Tuesday, March 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (16/03/14): கணவன் -மனைவி உடலுறவிற்கு பின், தலைக்கு குளிக்க‍ வேண்டும் என்று யார் சொன்ன‍து?

அன்பு சகோதரிக்கு —

இரண்டு பெண் குழந்தைகளி ன் தாய் நான். முதல் பெண், பி.இ., முதலாம் ஆண்டும், இ ரண்டாவது பெண், பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர். என் கணவர், விமான படையில் பணிபுரிந்து, வெளியில் வந்து , தற்போது, மத்திய அரசு துறையில்,

வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு பத்து வருடங்களாகவே கோவி ல்களுக்கு செல்வது தான் இஷ்டம். அது போக, தலைகுளித்தால் என் உடம்புக்கு ஒத்துக் கொள்வதில்லை. இதனால், சாமி பேரைச் சொல்லி, நான், என் கண வரை விட்டு விலக ஆரம்பித்தேன், .

அவரும் என்னிடம் எவ்வளவோ சொல் லிப் பார்த்தார்; நான் கேட்கவில்லை் வி ளைவு, அவர், தற்போது, வேறு ஒரு பெ ண்ணிடம் தொடர்பு வைத்துள்ளார். அதையும், அவரே என் னிடம் மறைக்காமல் சொல்லிவிட்டார். ஆனால், என்னால் தான், இதை ஏற்றுக் கொ ள்ள முடியவில்லை. அத னால், இப்போது என்னை யே எனக்கு பிடிக்கவில் லை.

என் கணவர் தொடர்பு வைத்திருக்கும் பெண் ணையே, என் கணவருக் கு திருமணம் செய்து வைத்துவிட்டு, நான் எங்கா வது கோ வில், குளம்போய், மொட்டைபோட்டு, ஆசிரமத்தில் சேர்ந்து விடலாமா அல்லது என் கண வரின் நடத்தைகளை கண்டு ம், காணாமலும் இருந்துவிட வா இல்லை தற்கொலை செய்து கொள்வ தா?

ஒரு நல்ல பதிலை தாருங்க ளேன்… ப்ளீஸ்!

— இப்படிக்கு,
அன்பு சகோதரி.

அன்பு சகோதரிக்கு —

‘என்னையே எனக்கு பிடிக்கவில்லை… முடியாத பட்சத்தில், தற்கொலை செய்து கொள்வதா ; இல்லை, கணவர் விரும்பும் பெண்ணையே அவருக்கு மறு திருமணம்செய்து வைத்து,நான் சாமியாராக போவதா…’ என்று கேட்டு, உங்களின் உள்ளக் குமு றல்களை கொட்டி எழுதிய கடித ம் கிடைக்கப் பெற்றேன்.

இன்ஜினியரிங் முதலாம் ஆண் டு மற்றும் பத்தாம் வகுப்பு படிக் கும் இரு பெண்களுக்கு தாய் நீ. கணவரோ விமானப் படை யில் பணிபுரிந்து, இப்போது மத்திய அரசு துறையில் பணிபு ரிகிறார். அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம். உன் இறை வழிபாடு முறைகள், எதிர்பார் க்கும் சடங்குகள் அதை தடை செய் கிறது.

ஒவ்வொரு முறையும் குளித் து விட்டு வேலை பார்ப்பதா ல், உங்களின் உடல் நலம் பா திக்கப்படுகிறது. அதனால், செக்ஸ் வேண்டும் என, கருதிய உங்கள் கணவர், வேறு ஒரு பெண் ணை நாடியிருக்கிறார். இதனால், குடும்பத்தில் குழப்பம். அப்படித் தானே!

சகோதரியே, சில விஷயங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வே ண்டும். கணவன் -மனைவி உடல் உறவிற்கு பின், தலைக்கு குளித்து விட்டுத்தான் சமையல் செய்வது அல்லது கோவிலுக்குச் செல்ல வேண்டும்… இல்லையேல், அது பாவம், தீட்டு என்று யார் சொன்னது? இதை, ஒரு சட ங்காய் யார் ஏற்படுத்திய து?

உறவிற்கு பின் உடலை சுத்தமாய், கழுவினாலே போதும். இன்றும் சிலர், வீடுகளில் படுக்கைய றையில், எந்த சாமி பட மும் வைத்திருப்பது இல் லை. கேட்டால், தெய்வ குத்தம் என் று கூறுவர். இவைகள் எல்லாம், பல்வேறு காலக்கட்டத்தில், நமக்கு நாமே ஏற்படு த்திக் கொண்ட பழக்கங்கள்.

பல ஆண்டுகள், ராணுவத் தில் பணிபுரிந்த கணவர், சிவில் வாழ்க்கையை துவ ங்கும் போது, மனைவியுட ன் சந்தோஷமாக இருக்க வேண்டும் என நினைப் பதில், எந்த தவறும் இருப்பதாக தெரி யவில்லை. இந்த நேரத்தில், ஆயிரம் கண்டிஷன் போட்டதா ல், கடுப்பாகி, வேறு ஒரு பெண்ணை நாடியிருக்கி றார் உன் கணவர்.

அப்பவும் உன் அனுமதியு டன்தான் இச்செயலையு ம் செய்தி ருக்கிறார். உன் கணவரின் இம்மாதிரியா ன நிலைக்கு, நீயே மூல காரணம்.

க, உன்னிடம் கி டைக்காத ஒன்றை, வேறு ஒரு பெண் ணிடம் பெற்று கொண்டிருக்கிறா ர். நீயோ, அதையெ ல்லாம் பொருட்படு த்தாமல், இறை வழிபாடு என்ற பெயரில் உன்னையும், கணவரையும் ஏ மாற்றி, மனதளவில் துன்பப் பட்டுக் கொ ண்டிருக்கிறாய்.

சரி, உன் பிரச்னைக்கான வழிமுறைகளை பார்க்கலாம்…

றக்கும் வரை கணவன் – மனைவி தாம்பத்திய உறவு இருப்பது நலம்; அது இயற் கையும் கூட. அது, அவர்க ளின் ஆயுட்காலத்தை அதி கரிக்கும். இதற்கு எந்த கா லமும், நேரமும் கிடையா து என்ற, யதார்த்தமான உ ண்மையை தெரிந்து கொ ள்ள வேண்டும்.

துறவறத்தின் மூலம் மட்டுமல்ல, இல்லறத்தின் மூலமும் இறைவனைக் காண முடியும் என்பதை, மனதில் வைத்துக் கொள். 

உன் கணவர் செய்யும் அனைத்தையும், கண்டு ம் காணாதது போல இ ருக்க வேண்டிய அவசி யம் இல்லை. அவரிடம் நேராக, மனம் திறந்து உன் நிலையை எடுத்து ரைத்து, படிப்படி யாக அவரை சந்தோஷப்படுத்தி, முடிவில், உன் வழிக்கு கொண்டு வர முயற்சி எடு.

வாழ்க்கையில் அதிகமா ன ஆண்டுகள், ராணுவத் தில் இருந் ததினால், உன் கணவருக்கு ‘செக்சில்’ அ திக ஆசை ஏற்படுவ தில் தவறில்லை. இருப்பினு ம், முதலில் நீ கொஞ்சம் விட்டுக் கொடுத்து, பின் உன் அன்பினால், உன் நி லையையும், குடும்ப சூழல், மகள்களின் முன்னேற்றம் குறி த்து விளக்கலாம். மேலும், உடல்உறவைத்தவிர, வேறு  முறை களைப் பற்றியும் பக் குவமாய் எடுத்துச் சொல்ல லாம்.

கணவரின் செயலை, எந்த காரணத்தைக் கொண்டும், பெரிய குற்றமாய் பாவிக்கா மல், அவருக்கு புரிய வைக்க வேண் டும்.

மொட்டையடித்து காவி உடை உடுத்துவது, மனைவி, அம்மா என்ற, உன் பல கடமைக ளை தட்டி கழிக்கும் செய ல். எந்த மதத்திலும், ‘செக் ஸ் கூடாது’ என்று, சொல் லியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, உன்னையே நீ மீண்டும், சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

உன் குழந்தைகளுக்கு, இவ்விஷயம் தெரிந்துவிட்டால் என் ன நினைப்பார்கள் என்று, கவலைப்படுவதை விட, கணவரி டம் எடுத்துச் சொல்லி, பாது காப்பான உறவை வைத்துக் கொள்ளலாம்.

இப்பிரச்னை பெரிதாகி, உன் வளர்ந்த பெண் குழந்தைக ளுக்கு தெரிய வந்தால், அவ ர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்று, யோசனை செய்.

எந்த ஒரு பிரச்னைக்கும், தற்கொலை, ஒரு தீர்வாகிவிடாது.
உன் பிரச்னையை உன் னால் சமாளிக்க முடி யாது என, ஆணித்தர மாய் நினைக்கும் பட்சத் தில், அருகில் இருக்கும் மனநல மருத்துவரை, ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறுவது நலம்.

சகோதரியே… கடித ஆரம்பத்தில், ‘கடவுள் துணை’ என்று, எழுதியிருந்தாய். ‘கணவர் துணை’ என்பதையும், மனதில் கொண்டு, இல்லற வாழ்வில் இசைந்து வாழ, என் அன்பான வாழ்த்துகள்.

— அன்புடன் சகுந்தலா கோபிநாத் (நன்றி – தினமலர் வாரமலர்)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

4 Comments

Leave a Reply

%d bloggers like this: