Sunday, June 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

க‌லக்கிய, கலக்கப்போகும் கலைஞர்

தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன? என்பதை திராவிட முன்னேற்ற‍க் கழகத் தலைவரும் தமிழ கத்தில் 16ஆண்டுகள் முதல்வராக பொறுப்பு வகித்த‍வருமா ன கலைஞர் கருணாநிதி, அவர்களின் சாதனைகளாக முகநூ லில் வெளிவந்தவை 

அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என் ற பெயரை விடுத்து தமிழ் நாடு என்று பெயர் சூட்டியது ஒரு

பெருஞ்சாதனை!

அண்ணா காலத்தில்தான் சுய மரியாதைத் திருமணங்க ள் சட்டப்படி செல்லுபடியாக் கப்பட்டன.

அண்ணா காலத்தில்தான் கழ க ஆட்சியில் இந்திமொழி ஆதிக்கம் அகற்றப்படவும் – தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொ ழித் திட்டம் அறிவிக்கப்படவுமான நிலை.

அண்ணா மறைவுக்குப்பின் நான் முதலமைச்சராகப் பொறுப் பேற்று ஆட்சி நடத்திடும் இந்த ப் பதினாறு ஆண்டுகாலத்தில்;

1. மனிதனை வைத்து மனிதன் இழுத்த கை ரிக்ஷாக்களை ஒழித்துவிட்டு, அவற்றுக்கு மா ற்றாக அந்தத் தொழிலாளிக ளுக்கு இலவச சைக்கிள் ரிக்ஷா வழங்கப்பட்ட திட் டம்.

2. பட்டிதொட்டி முதல் பட்டினக்க ரை வரையில் பார்வை இழந்தோர் க்கு இலவசக் கண்ணொளி வழங்கும் திட்டம்.

3. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்.

4. விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – இலவச மின்சா ரத் திட்டம்.

5. பெண்களுக்கு சொத்துரிமைச் சட்டம் – வேலையில் 30 சதவிகித ஒதுக்கீடு.

6.அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆக ச்சட்டம்.

7. குடிசை மாற்று வாரியம்.

8. குடிநீர் வாரியம்.

9. ஆதி திராவிடர்க்கு இந்தியாவிலேயே முன் மாதிரியான இலவச வீடுகள் வழங்கும் திட்டம் .

10. மலம் சுமக்கும் துப்புரவுத் தொ ழிலாளர் மறுவாழ்வுக்கு மாற்றுத் திட்டம்.

11. பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு–அரசு போக்கு வரத் துக் கழகங்கள் அமை ப்பு; பேருந்துகள் கிராமங்களுக் கெல்லாம் செல்ல வழி வகை காணப் பட்டது.

12. உடல் ஊனமுற்றோருக்கு உதவி வழங்கும் பல்வேறு திட்டங்கள்.

13. விவசாயிகளுக்கு 7000 கோடி ரூபாய் கடன் ரத்து திட்டம் – வட்டி 9 சதவிகிதத்திலிருந்து 4 சத விகிதமாக் குறைப்பு.

14. கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்றாக்கி, தற்போது ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்த்திட்டம்.

15. விலைவாசியைக் கட்டுப்படுத்திட குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் – 50 ரூபா ய்க்கு 75 ரூபாய் பெறுமானமுள்ள மளி கைப் பொருள்கள்.

16.காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர் ச்சி நாள் என்று சட்டம் – மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தும் ரத்து.

17. சத்துணவில் வாரம் மூன்று முட் டைகள் – வாழைப்பழம் வழங்கும் திட்டம்.

18. புதிய புதிய பல்கலைக் கழக ங்கள் – பொறியியல் கல்லூரி கள்–மருத் துவக்கல்லூரிகள்–கலைஅறிவியல் கல்லூரிகள்.

19. பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இல வச பேருந்து பாஸ்.

20. ஏழை மகளிருக்கு முதுகலைப் பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி.

21. சத்துணவு ஊழியர்களுக்கும் கால முறை ஊதிய ம்.

22. பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடம் எனச் சட்டம்.

23.பரிதிமாற்கலைஞரின் கனவு நன வாகி தமிழ் செம்மொழி என அறிவி ப்பு.

24. தைத்திங்கள் முதல்நாள்–தமிழ்ப்புத்தாண்டு எனச்சட்டம்.

25. மே தினத்திற்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை.

26. ஏழைப் பெண்களின் திருமண உதவிக்கு 20 ஆயிரம் ரூபாய் நிதி உதவி.

27. கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி

28.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 25 நல வாரியங்கள்.

29. 50 வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு மாதம் 400 ரூபாய் வழங்கும் திட்டம்.

30. மகளிர் சுய உதவிக் குழுக்கள் – சுழல் நிதி உதவிகள்.

31. அதைப் போலவே இளைஞர்க ளுக்கும், விவசாயிகளுக்கு ம் சுய உதவிக் குழுக்கள்.

32. தொலைக்காட்சிப்பெட்டிக ள் இல்லா வீடுகளுக்கு இலவ ச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்.

33. எரிவாயு இணைப்புடன் கூ டிய இலவச எரிவாயு அடுப்புக ள்.

34. பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம்.

35. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்.

36. நமக்கு நாமே திட்டம்.

37. ராமநாதபுரம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்.

38. திருச்சியில் உய்யகொண்டான் – சே லத்தில் திருமணி முத்தாறு சீரமைப்புத் திட்டங்கள்.

39.மாநிலத்திற்குள்நதிகளை இணைக்கும்மாபெரும் திட்டம்.

40. நகராட்சிகள் அனைத்திலும் பாதாளச் சாக் கடைத் திட்டம்.

41. சென்னை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட் டம்.

42. சென்னை மாநகரில் விளம்பரப் பலகைகளை அகற்றி சிங்காரச் சென்னையாக்கிய திட்டம்.

43. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்.

44.கட்டணத்தை உயர்த்தாமல் பத்தாயிரம் புதிய பேருந்துக ள்.

45. புதிய சட்டமன்ற வளாகம் – தலை மைச் செயலகம்.

46. உலகத் தரத்தில் அரசு நவீன நூலகம்.

47. உழவர் சந்தைத் திட்டம்.

48. வேலைநியமனத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு அரசுத்துறை களில் புதிதாக 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.

50. 15ஆயிரத்துக்கும்மேற்பட்ட புதிய காவலர்கள் நியமனம்.

51.இந்தியாவிலேயே முன்னோடியாக மூன்று காவல் ஆணையங்கள் (போலீஸ் கமிஷன்கள்).

52. வருமுன் காப்போம் திட்டம்.

53. ஏழைச் சிறார் இதய நோய்த்தீர்க்கும் திட்டம்.

54. நிலமற்ற ஏழைகளுக்கு இலவச நிலம்.;

55. புறம்போக்கு நிலங்க ளில் வீடுகட்டி வாழ்வோ ருக்கு வீட்டு மனைப் பட்டா.

56. இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு.

57. கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் ரத்து.

58. மிகப் பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு  20 சதவிகித இட ஒதுக்கீடு.

59. பழங்குடியினருக்கு புதிதாக ஒரு சதவிகித இட ஒதுக்கீடு.

60. அரசு அலுவலர்களுக்கு மத்திய அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம்.

61. அரசு அலுவலர் இற ந்தால் குடும்பப் பாது காப்பு நிதி.

62. விடுதலை வீரர்களு க்கும், தியாகிகளுக்கும் நினைவகங்கள் – குடும் பங்களுக்கு நிதி உதவிகள்.

63. சென்னையில் வள்ளுவர் கோட்டமும், குமரி முனையில் 133 அடி உயரத்தில் வள்ளுவருக்கு சிலை.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: