Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழாவிலிருந்து சில துளிகள்! – வீடியோ

உரத்த‍ சிந்தனையின் 30 ஆவது ஆண்டு விழா உங்களது பேராதரவுடன், கடந்த 09-03-2014 அன்று இனிதே நடைபெற் ற‍து.அதற்காக உங்கள் அனைவருக்கும்

இதயம் கனிந்த நன்றிகளை உரத்த‍ சிந்தனை சார்பாகவும், விதை2விருட்சம் இணையம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நிகழ்ச்சியின் 2.45 மணி முதல் 5.30 மணி வரை முதல் பகுதியாக வெளியூர் வாசக எழுத்தாளர்களுகாக நடை பெற்ற‍து.

இந்நிகழ்ச்சியின் முதல் பகுதிக்கு பிரபல இயக்குநர் திரு. எஸ்.பி. முத்துராமன் அவர்கள் தலைமையேற்று நடத்திக் கொடுத்ததோடு அல்லாமல் உரத்த‍ சிந்தனையின் தலைவர் திரு. இராஜசேகர் மற்றும் அதன் செயலாளர் திரு உதயம் ராம் ஆகிய இருவருக்கும், மேடையிலேயே பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற‍ பட்டிமன்றத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திருமதி கலைமதி ஆனந்த் அவர்களது வாதம் அடங்கிய வீடியோ

அடுத்த‍தாக கவியரங்கம் நடந்தது. இதில் கலந்து கொண்டவ ர்களில் ஒருவரான ஐதராபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. ராஜு அவர்களது அருமையான கவிதை படைப்பு அடங்கிய வீடியோ

நிகழ்ச்சியின் அடுத்த‍ பகுதியாக மாலை 5.45 மணிமுதல் இரவு 9.00 மணி வரை நடைபெற்ற‍து.அதில் தேனிசைத் தென்றல் தேவா, நடிகர் – இயக்குநர் ஆர். பாண்டியராஜன், ரோஜா மலரின் ராஜகுமாரியாம் குமாரி சச்சு, நீதிபதி கிரு பாகரன் அவர்கள் மற்றும் அமுதா பாலகிருஷ்ணன் ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு,சிறந்த எழுத்தாளர்களுக்கான விருது, சிறந்த சாதனையாளர்களுக் கான விருது மற்றும் சிறந்த செயல் வீரர்களுக்கான‌ விருது களையும் சான்றிதழ்களை வழங்கியும் அவர்களுக்கு பொன் னாடை போர்த்தியும் சிறப்பித்த‍னர். மேலும் பல நினைவுப் பரிசுகளை, உரத்த‍ சிந்தனையின் தோழர்களுக்கு வழங்கி அவர்களையும் சிறப்பித்த‍னர்.

நடிகர் பாண்டியராஜனின் சிரிக்க‍வும் சிந்திக்க‍வும் வைத்த‍ பேச்சு

பெருங்கடலாக நடந்தேறிய அந்நிகழ்ச்சியிலிருந்து சில துளிகள் உங்களுக்காக விதை2விருட்சம் ரா. சத்தியமூர்த்தி ஆகிய நான் எடுத்த‍ வீடியோக்களை இங்கே படைத்துள்ளே ன்.

எனது கன்னி முயற்சியில் உருவான வீடியோக்களில் ஏதே னும் பிழைகள் இருந்தால் தயைக்கூர்ந்து பொறுத்த‍ருள வேண்டுகிறேன்.

மேலும் சில காட்சித்துளிகளின் பகிர்வு இன்னும் தொடரும் 

3 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: