Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எதிர்பாராத உடலுறவுக்குப் பிறகு கைகொடுக்கும் அவசரகாலக் கருத்தடை !

கருத்தடை எதிர்பாரா த உறவின் பின் கை கொடுக்கும்

” ஆண்களி ல் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண் களை வல்லுறவுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.” சில காலத்தின்
முன்பத்திரிகைகளில் வெளியான மிகவும் சுவார்ஸமான செ ய்தி எனலாம். எமது ஆண் களின் வக்கிரத் தன்மை யையும் பெண்களின் உண ர்வை மதிக்காத மேலாதிக் க உணர்வையும் காட்டுகி றது என்று சொல்லிவிட்டு மறக்கக் கூடிய விடயம் அல்ல.

இதன் பின்னாலுள்ள ஆபத்துக்கள் எண்ணிலடங்காதவை. சமூகத்தால் ஏளனப்படுத்த ல், ஒதுக்கி வைக்கப்படுத்த ல், பாலியல் தொற்றுநோய், மன விரக்தி எனப் பல. வே ண்டாத கர்ப்பம் மிகமுக்கிய விடயமாகும்.
வேண்டாத கர்ப்பம் தங்குவ தைத் தடுப்பதற்கு அவசரகால கருத்தடை 

Emergency contraception) முறை கை கொடுக்கலாம். ஆனால் இது வல்லுற வின் பின்னான கருத்தடையை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல.

அவசர கருத்தடை என்றால் என்ன? 

இதை உடலுறவுக்கு பின்னாலான கருத் தடை (post-coital contraception)  எனவு ம் கூறுவர். Morning after pillஎனவும் சொல்லப்படுவதுண்டு. உடலுறவு கொ ண்ட ஓரிரு நாட்களுக்குள் கருத்தங்கா மல் இருப்பதற்காக செய்யப் படும் கருத்தடை முறை இது வாகும். கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகித்து வராத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமா க உடலுறவு கொள்ள நேர்ந் தால் கரு தங்காமல் தடுப்ப தற்கானது. 
இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 
பாதுகாப்பற்ற உடல் உறவு, கருத்தடை முறை தவறி விட் டமை (மாத்திரைபோடாமை, ஆணுறை அணியாமை போ ன்றவை), அல்லது ஒழுங்கானமுறையில் உபயோகிக்கா மை, விரும்பாத உறவு அதாவது வல்லுறவு போன்றையே முக்கிய காரணங்களாகும்.
எத்தகைய சந்தர்ப்பங்களி ல் இது உதவும்?
எதிர்பாராத உடல்உறவு கொண்டால் என ஏற்கன வே சொன்னோம். அத்த கைய தருணங்கள் எவை?.

 • வேறு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன் படுத்தாத தருணங்களில்
 • வழமையான உடலுற வின்போது ஆணுறை  (Condom)  உடைந்திருந் தால், வழுகிகியிருந்தா ல் அல்லது சரியான மு றையில் அணியாதிருந் தால்.
 • வழமையாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைக ளை மூன்று அல்லது அ தற்கு மேற்பட்ட தடவை கள் தொடர்ச்சியாக உட் கொள்ளாதிருந்தால்.
 •  டீப்போ புறவிரோ எனப் படும் கருத்தடை ஊசி மருந்து ஏற்றப்படுவது நான்கு வாரங்களுக்கு மேல் தாமதித்தி ருந்தால்.
 • பின்வாங்கல் முறையின் (Withdrawal method) போது ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனா ல் விந்து யோனியினுள் அல்லது பெண் உறுப்பி ன் வாயிலில் சிறிதேனு ம் சிந்தியிருக்கக் கூடிய நிலையில்.
 • பாதுகாப்பான நாட்களில் மட்டும் உறவு வைக்கும் மு றையில் (abstinence metho d) தினங்களைக் கணிப்பதி ல் தவறுகள் ஏதாவது ஏற் பட்டிருந்தால்.
 • நீங்கள் பயன்படுத்தும் வே று எந்தக் கருத்தடை முறை யாயினும் (diaphragm or cervical cap, spermicide tablet etc) அது தவறியிருக்கும் என எண்ணினால்.
 • லூப் எனப்படும் கருத்தடை வளையம் (intrauterine cont raceptive device (IUD) வைத் திருந்து போது அது வழுகியி ருந்தால்.
 • ஒருவர் உடலுறவு வைப்பத ற்கு நிர்பந்திக்கப்பட்டிருந் தால். வன் முறைகள் நிறை ந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோரால் மட்டுமின்றி, பாடசாலையில் பிள்ளை யைச் சேரப்பதற்கும், பல்க லைக் கழகங்களில் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள் வதற்கும், அலுவலகங்களி ல் தவறான முறைகளிலும் நடைபெறுவதாக ஊடகங்க ள் அடிக்கடி சொல்கின்றன. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவு இல்லாத தாலும், கருக்கலைப்பு சட்ட விரோதமாக இருப்பதாலும் பல பெண்கள்  சோகக் கண் ணீர் வடிப்பது மட்டு மின்றி சட்ட விரோத கருக்கலைப்பு களால் பல உயிர்கள்  பலி கொள்ளப்படுவதும் இரகசிய ம் அல்ல.

அவசர காலக்கருத்தடை முறை கள்
அதில் இரண்டு வகைகள் உண்டு.

 1. அவசர கருத்தடை மாத்திரைகள்.
 1. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவ து. உண்மையில் இது கருப் பையினுள் வைக்கும் ஒரு வளையம்  ஆகும்

அவசர கருத்தடைமாத்திரைக ள் 
மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான். இதில் பெ ண்களின் உடலில் இயற்கை யாகச்சுரக்கும் ஹர்மோன் ஆன  levonorgestrel இருக்கிற து. இது பல பெயர்களில் கி டைக்கிற து. இலங்கையில் பி ரபலமானது POSTINOR – 2   என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலா ம். மருத்துவ ரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடிய தாகும். ஒரு பைக்கற்றில் இர ண்டு மாத்திரைகள் இருக்கும். இ ரண்டும் ஒரு தடவைக்கு தேவை யானதாகும்.
3 வழிகளில் இது செயற்படுகிற து என்கிறார்கள். சூலகத்திலிரு ந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களு ம், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். அல்லது கருவானது கருப்பையில் தங்குவ தை தடுக்க லாம். 
எவ்வாறு உபயோகிப்பது?
எதிர்பாராத பாலுறவு கொ ண்ட பின் எவ்வளவு விரை வாக எடுக்க முடியுமோ அ வ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்ச யமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது. 
ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும் என் றோ ம். இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண் டும். அல்லது ஒரு மாத்திரை யை உடனடியாகவும் இரண் டாவது மாத்திரையை 12 ம ணி நேரத்திற்குள்;ளும் எடுக் க வேண்டும். ஆயினும் 16 ம ணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூ டாது. 
ஒரு வேளை நீங்கள் மாத் திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்தி ற்குள் வாந்தி எடுத்தால், ம ருந்து வாந்தியுடன் வெளி யே போய்விட்டது என்றே கருத வேண்டும். அவ்வா றெனில் மீண்டும் மாத்தி ரையை எடுப்பது அவசிய ம்.
கருத்தடை வளையம்
கருத்தடை வளையம். கொப்பரா ல் ஆன கருத்தடை வளையமா னது copper-bearing  IUD) வழமை யான கருத்தடை முறைகளில் ஒ ன்று. ஆனால் இதனை அவசர காலத் கருத்த டையாகவும் பய ன்படுத்தலாம். உடலுறவு கொண் ட 5 நாட்களுக்குள் இதை கருப் பையiனுள் வைத்தால் கரு தங் காது. 
இதை நீங்களாக வைக்க முடியா து. மருத்துவரே வைக்க வேண்டும்.
இறுதியாக
ரு பெண் தனக்கு அடிக்கடி குரு திப் போக்கு ஏற்படுவதாக மருத்து வரிடம் சென்றாள். அதற்கான கார ணத்தை அறிய பல கேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை. கருத்தடைமு றைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீ ர்களா என்று வினவியபோது அவ சரகால கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.
“எப்படி உபயோகிப்பீர்கள்” எனக் கேட்டார்.
“வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் பாவிப்பேன்” என் றாள். அவசர காலத்திற்கு மட் டும் உபயோகிக்கவேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும் ?. 
அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்தி ற்கு மாத்திரமே ஆனது. வழ மையான கருத்தடை முறை அல்ல. இதனையேதொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண் ணுவது தவறாகும். வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண் ணுறை , இயற்கை முறை எனப் பலவும் உண்டு.
தவாறக உபயோகித்ததால் அத் தகைய பக்கவிளைவு ஏற்பட்டது . அவசரகாலத்திற்கு மட்டும் பய ன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் தேசத்தலை வர்களால் ஆட்சிக் காலம் முழுவது ம் பயன்படுத்தப்படுத்தப்படுவது ஞா பகத்திற்கு வருகிறதா? முந்தியது காப்பாற்றும். பிந்தியதுகொல்லும். 

Dr. M.K. முருகானந்தன், MBBS(Cey), DFM (Col), FCGP (col) 
குடும்ப மருத்துவர்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: