நான்காம் நாள் போர் முடிந்த அன்றிரவு. பீஷ்மரைக் காணச் சென்ற துரியோதனன் ”நீங்க ளும், துரோணரும், கிருபரும் இருந்தும் அந்த பாண்டவர்க ளால் என் தம்பியர் மாண்டன ரே! பல வீரர்கள் உயிர் இழந்த னரே!!! பாண்டவர்கள் வெற்றி யின் ரகசியம் என்ன?” என்றா ன்.
“இது குறித்து பலமுறை உன்னிடம் சொல்லி இருக்கிறேன். பாண்டவர்களுடன்
சமாதானமாகப் போவதே நன்று என வற்புறுத்தி இருக்கிறே ன். எங்கு கண்ணன் உள் ளாரோ அங்கு தர்மம் இ ருக்கிறது. எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி இருக்கிறது. இப்போதும் காலம் கடந் துவிடவில்லை. போரை க்கைவிட்டு அவர்களுட ன் இணை . இல்லையே ல் மீளாத் துயரில் ஆழ்வாய்” என்றார் பீஷ்மர்.
ஆனால் துரியோதனன் இதற்கு இணங்கவில்லை. அதை உதா சீனம்செய்து, மீண்டும் மீண்டும் போர் புரிந்து அந்த பாண்டவர் களை கூண்டோடு அழிக்க வேண்டும் என்ற குறிக்கோளே அவனிடத்தில் அதீதமாக காண ப்பட்டது. அந்த தீய எண்ணத்தி னால்தான் தனக்குத்தானே அழிவைத் தேடிக் கொண்டான்.
– விதை2விருட்சம்
Reblogged this on Gr8fullsoul.