும் நோய்கள்

-சிபிலிஸ்
-ஹேபிஸ்
-கொனோரிய
-நொன் கொனோகோக்கல் யுரெதிரை டிஸ்
-சன்கிரொயிட்
-டிரைகோமோனஸ்
-வாட்ஸ்(ஹ்ப்வ்)
-லிம்போகிரியிலோமா வெனரம்

அறிகு

றிகள் என்னென்ன?

* இலிங்க உறுப்பிலிருந்து வெளியேற்றம்.
* இலிங்க உறுப்பில் புண்கள்
* இலிங்க உறுப்பில் வளர்ச்சி
* சிவப்பு நிற தழும்புகள்
* விதை வீக்கம்
* பெண்களில் அடி வயிறு வலி
* சிறுந்தீர் அடிக்கடி கழித்தல், வலி

சாத்திய கூறு மிகுந்தவர்கள்

* நிரந்தர தொடர் துணை ஒன்று அற்றவர்
* பல துணைகள் கொண்டோர்
* விபச்சாரிகள்
* அதிக தூரம் செல்வோர்

இலிங்க நோய்கள் அதிகரிக்க காரணங்கள்

* இலிங்க நோய் அறிகுறி உள்ள வருடன் அல்லது நோய் உள்ளவ ருடன் உடலுறவு

* ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு

* பாதுகாப்பற்ற உடலுறவு கொள் ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்

* பணம், உணவு, உறையுள் போ ன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்

* அதிக பயணம் செய்வோர்

* நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள் உ+ம் : இளைஞர்கள்

லிங்க நோய்கள் தொற்றுவது எவ்வாறு

1. உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு

2. தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்

3. ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்

4. குருதி பாய்ச்சல்

5. மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை

இலிங்க நோய்களின் கேடுகள்

இலிங்க நோய்கள் பலோபியன் குழாய் சேதத்திற்கு மிக முக்கிய காரணமாகும்

பிரசவத்தின் போது குணப்படுத் தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது. 14% முதல் மாதத்திற்குள் இறக் கிறது

HIV போன்ற இலிங்க நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி யை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்

HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்றுநோய் ஏற்படலா ம் 

கொனோரியா – 

அறிகுறிகள்

பெண்:

அறிகுறிகள் இல்லை

யோனி வெளியேற்றம்

சிறுநீர் கழிக்கும் போது வலி

ஆண்:

வெளியேற்றம் மற்றும் வலி

ஹேபீஸ்

அறிகுறிகள்

பெண்:வலிமிக்க புண்கள்- யோனிமடல், குதம், தொடை பகுதிகளில்

ஆண்:ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன் ற அறிகுறிகளும் காணப்பட லாம்

70% அறிகுறி அற்றவர்கள்

நோய் ஏற்பட்ட அரைவாசிக் கும் மேற்பட்டோரில் மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டா ம் முறை சிறிய, குறைவான புண்கள் வரும்.

கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்

கிளமிடியே (நொன்கொனோ கொக்கல் யுரிதிரைடிஸ்)

அறி குறிகள்

பெண்:

அறிகுறிகள் இல்லை
யோனி வெளியேற்றம்
சிறுநீர் கழிக்கும் போது வலி
ஆண்:அறிகுறிகள் இல்லை
சிலவேளை வெளியேற்றம் மற்றும் வலி

சிபிலிஸ்

அறிகுறிகள்

பெண்:வலியற்ற புண்: யோனி, கருப்பை கழுத்து, வாய், மூக்கு, குதம் பகுதிகளில்
ஆண்:ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள்

சிபிலிஸ் குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றா ம் நிலை சிபிலிஸ்க்கு முன் னேறும்

ஆரம்ப புண்கள் சில கிழமை களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண் நீர்கட்டி, ஈரல் வீக்கம், மூட்டு வலி ஏற்படும் இந்த அறிகுறிகள் பல கிழமைகள் அல்லது மாதங்கள் காணப்படும்.

குணமாக்கப்படவில்லை எனில் 25%க்கு மூன்றாம் நிலை சிபிலிஸ் ஏற்படும். கம்மா எ னப்படும் பெரிய புண்கள் ஏற் படும்; நரம்பு தொகுதி மற்று ம் குருதி சுற்றோட்ட்த் தொகு தியிலும் சிபிலிஸ் 1-20 வரு டங்களுக்கு பின் ஏற்படலா ம். இது மரணம் வரை செல் லலாம்.

சன்கிரொயிட்

அறிகுறிகள்

பெண்: வலி மிக்க, வடிவமற்ற புண்கள் யோனி அருகே மற் றும் குதம் அருகே.

சிறு நீர் கழிக்கும் போது எரிச்ச ல், குதம் வழியாக இரத்தம்

சிலவேளை அறிகுறிகள் இல் லை

ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்

HIV மற்றும் எயிட்ஸ்

HIV என்பது எயிட்ஸ் எனும் நோயை உருவாக்கும் வைரஸ் ஆகும்.

HIV உடலின் நோய் எதிர்ப்பு திறனை குறைத்து, நோய்களை எதிர்கொள்ள

HIV வைரஸ் உடன் நண்பர்களு க்கு வழங்க முடியும். எனினும், நோய் அறிகுறிகளின்றி காணப் படலாம். பின்பு அது எயிட்ஸ் ஆக மாறும் போது, சந்தர்ப்பத் துக்குரிய நோய்கள் பரவலாம்.

HIV வைரஸ் உள்ள ஒருவரிட மிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவு கிறது. அது கர்ப்பமடைந்த தாயிடமிருந்து குழந்தைக்கும் செ ல்ல்லாம், மற்றும் தாய்ப்பால் மூலம்பரவலாம். நுண்ணுயி ர் நீக்கப்படாத ஊசிகள் மூலம் வைரஸ் பரவலாம். முத்தமி டல் மூலம் வைரஸ் பரவலா ம்.

HIV வைரஸ் தொற்றுக்கோ, எயிட்ஸ் நோய்க்கோ மருந்து இல்லை. எனினும், வைரஸ் பரவுவதை குறைக்க மருந்து வகைகள் இருக்கின்றன.

583 நபர்கள் ஒவ்வொரு மணித் தியாலத்துக்கும் HIV இனால் பாதி க்கப்படுகின்றனர். 1400 புதிய நோ யாளிகள் ஒவ்வொரு நாளும் க ண்டுபிடிக்கப்படுகின்றனர். ஒவ் வொரு மணி நேரமும் 333 நபர்க ள் எயிட்ஸ் இனால் இறக்கின்ற னர். ஒவ்வொரு நாளும் 8000 நப ர்கள் இறக்கின்றனர்.

HIV ஒரு விசித்திரமான நோய் ஆகும். ஏனெனில், தொற் றுள்ள ஒருவர் அறிகுறி இல் லாமல் பல வருடங்கள் வா ழாம். இக்காலகட்டத்தில் அ வர் மூலம் மற்றவர்களுக்கு நோய்

பரவலாம். வருடங்கள் கழியு ம் போது நோய் அறிகுறிகள் தென்படும்.

HIV, எயிட்ஸ் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை.

வாய் மூல உடலுறவு பாதுகா ப்பானதா?

HIV தொற்றுள்ள சுரப்புகள் வாயிலுள்ள மென்சவ்வுகள் ஊடாக பரவலாம். எனினும், இதற்குரிய சாத்திய கூறு மிகவு ம் குறைவாகும்.

முத்தமிடல் மூலம் HIV பரவலாமா?

உமிழ் நீரில் மிக குறைந்த அளவிலேயே HIV காணப்படு கிறது. இது நோயை உருவாக்க கூடிய சாத்திய கூறுகள் குசைவாகும்.

பெண் தன்னினச்சேர்கையாளர்க ளிடையே HIV பரவ உள்ள சாத்தி  ய கூறுகள் என்ன?

இது கொள்கையளவில் நடக்கலா ம். யேனி வெளியேற்றம் இரத்தம் மூலம் பரவலாம்.

யோனி துவாரம் வாய் மூல உடலுறவை விட குதம் மூலம் உடலுறவு HIV சாத்திய கூறு அதிகமா?

ஆம். பாதுகாப்பற்ற குதமூல உடலுறவு அபாயகரமானது. குதத்தின் சுவரில் யோனியை விட குறைந்தளவு கலங்களே காணப்படுகின்றன. எனவே, இலகுவாக சேதமடைந்து இரத் தம் வெளியேறுவதால் தொற்றும் அபாயம் அதிகரிக்கும்.

HIV க்கும் மற்றைய இலிஙக நோய்களுக்கும் தொடர்புண் டா?

இலிங்க நோயுள்ள ஒருவருக்கு HIV இருப்பின், அது பரவும் வாய்ப்பு அதி கம். இது இலிங்க உறுப்பின் ஒரு புண் மூலமோ, அல்லது இலிங்க உறுப்பிலிருந்து வெளியேற்றம் மூல மோ ஏற்படலாம்.

HIV அல்லாதவருக்கு இலிங்க நோய் கள் இருப்பின் HIV தொற்று ஏற்பட அ திக வாய்ப்பு உள்ளது. இது சிபிலிஸ் மற்றும் ஹெபீஸ் போன்ற நோய்களி ல் ஏற்படும் புண்கள் மூலம் ஏற்படும்.

பின்வரும் முறைகளால் HIV தொற்று ஏற்படுமா? கை குலு க்கல், மலசலகூடங்கள், நீச்சல் குளங்கள், கரண்டிகளை பாவித்தல், முத்தமிடுதல், இருமல், தும்மல்.

இல்லை. HIV காற்றாலோ, நீராலோ அல்லது உணவாலோ பலவாது. மனித உடலுக்கு வெளியே அதிக கா லம் உயிர் வாழாது. எனவே, சாதார ண சம்பாஷனைகள் வைரஸ் பரவ உதவாது.

பச்சை குத்துதல், உடல் துளைத்துக்கொள்ளல் மற்றும் நாவி தரிடம் செல்லல் HIV அபாயத்தை அதிகரிக்கு மா?

இவற்றிற்கு பயன்படுத் தும் உபகரணங்கள் நரி யாக தொற்று நீக்கவில்லை எனின், தொற்று ஏற்படும் வாய் ப்பு இருக்கிறது.

நாவிதரிடம் தோல் வெட்டப்படாவிடின் தொற்று ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு. தற் போது நாவிதரிடம் ஒரு முறை பாவிக்க கூடியதாக இருப்பதால் பரவல் குறை ந்துள்ளது.

நுளம்புகளால் HIV பரவு மா?

இல்லை. நுளம்பு இரத்தம் உறுஞ்சும் போது தன்னிடம் இருக்கும் இரத்தத்தை உட்செ லுத்தாது. நுளம்பு தன் உமிழ் நீரை மட்டுமே உட்செலுத்தும்.

ஊசிகளின் பாவனைளால் HIV பலவுவது எப்படி?

HIV தொற்றுள்ள இரத்தம், ஊசி களினுள் காணப்படும் போது, இன் னொருவர் அதை பாவிக்கும்போ து அவரின் குருதி சுற்றோட்ட தொ குதிக்குள் அது செல்லும்.

தாயிலிருந்து குழந்தைக்கு HIV தொற்றலாமா?

HIV தொற்று கொண்ட கர்ப்பிணி தாய் சிசுவுக்கு பிறப்பின் முன் அல்லது பிறப்பின் போது வை ரஸ் இனை பரப்பலாம். மேலும் தாய்ப்பால் ஊட்டும் போதும் வைரஸ் இனை பரப்ப லாம்.

HIV தொற்றுள்ள கர்ப்பி ணி தாய் மருந்துகள் மூ லம் வைரஸ் பரவுவதை குறைக்கலாம். சத்திர சிகிச்சைமூலம் பிள் ளைப் பேறு மற்றும் தா ய்ப்பால் ஊட்டாமல் இருத்தல் மூலம் பரவுவதை குறை க்கலாம்.

இரத்த தானம் கொடுப்பதோ, அல்லது இரத்தம் எடுப்பதோ HIV அபாயத்தை அதிகரிக்கு மா?

குருதி பாய்ச்சலுக்கு முன் இர த்தம் HIV க்காக பரிசோதிக்கப் படும். எனவே, தற்போதய சூழ லில் இரத்தத்தால் HIV பர வுவது மிக அரிதாகும்.

ஒரு நம்பக தகுந்த நிறுவனத்திற்கு இரத்ததானம் கொடுத்தா ல் எந்தவொரு அபாயமும் இல் லை

உடம்புக்கு வெளியே HIV பரவ லாமா?

வெளிப்புற சூழலில் சிறிது கால மே வாழக்கூடிய HIVக்கு பரவு தல் மிகவும் கடினமாகும். இதுவரை, கொட்டப்பட்ட இரத்தம் மற்றும் சுக்கிலம் மூலம் HIV பரவியதற்கான சாறுகள் இல் லை. இதற்கான காரணம் வெ ளிப்புற சூழலில் HIV சிறிது கா லமே வழும்.

நான் மருந்து எருத்து கொண் டிருக்கும் போது, குறைந்தளவு வைரஸ் உடலில் இருப்பின், நோய் தொற்று ஏற்படலாமா?

குறைந்தளவு HIV வைரஸ் உடலில் இருந்தாலும் நோயை பரப்பக்கூடிய ஆற்றல் பேணப்படும்

HIV மற்றும் இலிங்க நோய்கள் பரவுவதை எவ்வாறு தடுப்பது?

* நோய் பற்றிய அறி வை வளர்த்தல்

* மேற்கூறப்பட்ட அறி குறிகள் காணப்படின், உடனடியாக வைத்தியரை அணுகவும்.

* உங்களுக்கு இலங்க நோய் இருப்பதாக கண்டு பிடிக்கப்ப ட்டால், உங்கள் துணையையும் குணப் படுத்த வேண்டும்.

* பாதுகாப்பான உடலுறவு (ஆணுறை, நம்பிக்கையான து ணை, தனித்துணை)

* பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால் இலிங்க நோய்க்கு பரிசோதித்து கொள்க.

* ஊசிகளை பரிமாற்றிக் கொ ள்ள வேண்டாம்.

* குருதி பாய்ச்சலுக்கு முன், அனைத்து குருதியையும் பரி சோதிக்கவும்

இலிங்க நோய்க்கான சிகிச்சை

கவனம் சிகிச்சையை விட மேலானது

– மருத்துவர் ரமேஷ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: