Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வங்கிகள், வாடிக்கையாளரான உங்களிடம் மறைக்கும் 10 மர்ம விஷயங்கள்!

சேமிப்பு, செலவு, கடன், வீடு கட்ட மற்று ம் நகைகளை பாது காக்க என பல்வேறு சேவைகளை நமக்கு வங்கிகள் அளித்து வருவதால், அவை நமக்கு உதவுவது அ வற்றின் கடமை என்றே நீங்கள் எண்ணி யிருப்பீர்கள். ஆனால் வங்கிகள் தங்களு க்கு எப்படி உதவி செய்து கொள்கின்றன என்று தெரியு மா?நீங்கள் காசோலை யை உங்களுடைய கணக்கில் வரவு வை த்தவுடனேயே அந்த பணம் கணக்கில் வந்து விடாது. அதற்கு சிறிதளவு காலம் தேவைப்படும். அது வெளியூர் கா சோலையாக இருந்தால்

இந்த காலஅளவு சற்றேஅதிகமாக இருக்கும். 2012ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, மின் மயமாக்கி காசோலைகளை விரைவில் பணமாக்க உத்த ரவிட் டது.

அதுவரையிலும் வெளியூர் காசோலைகளை பணமாக் க குறைந்தபட்சம் 15 நாட்க ளில் இருந்து 3 வாரங்கள் வ ரை காலம் இருந்து. ஆனால், எவ்வளவு அதிக நாட்கள் கால தாமதமாக உங்களுடைய பணம் கணக்கிற்கு வரவு வைக்க ப்படுகிறோ, அந்த அளவிற்கு வங்கிக்கு இலாபம் என்பதை இங்கே கவனிக்க வேண் டும்.

இந்த பணத்தை எல்லாம் வங்கிகள் தடையற்ற நிதி ஆதாரங்களாக கொ ண்டிருக்கின்றன. 2011 ஆ ம் ஆண்டில் மட்டும், இவ் வகையில் கணக்குகளி ல் செலுத்தப்பட்ட காசோலைக ளை இ-கிரெடிட் முறையில் செய்வதை தாமாதமாக்கி சுமார் 620 கோடிகள் வரை வங்கி கள் சம்பாதித்துள்ளன.

டெபிட் கார்டு திருடப்படுதல் அல் லது தொலைத்து விடுதல் பற்றி நாம் பேசும் போது டெபிட் கார்டு களைவிட கிரெடிட் கார்டுகள் பாது காப்பானவையாக உள்ளன. இத னை உங்களுடைய வங்கிகள் உங் களிடம் சொல்வதில்லை. எனவே, உங்களுடைய வங்கியினரிடம் பே சி, இவ்வாறு தொலைந்து போனா லோ அல்லது திருடு போனாலோ எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவ டிக்கைகளை அறிந்து கொண்டு, தவறுகள் நடக்காதவாறு உ ங்களுடைய கணக்கை பாதூக த்துக் கொள்ளுங்கள். இவ் வ கையிலான எதிர்பார்க்காத சூ ழல்களை சமாளிப்பதற்காகவே  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பண அட்டை பாதுகாப்பு திட்ட ம் ஒன்றைஉருவாக்கி உள்ளது. இது போன்ற சூழல்களுக்கு உங்கள் வங்கி தருவது என்ன என்பதை கண்டறி யுங்கள்.

காசோலை பவுன்ஸ் ஆவது போன்ற மோசமான சூழல்க ளை மக்கள் எதிர்கொள்ள வி ரும்புவதில்லை. எவ்வளவு செ லவு செய்தாவது, இது போன்ற சூழல்களை தவிர்க்க வேண்டு ம் என்று அவர்கள் முயற்சி செ ய்வார்கள். இவ்வாறு செக் பவுன்ஸ் ஆவதை தவிர்க்கும் நோ க்கில் மிகப்பெரிய தொகை களை தங்களுடைய நடப்பு கணக்கில் அவர்கள், வங்கி களுக்கு மிகவும் வசதியாக விட்டு வைப்பார்கள். இதன் மூலம், நீங்கள் வங்கிகளின் சேமிப்பு கணக்கில் பணத் தை வைக்கும் போது உங்களுக்கு தர வேண்டிய வட்டியை வங்கிகள் தர வேண்டியிருப்பதில்லை.

பின்தேதியிட்ட காசோலை கள், காசோலைகள் பவுன் ஸ் ஆவதை தவிர்க்க உத வுமா? என்று கேட்டால் அ தற்கு பதில் இல்லை. உங் களுடைய கணக்கில் நீங் கள் எதிர்பார்க்கும் அளவு பணம் வரும் என்று எண் ணி, பின் தேதியிட்ட கா சோலையை தயார் செய் வீர்கள். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள நாளுக்கு முன்னதா கவே அந்த காசோலை யை வங்கிகளில் செலுத் தி பணமாக்கலாம். இவ் வாறு செய்யும்போது செ க் பவுன்ஸ் ஆகும். நிறை ய பிரச்னைகள் வரும். எனவே, இந்த வழிமுறை யை கூடிய வரையிலும் தவிர்க்கவும்.

உங்களுடைய கணக்கு தொடர்பாக ஏதேனும் நடவடிக்கைக ள் எடுக்க வேண்டும் அல்லது பரிமாற்றங்கள் செய்ய வேண் டும் என்று நீங்கள் விரும்பினா ல், அவ்வாறு செய்வதற்கு பல் வேறு வழிமுறைகளை வங்கி கள் அளிக்கின்றன. அதாவது, இணையவழியில்படிவங்களை நிரப்பி கேட்டுக் கொள்ளுதல், வாடிக்கையாளர் சேவையில் கேட்டல் அல்லது வங்கிக்கு நே ரடியாக சென்று வருதல் போன் றவை. ஆனால், இவை எல்லா வற்றிலும் சிறந்த மற்றும் பலன் தரக் கூடிய வழிமுறை நீங்கள் வங்கிக்கு நேரடியாக சென்று வருவதுதான் என்பதை வங்கி சொல்வதில்லை.

பிற நிறுவனங்களைப் போலவே, நெடுநாட்கள் தங்களிடம் கணக்கு வை த்துள்ள, உண்மையான வாடிக்கையாளருக்கெ ன சிலசலுகைகளை வங் கிகளும் வைத்துள்ளன. ஆனால், பெரும்பாலான நேரங்களில் வங்கிகள் இந்த விஷயத்தை விளம்பரப்படுத்துவதில்லை. நீங்கள் தான் அவர்களிடம் கேட்கவேண்டும். சற்றே அழுத்தம் கொடுத்தல், நெடுநாள் வாடிக்கையாளர்களுக்கு கட்டண விலக்குகளை யும் கூட வங் கிகள் தருகின்றன.

பல்வேறு வங்கி நிறுவனங்களாலும் இந்த குறிப்பு தரப்பட்டு வருகிறது. கா ரணம் என்ன தெரியுமா? இந்த பதிவு களை வைத்திருப்பது ஒரு தானியங் கி செயல்பாடாகும். இந்த செயல்பா ட்டை வழங்கும் மென்பொருள் சில பிழைகளை உருவாக் கலாம். இந்த பிழையால் ஒரே செயல்பாடு பலமு றை செய் யப்பட்டதாக ‘டூப்ளிகேஷன்’ ஆகலாம். எனவே, அனைத்து இரசீது களையும், ஒவ்வொரு முறையும் பத்திரப்படுத்தி வை த்தல் சிறந்தது.

வங்கிககளில் பல்வேறு விதமா ன வட்டி விகிதங்களுடன் கண க்குகள் உள்ளன. நீங்கள் வட்டி விகிதம் குறைவாக இரு க்கும் கணக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான் அவர்க ளுடைய விருப்பமாக இருக்கு ம். எனவே, அவர்கள் வட்டி வி கிதம் அதிகமாக இருக்கும் க ணக்குகள் பற்றி விளம்பரப்படுத்த மாட்டார்கள் என்பது ஊர றிந்த உண்மை. எனவே , அதிக வட்டி விகிதங் கள் உள்ள கண க்குகள் பற்றி அறியவேண்டிய து, உங்களுடைய ஆர் வத்தைப் பொறுத்த வி ஷயமாக இருக்கும்.

நீங்கள் ஒரு படிவத்தில் கையெழுத்திடும் முன்னர், அதனை முழுமையாக, நன்றாக படித்துப்பார்க்கவு ம். வங்கி துறையினரால் பயன்படுத்தப்படும் சில வா ர்த்தைகள் சிலவற்றை அ ப்போது நீங்கள் படிக்க நேரிடும். யாருடைய உதவியையாவ து கேட்டு, அந்த வார்த்தைகளுக்கான விளக்கங்களை கேட் டு, புரிந்து கொண்டு பின்னர் கையெழுத்திடவும். இது வங் கி அலுவலரின் நேரத்தை சற்றே எடுத்துக் கொண்டா லும், பின்வரும் நாட்களில் உங்களுக்கு மிகவும் பலனு ள்ளதாக இரு க்கும்.

நீங்கள் சிறுதொழில் செய்வ தற்காக வங்கிகளிடம் கடன் பெற நினைத்தால், உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப் படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சிறு தொழில் கடன்கள் வழங்குவதில் பல்வே று வங்கிகளும் பாரபட்சமாக நடந்துகொள் ளவே நினைக்கின்றன. அவர்கள் கடனை திரும்ப பெறுவது குறித்து அச்சப்படுகின்றன ர். எனவே, இவ்வகையிலான விண்ணப்பங் களை எந்த விலை கொடுத்தாவது நிராகரிக் க முயலுவார்கள்.

– takecameraaction

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: